II. சேமிப்புச் செலவுகள்
இந்தச் செலவுகள் உற்பத்தி நிகழ்முறைகளிலிருந்தே எழுந்து சுற்றோட்டத் துறையிலும் தொடர்கிறவையாக இருக்கலாம். இவை உற்பத்தித் திறனுள்ளவையே என்பது சுற்றோட்ட வடிவத்தால் மறைக்கப்பட்டு விடுகிறது. இதற்கு மாறாக சமுதாயத்தின் கண் கொண்டு நோக்குகையில், இவை செலவுகளாக மட்டும் இருக்கலாம்; உயிருள்ள உழைப்பு அல்லது பொருள் வடிவிலான உழைப்பை உற்பத்தித் திறனில்லாத முறையில் செலவிடுவதாக இருக்கலாம்; ஆனால் இதே காரணத்தால் இவை தனிப்பட்ட முதலாளிக்கு மதிப்பை உற்பத்தி செய்கிறவையாக இருக்கலாம்.
மதிப்பை கூடுதலாக்கும் உழைப்பு அனைத்தும் உபரி மதிப்பையும் கூடுதலாக்க முடியும்.; முதலாளித்துவ பொருளுற்பத்தி எப்போதுமே இப்படி கூடுதலாக்கவே செய்யும்.
ஒரு சரக்கின் பயன்-மதிப்பை உயர்த்தாமலே அதன் விலையை உயர்த்துகிற செலவுகள், ஆகவே சமுதாயத்தைப் பொறுத்த வரை உற்பத்தித் திறனற்ற செலவுகளாய் வகைப்படுத்த வேண்டிய செலவுகள் தனிப்பட்ட முதலாளியைப் பொறுத்த வரை செல்வப் பெருக்கத்துக்கான ஒர் ஆதாரமாகிவிடலாம்.
காப்பீட்டு நிறுமங்கள் தனிப்பட்ட முதலாளிக்கு ஏற்படும் இழப்புகளை முதலாளி வர்க்கத்தாரிடையே பகிர்ந்தளிக்கின்றன. இழப்புகள் இவ்விதம் பகிர்ந்து பரவலாக்கப் படுவதால், மொத்தச் சமுதாய மூலதனத்தைப் பொறுத்த வரை இவை இழப்புகளாகவே இருப்பது தடுக்கப்பட்டு விடுவதில்லை.
1. பொதுவாய்ச் சரக்கிருப்பு உருவாதல்
சுற்றை நிகழ்த்திக் கொண்டிருக்கும் நிலையில், இப்போது அதனை விற்க வேண்டும். அதாவது மீண்டும் பணமாக மாற்ற வேண்டும் என்ற நிலையில், ஆகவே தற்போதைக்கு அது சந்தையில் சரக்கு மூலதனமாகச் செயல்படுகிற நிலையில், அது இருப்பதாக அமைவதை சந்தையில் வேறு வழியின்றியும் எவர் விருப்பத்தையும் சாராமலும் நிகழ்கிற ஒன்றாகவே குறிப்பிட வேண்டும். விற்பனை எவ்வளவு துரிதமாக நடைபெறுகிறதோ மறுவுற்பத்தி நிகழ்முறை அவ்வளவு சரளமாய் நடைபெறுகிறது.
மூலதனம் இவ்விதம் அதன் சரக்கு-மூலதன வடிவில், ஆகவே சரக்கிருப்பின் வடிவில் இருப்பதால் செலவுகள் ஏற்படுகின்றன. உற்பத்தித் துறைக்குரிய செலவுகள் அல்லாததால் இவற்றை சுற்றோட்டச் செலவுகள் என்ற வகையில் சேர்க்க வேண்டும். இந்த சுற்றோட்டச் செலவுகள் சரக்குகளின் மதிப்பில் ஓரளவு சேர்ந்து சரக்குகளின் விலையை அதிகரிக்கச் செய்கிறவை.
ஆகவே, இந்தச் செலவுகளின் விளைவாக உழைப்பின் உற்பத்தித் திறன் குறைகிறது; குறிப்பிட்ட பயன் விளைவை பெறுவதற்குத் தேவையான மூலதனமும் உழைப்பும் அதிகமாகிவிடுகின்றன. ஆக இச்செலவுகள் திறனிலாச் செலவுகள் [unproductive costs] ஆகும்.
தொழிலதிபர், தேவைக்கேற்பவும் தேவைப்படும் போதும், ஒப்பளவில் சிறிது சிறிதாகவே தமது இருப்பைப் புதுப்பித்துக் கொண்டால் போதும் என்றாகிறது.
சமுதாய மூலதனத்தைப் பார்போமானால் இரு நேர்வுகளிலுமே ஒரே அளவு உற்பத்திப் பொருட்கள்தாம் இருப்பாய் அமைகின்றன.
ஓராண்டு காலத்துக்குத் தேவைப்படும் இருப்பின் அளவானது போக்குவரத்தின் வளர்ச்சிக்கேற்ப குறைகிறது.
2. முறையான சரக்கிருப்பு
ஒவ்வொரு சரக்கும், எனவே ஒவ்வொரு சரக்கு..மூலதனமும் ---- இதுவும் சரக்குதான், ஆனால் மூலதன-மதிப்பின் நிலவல் வடிவமாய் இருக்கும் சரக்கு ----- அதன் உற்பத்தித் துறையை விட்டு வெளிப்பட்டதும் திறனுடை நுகர்வுக்கோ சொந்த நுகர்வுக்கோ உடனடியாகச் செல்லாமல் இடையில் சந்தையில் காத்திருக்க நேருமாயின், அது சரக்கிருப்பைச் சேர்ந்த கூறாகி விடுகிறது. ஆகவே, உற்பத்தியின் பரிமாணம் மாறாதிருந்தால், சரக்கிருப்பானது (உற்பத்திப் பொருளின் சரக்கு வடிவத்தை இப்படி தனியாகப் பிரிந்து நிலைப்படுத்துவது) முதலாளித்துவ பொருளுற்பத்தியோடு கூட தானும் சேர்ந்து வளர்கிறது. இது இருப்பின் வடிவ மாற்றம்தான்; அதாவது உற்பத்தியையோ நுகர்வையோ நேரடி நோக்கமாகக் கொண்ட இருப்பு குறைவதால்தான் சரக்குகளின் வடிவிலான இருப்பு அதிகரிக்கிறது.
சமுதாயத்தின் மொத்த உற்பத்திப் பண்டத்துடன் ஒப்பிடுகையில் சரக்கிருப்பின் ஒப்பீட்டுப் பருமன் அதிகமாவதோடு, அதன் அறுதிப் பருமனும் அதிகமாகிறது என்றால், முதலாளித்துவப் பொருளுற்பத்தியோடு சேர்ந்து உற்பத்திப் பண்டத்தின் மொத்த அளவும் அதிகமாவதே காரணம்.
உற்பத்திப் பொருட்களாகிய இருப்பின் சமூக வடிவம் எதுவானாலும், இதனைக் கெடாது காக்கும் பொருட்டு செலவு செய்தாக வேண்டும். உற்பத்திப் பொருளை சேமித்து வைப்பதற்கு வேண்டிய கட்டிடங்கள், கலன்கள் முதலானவற்றுக்கு முதலீடுகள் அவசியமாகின்றன. மற்றும் சேதம் ஏற்படாமல் காப்பதற்காக உற்பத்திப் பொருளின் தன்மையைப் பொறுத்து அதிகமாகவோ குறைவாகவோ உற்பத்திச் சாதனங்களும் உழைப்பும் தேவைப்படுவதால் அவற்றுக்காகவும் முதலீடுகள் அவசியமாகின்றன. இருப்பானது சமுதாய வழியில் எந்த அளவுக்கு குவிப்படைந்திருக்கிறதோ, ஒப்பளவில் இச்செலவுகள் அந்த அளவுக்கு குறைகின்றன. இப்படி இந்த முதலீடுகளாகச் செலவாவது எப்போதுமே சமூக உழைப்பின் ஒரு பகுதியே ஆகும்.
இவை உற்பத்திப் பண்டத்தின் ஆக்கத்தில் சேருகிறவை அல்ல என்பதால், உற்பத்திப் பண்டத்திலான குறைப்புகள் ஆகின்றன. சமுதாயச் செல்வத்தின் திறனிலாச் செலவுகள் என்றாலும் இவை அவசியச் செலவுகள் ஆகும்.
பண வைப்பு ஒன்று உருவாகாமல் எப்படி பணம் சுற்றோட்டத்தில் செல்ல முடியாதோ, அதேபோல் சுற்றோட்டத்தில் ஒரு தேக்கம் ஏற்படாமல் இருப்பு என்பதாய் ஒன்று இருக்க முடியாது.
விற்பனையாளர் தமது சரக்கை சீக்கிரமாய் விற்பதில்தான் குறியாய் இருக்கிறார். விற்பனையிலிருந்து அதை அவர் விலக்கி வைப்பாராயின், அது சரக்கிருப்பின் உள்ளியல் கூறாகுமே தவிர உள்ளபடியான கூறாக முடியாது. சரக்கானது அவருக்கு எப்போதுமே பரிவர்த்தனை மதிப்பின் உறைவிடமே அன்றி வேறல்ல. ஆகவே அது தனது சரக்கு வடிவத்தைக் களைந்து விட்டு பண வடிவம் பூணுவதன் மூலமும் அப்படிச் செய்த பிற்பாடும்தான் இத்தகைய உறைவிடமாகச் செயல்பட முடியும்.
சரக்கைப் பொறுத்த வரை, அதனை நாம் தனிப்பட்ட சர்க்காகக் கருதினாலும் சரி, சமுதாய மூலதனத்தின் அடக்கக் கூறாக கருதினாலும் சரி, இருப்பாக அமைவதற்கு ஆகும் செலவுகளை அதன் உற்பத்தியாளர் ஏற்றாலும் ஒன்றுதான், வரிசையாக பல வணிகர்கள் ஏற்றாலும் சரிதான்.
இயல்பான இருப்பும் இயல்பற்ற இருப்பும் வடிவத்தில் வேறுபடாததாலும், இரண்டுமே சுற்றோட்டத்தில் ஏற்படும் அடைப்புகளாய் இருப்பதாலும் குழப்படியை உண்டாக்குகின்றன. உற்பத்தியின் இயக்கிகளே ஏமாற நேர்கிறது.
கடன்..செலாவணியின் வளர்ச்சியானது மெய்யான இயக்கம் புலனாகாத படி மருமத் திரையிடுவதால் இப்படித் தவறாக கருத மேலும் அதிக வாய்ப்புள்ளது.
III. போக்குவரத்துச் செலவுகள்
சரக்குச் சுற்றோட்டம் இல்லாமலே, ஏன். உற்பத்திப் பொருட்களின் நேரடிப் பரிவர்த்தனை இல்லாமலும் கூட, உற்பத்திப் பொருட்களின் போக்கு வரத்து நடைபெற முடியும். இடம் விற்கிற வீடு சரக்காக சுற்றோட்டத்தில் சென்ற போதிலும், இடம் பெயர்ந்து செல்வதில்லை.
இங்கு இடம் விட்டு இடம் செல்வது சரக்குகளின் உடைமையிலான உரிமைப் பத்திரமே தவிர சரக்குகள் அல்ல.
போக்குவரத்தால் உற்பத்திப் பொருட்கள் அளவில் அதிகமாவதில்லை. அவற்றின் இயற்கையான இயல்புகளில் ஏற்படக்கூடிய மற்றம் எதுவும், ஒரு சில விதிவிலக்குகளைத் தவிர்த்து, போக்குவரத்தால் ஏற்படுவதில்லை. விரும்பத்தக்க பயனை அது விளவிப்பதாகவும் இல்லை. தவிர்ப்பதற்கு வழி ஏதும் இல்லாத தீமையாய் அதை ஏற்க வேண்டி வருகிறது.
போக்குவரத்தானது சரக்குகளுக்கு சேர்த்திடும் மதிப்பின் அறுதிப் பருமன். மற்ற நிலைமைகள் மாறாதிருக்க, போக்குவரத்துத் தொழிலின் உற்பத்தித் திறனுக்கு எதிர் விகிதத்திலும், பயணம் செய்யும் தூரத்துக்கு நேர் விகிதத்திலும் உள்ளது.
மற்ற நிலைமைகள் மாறாதிருக்க, போக்க்குவரத்துச் செலவுகள் சரக்குகளின் விலைகளோடு சேர்ந்திடும் மதிப்பின் மதிப்புப் பகுதி, அவற்றின் பரிமாணத்துக்கும் எடைக்கும் நேர் விகிதத்திலும், அவற்றின் மதிப்புக்கு எதிர் விகிதத்திலும் இருப்பதாகும். ஆனால் பல்வேறு நிலைமைகளாலும் இதில் திருத்தம் ஏற்படலாம். எடுத்துக் காட்டாக, பண்டங்கள் எந்த அளவுக்கு உடையவும், அழியவும், வெடிக்கவும் கூடியனவாய் இருக்கின்றன என்பதைப் பொறுத்து, போக்குவரத்தின் போது முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளூம் எனவே உழைப்பு, உழைப்புச் சாதனங்கள் செலவீடும் அதிகமாகவோ குறைவாகவோ தேவைப் படுகின்றன.
முதலாளித்துவப் பொருளுற்பத்தி முறையானது போக்குவரத்து மற்றும் தொடர்புச் சாதனங்களை வளர்ச்சி பெறச் செய்வதன் மூலமும், அதே போல் போக்குவரத்து ஒன்று குவியச் செய்வதன் மூலமும் --- அதாவது அதன் அளவு வீதத்தை அதிகமாக்குவதன் மூலமும் ---- தனிப்பட்ட சரக்கிற்கான போக்குவரத்துச் செலவுகளைக் குறைக்கிறது.

No comments:
Post a Comment