சரக்குகள் உபரி-மதிப்பை உற்பத்தி செய்து முடித்த மூலதன-மதிப்புக்கான பணிவழிப்பட்ட நிலவல் வடிவமாய் சரக்கு-மூலதனம் (commodity capital) ஆகின்றன. சரக்கு உற்பத்தியானது சமுதாயம் முழுவதிலும் முதலாளித்துவ முறையில் நடைபெற்றால் எல்லா சரக்குகளும் ஆரம்பத்திலிருந்தே சரக்கு-மூலதனத்தின் கூறுகளாய் இருக்கும்.
சரக்கு வடிவிலான மூலதனம் சரக்காகச் செயல்படவேண்டும். மூலதனமாய் அமையும் பண்டங்கள் விசேஷமாக சந்தைக்கென்றே உற்பத்திச் செய்யப்படுகிறவை. அவற்றை விற்றுப் பணாமாக உருமாற்ற வேண்டும். எனவே அவற்றுக்கு C - M என்னும் நிகழ்முறை நடைபெற்றாக வேண்டும்.
இந்த சரக்கின் விலை C - M என்ற விற்றலின் மூலமாக பணமாக வரப்பெறுவதாகக் கொள்வோம். சரக்குச் சுற்றோட்டச் செயல்கள் யாவற்றிலும் மிகச் சாதாரணமான இச்செயலை அதேபோது மூலதனப் பணியாக்குவது வடிவத்தில் ஏற்பட்டுள்ள மாற்றம்தான். வடிவில் முன்பு சரக்காக இருந்தது, இபோது பணமாகியிருக்கிறது. இவ்வாறு M - C என்னும் முதல் கட்டத்துக்கும் C - M என்னும் கடைசி கட்டத்துக்குமிடையே மிகப் பெரிய வேறுபாடு இருப்பது தெளிவகவே தெரிகிறது. அங்கே முன்னீடு செய்த பணம் பண-மூலதனமாகச் செயல்படுகிறது; ஏனென்றால் சுற்றோட்டத்தின் வாயிலாக அது குறிப்பிட்ட பயன்-மதிப்புள்ள சரக்குகளாக உருமாற்றம் பெறுகிறது. இங்கே, சரக்குகள் அவற்றின் சுற்றோட்டம் ஆரம்பமாகு முன்னர் உற்பத்தி நிகழ்முறையிலிருந்து மூலதனத் தன்மை வாய்ந்தனவாய் வெளிவரும் அளவுக்கு மட்டுமே மூலதனமாகப் பயன்பட முடியும்.
உற்பத்தி நிகழ்முறையின் போது உழைப்பாளர்கள் உபரி-உற்பத்தியைப் படைக்கிறார்கள்.முதலாவதாக, உற்பத்தி செய்யப்பட சரக்கில் உற்பத்தியின் போது நுகரப்பட்ட திறனுடை-மூலதனமாகிய P இன் மதிப்பு அடங்கியிருக்கிறது. இரண்டாவதாக, உபரி-மதிப்பும் அடங்கியுள்ளது. இப்போது சரக்கின் மதிப்பு C, இந்த Cஇல் ஏற்பட்ட பெருக்கம் ஆகிய இரண்டின் கூட்டுத் தொகைக்குச் சமம். இந்த பெருக்கத்தை cஎனக் குறிக்கலாம், ஏனெனில் இந்தப் பெருக்கம் ஆரம்பத்திலிருந்தே Cஐப்போல் அதே சரக்கு-வடிவில்தான் இருக்கிறது. ஆகவே இப்போது அதன் மதிப்பை C+c=C' என்பது குறிக்கிறது.
வேறெந்தC இன் மதிப்புப் பருமனைபயும் போலவே, இந்த மதிப்புப் பருமனும் இதில் உருக்கொண்ட உழைப்பின் அளவாலேயே நிர்ணயிக்கப்படுகிறது. அதன் ஒப்பீட்டு மதிப்புப் பருமனே, அதாவது அதன் உற்பத்தியின் போது நுகரப்பட்ட மூலதனமான Pஇன் மதிப்புப் பருமனுடன் ஒப்பிடுகையில் அதற்குள்ள மதிப்புப் பருமனே Cஐ C'ஆக மாற்றுகிறது. இந்த Pஇன் மதிப்பும், அத்துடன் கூடவே திறனுடை-மூலதனம் வழங்கிடும் உபரி-மதிப்பும் C'இன் மதிப்பில் அடங்கியுள்ளன. C'இன் மதிப்பு மூலதன-மதிப்பின் மதிப்பைக் காட்டிலும் cஎன்னும் உபரி-மதிப்பின் அளவு கூடுதலாய், மிகுதியாய் இருக்கிறது.
முதலாளித்துவப் பொருளுற்பத்தி நிகழ்முறையின் உற்பத்திப் பொருளாய் இருப்பதால்தான் அது இப்படி ஆகிறது. C' ஆனது ஒரு மதிப்புறவைத் தெரிவிக்கிறது; உற்பத்தி செய்யப்படும் சரக்குகளின் மதிப்பு அவற்றின் உற்பத்திக்காக செலவிடப்படும் மூலதனத்தின் மதிப்போடு கொண்டுள்ள உறவைத் தெரிவிக்கிறது; அதாவது இச்சரக்குகளின் மதிப்பு மூலதன மதிப்பாலும் உபரி மதிப்பாலும் ஆனது என்பதை தெரிவிக்கிறது.
முன்னிலும் பெரிதாகிவிட்ட இந்த மூலதனம் சரக்கு-மூலதனமாகவே இருக்கும் வரை, ஒய்ந்திருக்கிறது. சரக்கு-மூலதனம் உற்பத்திப் பொருட்களையோ மதிப்பையோ படைப்பதில்லை. குறிப்பிட்ட மூலதன-மதிப்பு வெகுவாய் வேறுபடும் அளவில் உற்பத்திப் பொருட்களையும் மதிப்பையும் படைக்கக் கூடியது.
எவ்வளவு விரைவாய் சரக்கு விற்கப்படுகிறது என்பதைப் பொறுத்து, மறுவுற்பத்தியின் அளவு பெருகவோ குறுகவோ செய்கிறது.
C' என்பது C+c என்பதற்குச் சமம். C ஆனது திறனுடை-மூலதனமான P இன் மதிப்புக்குச் சமம்; இது உற்பத்தி அடிக்கூறுகளை விலைக்கு வாங்குவதற்காக M - C என்னும் கட்டத்தில் முன்னீடு செய்யப்பட்ட பணமாகிய Mஇன் மதிப்புக்குச் சமம். உபரி உற்பத்தியாகிய cஇன் பண வடிவிலான தெரிவிப்பே m . C' -- M' = (C+c) - (M+m). ஆகவே M - C ... P...C' - M' என்னும் சுற்றினை அதன் விரிவடைந்த வடிவில் பின்வருமாறு எழுதலாம்: M - C< L / mp ... P ... (C+c) - (M+m).
முதல் கட்டத்தில் முதலாளி நுகர்வுப் பண்டங்களை (articles of consumption) முறையான சரக்குச் சந்தையிலிருந்தும் உழைப்புச் சந்தையிலிருந்தும் பெறுகிறார். மூன்றாவது கட்டத்தில் அவர் சரக்குகளை சந்தையினுள் திருப்பிச் செலுத்துகிறார்; ஆனால் ஒரேயொரு சந்தையினுள் மட்டுமே, சரக்குச் சந்தையினுள் மட்டுமே செலுத்துகிறார். முதலில் அவர் M என்னும் மதிப்பை அதனுள் செலுத்தி அதற்கு சமதையான Cஐ அதனிடமிருந்து பெற்றார்: இப்பொழுது C+cஐ அதனுள் செலுத்தி விட்டு அதற்குச் சமதையான M+mஐ அதனிடமிருந்து பெருகிறார்.
அவர் இந்தக் கூடுதலான மதிப்பைச் சந்தையினுள் செலுத்த முடிவதற்கு என்ன காரணம்? உற்பத்தி நிகழ்முறையில் உழைப்புச் சக்தியைச் சுரண்டி உபரி-மதிப்பை (உற்பத்திப் பொருளின் ஈவுப் பகுதியாக [aliquot part] உபரி-உற்பத்தியின் உருவில் தெரிவிக்கப்படுவதை) படைத்ததே காரணம்.
உபரி-மதிப்பான c உற்பத்தி நிகழ்முறையின் போதுதான் அவதரித்தது. அது இப்போதுதான் முதல் தடவையாக சரக்குச் சந்தையினுள் நுழைகிறது.; சரக்குகளின் வடிவில் நுழைகிறது. சரக்கு வடிவமே சுற்றோட்டத்தில் அதன் முதல் வடிவம்; எனவே c - m என்னும் செயல்தான் அதன் முதல் சுற்றோட்டச் செயல் அல்லது முதல் உருமாற்றம் ஆகும்; இனி இதன் எதிர்நிலைச் செயல் அல்லது தலைகீழ் உருமாற்றமான m - c என்பதால் நிறைவு செய்தாக வேண்டும்.
C' - M' என்னும் இதே சுற்றோட்ட செயலின் மூலம் மூலதன-மதிப்பு C நிகழ்த்தும் சுற்றோட்டம் வேறுவிதமானது. அது சுற்றோட்டத்தில் முதலில் M - C அடுத்து C - M ஆகிய இரு எதிர்நிலைக் கட்டங்களைக் கடந்துள்ளது; திரும்பவும் சுழல் இயக்கத்தைத் தொடங்குவதற்கு வேண்டிய வடிவத்திற்கு திரும்பி வந்துள்ளது. உபரி-மதிப்புக்கு சரக்கு வடிவத்திலிருந்து பண வடிவத்துக்கு மாறுவதாகிய அதன் முதல் உருமாற்றமாக அமைவது, மூலதன-மதிப்புக்கு அதன் ஆரம்ப வடிவமான பண வடிவத்துக்குத் திரும்பிச் செல்லும் மாற்றமாக அல்லது மீட்டுருமாற்றமாக (retransformation) அமைகிறது.
முதலாவதாக, மூலதன-மதிப்பை அதன் ஆரம்ப வடிவமான பண வடிவத்துக்கே முடிவில் திரும்பச் செய்வது சரக்கு-மூலதனத்தின் பணியாகும். இரண்டாவதாக, உபரி-மதிப்பு முதன்முதலாய் உருமாற்றம் பெற்று அதன் ஆரம்ப வடிவமான சரக்கு வடிவத்திலிருந்து பண வடிவத்துக்கு மாறும் படி செய்வதும் இப்பணியில் அடங்குகிறது.
ஈடேற்றம் பெற்ற சரக்கு-மூலதனம் C+c இப்போது முதலாளியின் கையில் M+m என்ற வடிவில் இருக்கிறது. இப்போது மூலதன-மதிப்பும் உபரி-மதிப்பும் சர்வப்பொது சமதை வடிவமான பண வடிவத்தில் இருக்கின்றன.
இந்நிகழ்முறையின் ஆரம்ப வடிவமும் இறுதி வடிவமும் M என்னும் பண-மூலதன வடிவத்தில் இருப்பதால் இவ்வகைச் சுற்றோட்ட நிகழ்முறையை பண-மூலதனச் சுற்று என்கிறோம். முடிவில் மாற்றம் பெறுவது முன்னீடு செய்யப்பட்ட மதிப்பின் பருமன் தானே தவிர, அதன் வடிவமல்ல.
M ஆக இருந்தது இப்போது M' ஆகிவிட்டது. அளவில் வேறுபாடு உள்ளது. இந்த வேறுபாடு M ... M' என்பதால் தெரிவிக்கப்படுகிறது; சுற்றின் இரு முனைகளும் அளவில் இவ்வாறு வேறுபடுகின்றன. இடையில் வரும் மூன்று புள்ளிகள் சுற்றின் இயக்கத்தைக் குறிக்கின்றன. M' > M; M' - M = s, அதாவது உபரி-மதிப்பு. ஆனால் என்னும் இந்தச் சுழல் இயக்கத்தின் விளைவாக இப்போது இருப்பது M' மட்டுமே. விளைபயன் மட்டும் இருக்க, அதனை உருவாக்கிய நிகழ்முறை மறைந்து வருகிறது. இப்போது அதனை தோற்றுவித்த இயக்கத்திலிருந்து சுயேச்சையாகத் தானாகவே நிலவுகிறது. அந்த இயக்கம் போய் விட்டது; அதனிடத்தில் M' இருக்கிறது.
ஆனால் M' என்பது M+m ஆகும். அதே போது இது பண்புவழி உறவு ஒன்றையும் குறிக்கிறது. இந்தப் பண்புவழி உறவு ஒரே தொகையின் பகுதிகளிடையிலான உறவாகவே, எனவே அளவு வழி உறவாகவே நிலவுகிறது. முன்னீடு செய்யப்பட்ட மூலதனமாகிய M இப்போது ஆரம்ப வடிவத்துக்கே திரும்பியுள்ளது என்றாலும் ஈடேற்றம் பெற்ற மூலதனமாக நிலவுகிறது. அது தன்னைக் காப்பாற்றி கொண்டிருப்பதோடு கூட, m என்பதிலிருந்து மூலதனம் என்ற முறையில் தன்னை வேறுபடுத்திக் கொள்வதன் மூலம் மூலதனமாக ஈடேற்றம் பெற்றுள்ளது. இந்த mஉடன் அதற்குள்ள உறவு தன்னுடைய அதிகரிப்புடன், தன்னுடைய விளைவுடன், தான் பெற்றெடுத்த பெருக்கத்துடன் உள்ள உறவே ஆகும். மதிப்பைப் படைக்கும் மதிப்பாக அது ஈடேற்றம் பெறுகிறது. அதனால் மூலதனமாக ஈடேற்றம் பெறுகிறது. M' என்பது மூலதன உறவாக நிலவுகிறது.Mஇனி வெறும் பணமாக இருக்கவில்லை, வெளிப்படையாகவே பண-மூலதனமாகப் பணி புரிகிறது. தற்பெருக்கமடைந்த மதிப்பாக, ஆகவே தற்பெருக்க இயல்புடைய அதாவது தன்னைக் காட்டிலும் அதிகமான மதிப்பை உண்டாக்கும் இயல்புடைய மதிப்பாகத் தெரிவிப்பு பெறுகிறது. M ஆனது அதனால் உண்டாக்கப்பட்ட, அதனை காரணமாகக் கொண்டு உருவான, அதனை ஆதாரமாகக் கொண்டு விளைந்த M'இன் மறு பகுதியோடு அதற்குள்ள உறவின் பயனாய் மூலதனமாகிறது. இவ்வாறு M' ஆனது அதனுள் வகை பிரிக்கப்படுகிற, பணி வழியில் (கருத்தியலாக) வேறுபடுத்திக் காட்டப்படுகிற மூலதன உறவைத் தெரிவிக்கிற மதிப்புகளின் தொகையாக விளங்குகிறது.
ஆனால், இந்த மூலதன உறவு ஒரு விளைவாக மட்டுமே --- எந்நிகழ்முறையின் விளைவோ அந்நிகழ்முறை இடையிலே வராதபடி --- தெரிவிக்கப்படுகிறது.
சரக்குகளிடையிலான எல்லா வேறுபாடுகளும் பண வடிவத்தில் மறைந்து போகின்றன; இந்த பணத் தொகை உதித்து உருவாகிய கதையின் இடைநிலைக் கண்ணிகள் எல்லாம் இத்தொகையின் இப்போதைய நிலவலில் மறைந்து விடுவதாலும், மூலதனத்தின் வெவ்வேறு அடக்கக் கூறுகள் இடையிலான பிரத்தியேக வேறுபாட்டுத் தடங்கள் யாவும் உற்பத்தி நிகழ்முறையின் போது ஒழிந்து போவதாலும், முன்னீடு செய்யப்பட்ட மூலதனமாகிய அசல் தொகை என்னும் கருத்தளவிலான ஒரு வடிவத்துக்கும், கூடுதல் மதிப்புக்கும் இடைப்பட்ட வேறுபாட்டைத் தவிர வேறு ஏதும் எஞ்சவில்லை. ஆகவே, ஈடேற்றம் பெற்ற மூலதனத்தின் பணத் தெரிவிப்பானது, இந்நிகழ்முறையின் முடிவில் மூலதன உறவின் ஒவ்வாத் தெரிவிப்பாக அமைகிறது.
Cஐயும் cஐயும் ஒருபடித்தான ஒரே சரக்குத் திரளினது மதிப்பின் விகிதாச்சாரப் பகுதிகளாக மட்டுமே கொண்ட C' ஆனது அது Pஇன் நேரடி உற்பத்திப் பொருள் என்பதைக் காட்டி விடுகிறது; ஆனால் சுற்றோட்டத்திலிருந்து நேரடியாக வரப்பெற்ற வடிவமான M'இல் Pஉடனான நேரடி உறவு மறைந்து போகிறது.
M' என்பது M ... M' என்னும் இயக்கத்தின் விளைவினை தெரிவிப்பதாக இருக்கும் வரை, அசல் தொகைக்கும் கூடுதல் தொகைக்கும் இடையிலான ஒவ்வா வேறுபாட்டைத் தன்னுள் கொண்டிருக்கிறது; M'ஆனது மீண்டும் பண மூலதனமாக முனைப்புடன் செயல்படத் தொடங்கியவுடனே --- இவ்வேறுபாடு ஒழிந்து போகிறது. ( M' இப்போது M ஆகச் செயல்பட்ட போதிலும்) பண-மூலதனச் சுற்று Mஇலிருந்துதான் தொடங்க முடியும்; ஒரு போதும் மூலதன உறவின் தெரிவிப்பாகத் தொடங்க முடியாது. M' ஆனது முன்னிலும் அதிகப் பணமாகும். அதிக மூலதன-மதிப்பாகும்; இப்போது அதன் இரு அடக்கக் கூறுகளுக்கும் இடையிலான உறவு மறைந்து விடுகிறது.
மூலதனத் திரட்டலானது, யாவற்றுக்கும் மேலாய், ஓயாமல் புதுப்பிக்கப்படும் பண-மூலதன முன்னீடுகள் காலவட்ட முறையில் அடையும் பெருக்கமாகத் தன்னை வெளிப்படுத்திக் கொள்கிறது.
M+m என்பதற்குச் சமமான M' என்பது மூலதனத்தின் ஒவ்வா வடிவமாக இருந்தாலும், அது ஈடேற்றம் பெற்ற வடிவிலுள்ள --- பணத்தை உண்டாகிய பணத்தின் வடிவிலுள்ள --- பண-மூலதனமே ஆகும்.
மூலதன-மதிப்பாகிய M அதற்குப் பிறந்த உபரி-மதிப்பாகிய m ஆகியவற்றாலான M' தற்பெருக்கமடைந்த மூலதன-மதிப்பைக் குறிக்கிறது --- இதுவே மூலதனச் சுற்று முழுமையின் நோக்கமும் விளைவுமாகும், அதன் பணியாகும். M' ஆனது இந்த முடிவைப் பண வடிவில் தெரிவிப்பதற்கு, ஈடேற்றம் பெற்ற பண-மூலதனமாகத் தெரிவிப்பதற்கு என்ன காரணம்? அது மூலதனத்தின் பண வடிவமாக, பண-மூலதனமாக இருப்பதல்ல காரணம்; அது பண-மூலதனமாக, பண வடிவிலுள்ள மூலதனமாக இருப்பதே காரணம்; மூலதனம் இந்த நிகழ்முறையைத் தொடங்கியதே காரணம்; அது பண வடிவில் முன்னீடு செய்யப்பட்டதே காரணம்.
பண-மூலதனம், சரக்கு-மூலதனம் இவை இரண்டுக்கும் உள்ள பொது அமிசம் என்னவென்றால், இரண்டுமே மூலதனத்தின் நிலவல் வடிவங்கள் என்பதே. ஒன்று பண வடிவிலான மூலதனம், ஒன்று சரக்கு வடிவிலான மூலதனம். ஆகவே அவற்றின் பிரத்தியேகப் பணிகளிடையிலான வேறுபாடுகள் என்பவை பணத்தின் பணிகளுக்கும் சரக்குகளின் பணிகளுக்கும் இடையிலான வேறுபாடுகளாகத்தான் இருக்க முடியும். முதலாளித்துவப் பொருளுற்பத்தி நிகழ்முறையின் நேரடி விளைவாகிய சரக்கு-மூலதனம் அதன் தோற்றுவாயை நினைவுபடுத்துவதாய் இருக்கிறது; ஆகவே பண-மூலதனத்தைக் காட்டிலும் அதிக அளவுக்கு அறிவுக்கொத்த, புரிந்து கொள்ளத்தக்க வடிவமாய் திகழ்கிறது; பண-மூலதனத்திலோ முதலாளித்துவப் பொருளுற்பத்தி நிகழ் முறையின் தடயங்கள் யாவும் மறைந்து போகின்றன --- பொதுவாகச் சரக்குகளின் தனிவிதப் பயன்பாட்டு வடிவங்கள் யாவும் பணத்தில் மறைந்து போகின்றனவே அது போல.