பொதுவான சரக்குச் சுற்றோட்டத்தில் நிகழும் செயலாகிய இது, அதே போது ஒரு தனிப்பட்ட மூலதனத்தின் சுயேச்சையான சுற்றில் குறிப்பிட்ட பணி புரியும் ஒரு பகுதியும் ஆகிறது. இப்படி ஆவதற்கு செயலின் வடிவம் அல்ல பிரதான காரணம்; செயலின் உள்ளடக்கப் பொருட்களே, பணத்துக்கு பதிலாக வரப்பெறும் சரக்குகளது பிரத்தியேகப் பயனுடைமையே பிரதான காரணம். இந்த சரக்குகள் ஒரு புறம் உற்பத்திச் சாதனங்களாகவும் (means of production) மறுபுறம் உழைப்புச் சக்தியாகவும் இருப்பவை, இவை சரக்கு உற்பத்திக்குப் பொருள் வடிவிலும் ஆள் வடிவிலும் அவசியமான காரணிகள் ஆகின்றன.
உழைப்புச் சக்தியை L என்றும், உற்பத்திச் சாதனங்களை mp என்றும் குறிப்போம். உருமாறுவதால் வரப்பெறும் சரக்குத் தொகுதியின் இந்த பண்புவழிப் பிரிவினை ஒரு புறமிருக்க M --- C< L / mp என்னும் சூத்திரம் மிக அலாதியான அளவுவழி உறவையும் குறிப்பதாகும்.
உழைப்புச் சக்தியின் மதிப்பு (value) அல்லது விலை (price) அதனைச் சரக்காக விற்க முன் வருகிற அதன் உடமையாளருக்குக் கூலியின் (wages) வடிவில் செலுத்தப்படுகிறது. அதாவது உபரி-உழைப்பு (surplus-value) உள்ளிட்ட உழைப்பின் கூட்டளவுக்கான விலையாகச் செலுத்தப்படுகிறது.
அப்படியானால் M --- C< L / mp என்பது குறிப்பிட்ட ஒரு பணத்தொகைக்கு ஈடான உற்பத்திச் சாதனங்கள் மற்றும் உழைப்புச் சக்தியின் தொகைக்குப் பரிவர்த்தனை செய்து கொள்ளப்படுவதைக் காட்டும் விதத்தில் பண்புவழி உறவை (qualitative relation) தெரிவிப்பதோடு கூட உழைப்புச் சக்திக்காகச் செலவிடப்படும் பணப் பகுதியான Lக்கும் உற்பத்திச் சாதனங்களுக்காகச் செலவிடப்படும் பகுதியான mpக்கும் இடையிலான அளவுவழி உறவையும் (quantitative relation) தெரிவிப்பதாகும். குறிப்பிட்ட எண்ணிக்கையிலான தொழிலாளர்கள் செலவிட வேண்டிய மிகுதி உழைப்பின், அதாவது உபரி-உழைப்பின் அளவுதான் ஆரம்பத்திலிருந்தே இந்த உறவை நிர்ணயிக்கிறது.
பல்வேறு தொழிற் கிளைகளிலும் மிகுதி உழைப்பைப் பயன்படுத்திக் கொள்ள உறபத்திச் சாதனங்கள் வடிவில் எவ்வளவு கூடுதல் மதிப்பு தேவைப்படுகிறது என்பது இங்கு முக்கியம் அன்று. உற்பத்திச் சாதனங்களுக்காக, அதாவது M - mp மூலம வாங்கப்படும் உற்பத்திச் சாதனங்களுக்காகச் செலவிடும் பணப் பகுதி முற்றிலும் போதுமானதாய் இருக்க வேண்டும். உற்பத்திச் சாதனங்களின் அளவு உழைப்பின் அளவை உட்கிரகிக்கப் போதுமானதாய், அந்த உழைப்பினால் உற்பத்திப் பண்டங்களாக (products) மாற்றப் போதுமானதாய் இருக்க வேண்டும். கைவசமுள்ள உற்பத்திச் சாதனங்கள் போதாவிட்டால், உழைப்புச் சக்தியை வாங்குபவர் தமக்குக் கிடைக்கக் கூடிய மிகுதி உழைப்பைப் பயன்படுத்திக் கொள்ள முடியாது.
M - C< L / mp என்னும் செயல் முடிக்கப் பெறுகிறது, வாங்குபவரிடம் இப்போது இருப்பது என்ன? பயனுள்ள பண்டம் ஒன்றின் உற்பத்திக்கு வேண்டிய உற்பத்திச் சாதனங்களும் உழைப்புச் சக்தியும் மட்டுமல்ல, இவற்றுக்கும் கூடுதலானவை அவரிடம் உள்ளன: உழைப்புச் சக்தியை இயங்க வைப்பதற்கான ஆற்றல் தேவையான அளவுக்கும் அதிகமாய், அதாவது இந்த உழைப்புச் சக்தியின் மதிப்பினது மாற்றீட்டுக்கு (replacement) வேண்டியதை விடவும் அதிக அளவிலான உழைப்பு அவர் வசம் உள்ளது. உற்பத்தி.. அடிக்கூறுகளின் மதிப்பை விடக் கூடுதலான மதிப்புடைய பண்டங்களை உற்பத்திச் செய்வதற்கு வேண்டிய உற்பத்திக் காரணிகள் (factors of production) அவர் வசம் உள்ளன. அதாவது, உபரி-மதிப்பைத் தம்முள் கொண்ட சரக்குத் திரளைத் தயாரிப்பதற்குத் தேவையான உற்பத்திக் காரணிகள் அவரிடம் இருக்கின்றன. பண வடிவில் அவர் முன்னீடு செய்த மதிப்பு இப்போது மூக்கும் முழியுமாய் தசையுரு (bodily form) எடுத்துள்ளது. இங்கே மதிப்பையும் உபரி-மதிப்பையும் படைக்க வல்லதாகிய மூலதனத்தின், அதாவது திறனுடை-மூலதனத்தின் (productive capital) நிலை அல்லது வடிவில் உள்ளது. இவ்வடிவில் இருக்கும் மூலதனத்தை P என்போம்.
மூலதன-மதிப்பு (capital-value) என்ற முறையில் Pஉம் Mஉம் ஒன்றுதான்; நிலவல் வடிவம் மட்டுமே வேறுபடுகிறது. அதாவது M என்பது பணத்தின் நிலையில் அல்லது வடிவில் உள்ள் மூலதன மதிப்பு ஆகும் --- பண-மூலதனம் ஆகும்.
M - C< L / mp என்பது, அல்லது அதன் பொது வடிவமான M-C என்பது, விலை கொடுத்து சரக்கு வாங்கும் செய்ல்களின் தொகுதியாகும், பொதுவான சரக்கு சுற்றோட்டத்தில் நடைபெறும் செயலாகும். ஆகவே இது அதுபோது --- மூலதனத்தின் சுயேச்சையான சுற்றில் ஒரு கட்டம் என்ற முறையில் --- பண வடிவிலுள்ள மூலதன-மதிப்பு உற்பத்தித் திறனுள்ள வடிவத்தை அடையும் உருமாற்றம் ஆகும். சுருங்கச் சொன்னால், பண-மூலதனமாக இருப்பது திறனுடை-மூலதனமாக உருமாறுவதை இது குறிக்கிறது.
மூலதனம் பண-மூலதனத்தின் வடிவிலுள்ள போது அது பணத்தின் பணிகளை ஆற்றக் கூடியதாய் இருக்கிறது. இங்கு நமது உதாரணத்தில் அது சர்வபொது வாங்கற் சாதன (universal means of purchase) பணிகளையும் சர்வப் பொதுக் கொடுப்புச் சாதன (universal means of payment) பணிகளையும் ஆற்றக் கூடியதாய் இருக்கிறது.
பண மூலதனத்துக்கு உள்ள இந்த ஆற்றல் அது பணமாக இருப்பதிலிருந்து வருவதுதானே தவிர, மூலதனமாக இருப்பதிலிருந்து வருவதன்று. பணப் பணிகள் மூலதனப் பணிகளாக மாறுவது எதனால்? பணம் இங்கே சரக்குகளாக மாறுகிறது.. இச்சரக்குகளின் தொகுதி திறனுடை மூலதனத்தின் தசையுருவைக் குறிக்கிறது; ஏற்கனவே இது முதலாளித்துவப் பொருளுற்பத்தி நிகழ்முறையால் விளையும் பயனை உள்ளுறை நிலையில் தன்னுள் கொண்டுள்ளது.
M - L என்பது பண-மூலதனம் திறனுடை-மூலதனமாக மாற்றம் பெறுவதில் தனிப் பெரும் நிகழ்முறையாகும். ஏனென்றால், பண வடிவில் முன்னீடு செய்யப்படும் மதிப்பானது மூலதனமாக, அதாவது உபரி..மதிப்பை உற்பத்தி செய்கிற மதிப்பாக மெய்யாகவே மாற்றம் பெருவதற்கு இது இன்றியமையாத நிபந்தனை ஆகிறது.
பொதுவாக M - L ஆனது முதலாளித்துவ பொருளுற்பத்தி முறைக்குரிய தனிக் குணமாகக் கருதப்படுகிறது. ஆயினும் இப்படிக் கருதப்படுவதற்கு மேற்கூறியது அல்ல காரணம். மாறாக அதன் வடிவம் காரணமாகவே அது இப்படி கருதப்படுகிறது. ஏனெனில் கூலி வடிவிலான பணம்தான் உழைப்பினை வாங்குகிறது. பணப் பொருளாதாரத்துக்கு இதுதான் அடையாளக் குறி.
மதிப்பைப் படைப்பது உழைப்பே என்பதால் உழைப்புக்கு மதிப்பு ஏதும் இருக்க முடியாது, ஆகவே குறிப்பிட்ட அளவுடைய உழைப்பு மதிப்புடையதாகி, குறிப்பிட்ட அளவுப் பணத்துக்கு சமதை என்ற முறையில் அதன் விலையில் தெரிவிக்கப்படுதலும் முடியாத காரியம். இருப்பினும் நமக்குத் தெரியும்: மாறுவேடம் பூண்ட ஒரு வடிவமே கூலி; உதாரணமாக, ஒரு நாளுக்கான உழைப்புச் சக்தியின் விலை அந்த உழைப்புச் சக்தி ஒரு நாளில் இயக்குகிற உழைப்பின் விலையாக வேடம் பூண்டு வெளிப்படுகிறது.
நெடுங்காலத்துக்கு முன்பே, M ஆனது பண-மூலதனமாக உருமாற்றம் பெறாமலே, பொருளாதார அமைப்பின் பொதுவான தன்மையில் எந்த மாற்றமும் இல்லாமலே, சேவகள் என்பனவற்றை வாங்குகிறவராக பணம் தோற்றமளித்து வந்திருக்கிறது.
உழைப்புச் சக்தியானது அதன் உடைமையாளரது சரக்காக சந்தையை அடைந்து, உழைப்புக்கு ஊதியம், அதாவது கூலி கொடுப்பதின் வடிவில் அதன் விற்பனை முடிவுற்றதும், அதன் விற்றலும் வாங்கலும் எவ்விதத்திலும் அதிசயமாய் இல்லாமல், மற்றெந்த சரக்கின் விற்றலையும் வாங்கலையும் போன்ற சர்வசாதாரணச் செயல்களாகி விடுகின்றன. இந்த தனி விசேஷமாகக் குறிப்பிடவேண்டியது உழைப்புச் சக்தி விற்பனைச் சரக்காவதே தவிர, சரக்காகிய உழைப்புச் சக்தி விற்கவும் வாங்கவும் கூடியதாவது அல்ல.
முதலாளியானவர் உழைப்புச் சக்தியை அவர் தமது அதிகாரத்துக்குப் பணிந்து செயல்படுமாறு நிர்பந்தம் செய்ய தொடங்குகையில் அந்த உழைப்புச் சக்தியை இயங்க வைப்பதற்கு வேண்டிய உற்பத்திச் சாதனங்கள் அவரிடம் இருக்க வேண்டும்.
உற்பத்திச் சாதனங்கள் வேறொருவரது உடைமையாதலால், அவை உழைப்புச் சக்தியின் உடைமையாளருக்கு எதிர் நிலையில் இருப்பவை. மறு புறத்தில் உழைப்பை விற்பவர் அதனை வாங்குகிறவரை வேறொருவரது உழைப்புச் சக்தியாக எதிர்நோக்குகிறார். வாங்குகிறவர் வேறொருவரது உழைப்புச் சக்தியான இதனை தம் சொற்படி நடக்கச் செய்து தமது மூலதனத்துடன் இணைய வைத்தாக வேண்டும்; அப்போதுதான் அது மெய்யாகவே திறனுடை..மூலதனமாக முடியும்.
ஒருவரையொருவர் எதிர்நோக்கும் தருணம் முதலாய் இவர்களிடையே முதலாளிக்கும் கூலித் தொழிலாளைக்கும் இடையிலான வர்க்க உறவு நிலவுகிறது, நிலவுவதாக கொள்ளவும் படுகிறது.
இந்த உறவு எங்கிருந்து எழுகிறது? உழைப்புச் சக்தியின் ஈடேற்றத்துக்குத் தேவையான சாதனங்கள், அதாவது வாழ்வுச் சாதனங்களும் (means of subsistence) உற்பத்திச் சாதனங்களும் உழைப்புச் சக்தியின் உடைமையாளரிடமிருந்து பிரிக்கப்பட்டு வேறொருவரது சொத்தாக இருக்கும் நிலைமையிலிருந்து எழுகிறது.
M - L ஆனது இங்கேபணமூலதனத்தின் செயலாக, அதாவது மூலதனத்தின் நிலவல் வடிவமாய் இருக்கும் பணத்தின் செயலாகாத் தெரிகிறதே, அது எப்படி? பயன் தரும் மனிதச் செயற்பாடு அல்லது சேவைக்கு விலை கொடுப்பதற்கான சாதனமாக பணம் இங்கே செயல்படுவது மட்டுமல்ல காரணம். அதை, கொடுப்புச் சாதனமாகப் பணம் ஆற்றுகிற பணியின் விளைவாய் கொள்வதற்கில்லை. இந்த வடிவில் பணத்தை செலவிட முடிவதற்கே காரணம், உழைப்புச் சக்தியை அதன் உற்பத்திச் சாதனங்களிலிருந்து (உழைப்புச் சக்தியை உற்பத்தி செய்கிற சாதனங்களாகிய வாழ்வுச் சாதனங்களும் இவற்றில் அடங்கும்) பிரித்துத் தனிமைப்படுத்தப்பட்டிருப்பதும், உற்பத்திச் சாதனங்களின் உடைமையாளரிடம் உழைப்புச் சக்தியை விலைக்கு விற்பது ஒன்றே இந்தப் பிரிவினைய அகற்றுவதற்கான வழியாய் இருப்பதும்தான்.
பணம் அதன் தன்மையின் காரணமாய் உண்டாக்குவது அல்ல மூலதன உறவு. மாறாக மூலதன உறவு என்பதாக ஒன்று இருப்பதுதால்தான் வெறும் பணப் பணி மூலதனப் பணியாக உருமாற்றமடைய வேண்டியதாகிறது.
அடிமை முறை நிலவினால்தான் அடிமைகளை வாங்குவதற்காகப் பணத்தை முதலீடு செய்ய முடியும். வெறும் பண உடைமையே அடிமை முறையச் சாத்தியமாக்கி விட முடியாது.
M - C < L / mp என்பதன் உட்பொருள் பங்கீடே அன்றி வேறு எதுவுமல்ல --- சாதாரண அர்த்தத்திலான பங்கீடு அல்ல, அதாவது நுகர்வுப் பண்டங்களது பங்கீடு அல்ல; உற்பத்தி.. அடிக்கூறுகளது பங்கீடு. அதாவது ஒரு புறத்தில் உற்பத்தியின் பொருட் சாதனங்கள் எல்லாம் குவிக்கப்பட்டிருக்க, மறுபுறத்தில் உழைப்புச் சக்தி பிரித்துத் தனிமைப்படுத்தப்படும் பங்கீடு குறிக்கப்படுகிறது.
மூலதனம் உயிர்த்தெழுந்து பொருளுற்பத்தியை தன் பிடிக்குள் கொண்டுவர வேண்டுமானால், வாணிபமும் வளர்ச்சியுற்று, குறிப்பிட்ட ஒரு கட்டத்தை அடைந்திருக்க வேண்டும். இதன் பொருட்டு சரக்குகளின் சுற்றோட்டமும், ஆகவே சரக்கு உற்பத்தியும் வளர்ந்திருக்க வேண்டும். ஏனெனில் பண்டங்கள் விற்பனைக்கென்று --- அதாவது சரக்காக உற்பத்தி செய்யப்படாவிட்டால், அவற்றால் சரக்காக சுற்றோட்டத்தில் நுழைய முடியாது.
பண வடிவிலான மூலதனம் எப்போதும் கிடைக்கக் கூடியதாய் இருக்க வேண்டும், முக்கியமாக கூலி கொடுப்பதற்கு இது கிடைத்தாக வேண்டும். அப்போதுதான் முதலாளித்துவ முறையில் பொருளுற்பத்தி நடைபெறமுடியும்.
தொழில் துறை முதலாளியின் கைக்கு அவரது சொந்தப் பணம் மட்டுமல்லாமல் ஏனையோரது பணமும் எட்டப் போகிற காலம் நெருங்கி வருகிறது.
பணம் சரக்குகளாக அடையும் உருமாற்றமான M - C பண-மூலதனம் திறனுடை-மூலதனமாக உருமாறுவதைக் குறிக்க வேண்டுமானால், சுதந்திரமான கூலித் தொழிலாளர்கள் சமுதாய அளவில் விரிந்து பரந்திருப்பது இன்றியமையாததாகும்.

No comments:
Post a Comment