நில-மூலதனத்துக்கும் சுழல்-மூலதனத்துக்கும் இடையிலான வேறுபாட்டை ஆரம்ப முன்னீடுகள், வருடாந்திர முன்னீடுகள் அகியவற்றுக்கு இடையிலான வேறுபாடாக கெனே கருதுகிறார். இந்த வேறுபாடு உற்பத்தி நிகழ்முறையில், நேரடியாக ஈடுபடுத்தப்படும் மூலதனமாகிய திறனுடை-மூலதனத்தில் இருப்பதாகவும் அவர் பிழையற்றவாறு சுட்டிக் காட்டுகிறார்.
திறனுடை-மூலதனத்தின் இந்த இரு கூறுகளுக்கும் இடையிலான வேறுபாடு அவை பூர்த்தியான பண்டத்தின் மதிப்பில் சேரும் விதத்திலான வேறுபாடே ஆகுமென --- ஆகவே அவற்றின் மதிப்பு உற்பத்திப் பொருளின் மதிப்போடு சேர்ந்து சுற்றியோடும் விதத்திலான வேறுபாடே ஆகுமென ---- ஆகவே அவற்றின் மாற்றீடு அல்லது மறுவுற்பத்தி நடைபெறும் விதத்திலான வேறுபாடே ஆகுமெனக் கெனே பிழையற்ற முறையில் விளங்க வைக்கிறார். ஒன்றின் மதிப்பு ஆண்டுக்கு ஒரு முறை முழுமையாக மாற்றீடு செய்யப்படுகிறது. மற்றதின் மதிப்பு இன்னும் அதிக காலத்துக்கு ஒரு முறை மாற்றீடு செய்யப்படுகிறது.
இதன் பின் ஆதாம் ஸ்மித் சாதித்ததெல்லாம் இந்தக் கருத்தினங்களை பொதுமைப்படுத்தியதுதான்.
புரள்வுகளைப் பொதுப்பட வெவ்வேறு கால அளவுகள் கொண்டவையாகப் பாகுபாடு செய்து, சுழல்-மூலதனப் புரள்வுக்கு ஆகும் காலம் எவ்வளவாயினும், ஓராண்டு ஆயினும் அதற்கு அதிகமாயினும் குறைவாயினும், நிலை-மூலதனப் புரள்வு ஒவ்வொன்றும் ஒன்றுக்கு மேற்பட்ட சுழல்-மூலதனப் புரள்வினைக் கொண்டதாகும் என்று காட்டப்படுகிறது.
கொச்சையான அனுபவவாத [empirical] முறையில் ஸ்மித் இந்த ஆராய்ச்சியைத் தொடங்குகிறார்; இதனால் ஆரம்பம் முதற்கொண்டே, அது தெளிவற்றதாய் இருக்கிறது.
மதிப்பானது திறனுடை-மூலதனமாக முதலீடாகா விட்டாலும், அதன் உடைமையாளருக்கு மூலதனமாக --- உதாரணமாய் வட்டி வருவாய் அளிக்கும் மூலதனமாகவும், வணிக மூலதனமாகவும் இன்ன பிறவாகவும் --- செயல்படுவதற்கான வழி பற்றிய பிரச்சினை எழுகிறது.
ஆதாம் ஸ்மித் சொல்வதெல்லாம் வேளாண்மை, தொழில், வாணிபம் ஆகியவற்றில் மூலதனத்தை ஈடுபடுத்தலாம் என்பதற்கு மேல் அவர் மூலதனத்தின் வெவ்வேறு முதலீட்டுத் துறைகள் பற்றியே பேசுகிறார்.
முன்பு மூலதன-மதிப்பு திறனுடை-மூலதனத்தின் வடிவில், அதாவது உற்பத்தி நிகழ்முறைக்கு வேண்டிய அந்த விசேஷ வடிவில், அமைந்து செயல்பட்டது; இப்போது அது சரக்கு-மூலதனமாகவும் பண-மூலதனமாகவும், அதாவது சுற்றோட்ட நிகழ்முறைக்கு வேண்டிய விசேஷ வடிவங்களில் அமைந்து செயல்படுகிறது. ஆகவே இனி அது நிலை-மூலதனமோ சுழல்-மூலதனமோ அல்ல. கச்சாப் பொருளும் துணைப் பொருளும் அதாவது சுழல்-மூலதனம் சேர்க்கிற மதிப்பு கூறுகளுக்கு இது பொருந்துவது போலவே, உழைப்புச் சாதனங்களின் தேய்மானம், அதாவது நிலை-மூலதனம் சேர்க்கிற மதிப்புக் கூறுகளுக்கும் பொருந்துகிறது. நிலை-மூலதனத்துக்கும் சுழல்-மூலதனத்துக்கும் இடையிலான வேறுபாட்டை நோக்கி இவ்வழியில் நாம் ஓரடி கூட நெருங்கி முன் செல்ல முடியவில்லை.
சுழல்-மூலதனமாய் முன்னீடு செய்யப்படும் மூலதன-மதிப்பைப் போலவே, நிலை-மூலதனமாய் முன்னீடு செய்யப்படும் மூலதன-மதிப்பும் சுற்றியோடுவது உற்பத்திப் பொருள் மூலமாகத்தான். இரண்டுமே சரக்கு-மூலதனத்தின் சுற்றோட்டத்தால்தான் பண-மூலதனமாக மாறுகின்றன. வேறுபாடு எங்கிருந்து உதித்தெழுகிறது என்றால் நிலை-மூலதனத்தின் மதிப்பு சன்னம் சன்னமாக சுற்றியோடுகிறது, ஆகவே குறுகிய அல்லது நீண்டகால இடைவெளிகளில் அதனை சன்னம் சன்னமாகவே மாற்றீடு செய்யவும், தசையுருவில் அதனை மறுவுற்பத்தி செய்யவும் வேண்டும் என்ற உண்மையிலிருந்தே.
சுற்றோட்ட மூலதனத்தைத்தான், அதாவது சுற்றோட்ட நிகழ்முறைக்கு ஏற்ற வடிவங்களில் நிலவும் மூலதன-மதிப்பைத்தான் (சரக்கு-மூலதனம், பண-மூலதனம்) ஆதாம் ஸ்மித் இங்கே சுழல்-மூலதனம் என்கிறார் என்பது சற்றும் பொருத்தமற்ற உதாரணத்தை அவர் தேர்ந்தெடுப்பதிலிருந்தே தெளிவாகி விடுகிறது. அதாவது வணிக மூலதனத்தை அவர் உதாரணமாகத் தேர்ந்தெடுத்துக் கொள்கிறார்.
சிறிது கூட திறனுடை-முலதனமாகச் செயல்படாத ஒரு மூலதன வகையை உதாரணமாகக் கொண்டு ஆய்வினைத் தொடங்குவது எவ்வளவு அபத்தமானது என்பதை அவரே இதற்கு அடுத்தாற்போல் எடுத்துரைக்கிறார்.
ஆனால், பணமும் சரக்கும் ஒன்று மற்றொன்றாய் உருமாறுவதன் மூலமே, மதிப்பு ஒரு வடிவத்திலிருந்து மற்றொரு வடிவத்துக்கு மாறுவதாலேயே எப்படி இலாபம் கிடைக்க முடியுமென்பது புரியாப் புதிராகி விடுகிறது. ஸ்மித் சுற்றோட்டத் துறையில் மட்டும் இயங்குவதாகிய வணிக மூலதனத்திலிருந்து தொடங்குவதால் இந்த புதிருக்கு விளக்கம் கூறுவது முடியாத காரியமாகிவிடுகிறது.
ஸ்மித் தமது உதாரணங்களில் "தொழிற்கருவிகளுக்கு" நிலை-மூலதனம் என்றும், கூலிக்காகவும் துணைப்பொருட்கள் உள்ளிட்ட கச்சாப் பொருட்களுக்காகவும் செலவிடப்படும் மூலதனப் பகுதிக்கு ("உற்பத்திப் பண்டத்தின் விலையின் மூலம் இலாபமும் சேர்ந்து திரும்ப வரும்") சுழல்-மூலதனம் என்றும் பெயர் சூட்டுகிறார்.
ஆதாம் ஸ்மித் வகுத்துள்ள இலக்கணப்படி, தாமிரச் சுரங்கத்தில் ஈடுபடுத்தப்படும் மூலதனம் முழுவதும் நிலை-மூலதனம் மட்டுமே ஆகும்.
நூலாகிய உற்பத்திப் பொருள் கைமாறும் போது அதன் கச்சாப் பொருளாகிய பருத்தியும் கைமாறுகிறது; உற்பத்தி நிகழ்முறையிலிருந்து நுகர்வு நிகழ்முறைக்குச் செல்கிறது. ஆனால் பருத்தியானது திறனுடை-மூலதனத்தின் கூறாகச் செயல்பட்டுக் கொண்டிருக்கும் வரை, அதன் அதிபர் அதனை விற்பதில்லை; அவர் அதனை உற்பத்தி நிகழ்முறைக்கு உட்படுத்துகிறார்; நூலாக்குகிறார். அது அவரை விட்டு விலகுவதில்லை. ஸ்மித் சொல்லும் அந்த தப்பும் தவறும் வாய்ந்த அந்தக் கேவலச் சொற்களில் சொல்வதானால், பருத்தியின் அதிபர் "அதை விலகிச் செல்ல வைத்தோ, அதிபர் மாற்றம் பெறச் செய்தோ, சுற்றியோட வைத்தோ" இலாபம் பெறவில்லை. அப்படி அவரது இயந்திரங்களை அவர் சுற்றியோட விடுவதில்லையோ, அதே போல் அவரது மூலப் பொருட்களையும் அவர் சுற்றியோட விடுவதில்லை. நூற்பு இயந்திரங்களையும் ஆலைக் கட்டடங்களையும் போலவே அவையும் உற்பத்தி நிகழ் முறையில். நிலைத்திருப்பவைதாம்.
"வருங்காலத்தில் இலாபம் சம்பாதிப்பதற்காக அது" (மூலதனம்) "ஈடுபடுத்தப்படுமானால், அவரிடமே (ஈடுபடுத்துகிறவரிடமே) இருந்து வருவதன் மூலமோ, அவரை விட்டுச் செல்வதன் மூலமோ அது இந்த இலாபத்தை சம்பாதிக்க வேண்டும். முன் சொன்னதில் அது நிலை-மூலதனம்; பின் சொன்னதில் அது சுழல்-மூலதனம்."
இலாபம் பற்றிய கொச்சையான அனுபவவாதப் பார்வைதான் இங்கே யாவற்றுக்கும் முதலாய் நம் கண்ணெதிரே தெரிகிறது; இது ஆதாம் ஸ்மித்தின் மேலான ஆய்வறிவுக்கு முற்றிலும் முரணானது.
ஒரு சரக்கின் உற்பத்திக்காக முன்னீடு செய்யப்படும் மதிப்பு அந்தச் சரக்கை விற்பதன் மூலம் முழுமையாக மாற்றீடு செய்யப்படுகிறதா, சன்னம் சன்னமாக மாற்றீடு செய்யப்படுகிறதா என்பது, ஒரே தடவையில் மாற்றீடு செய்யப்படுகிறதா அல்லது பையப்பைய மாற்றீடு செய்யப்படுகிறதா என்பது மாற்றீடு செய்ய்ப்படும் முறையையும் காலத்தையும் தவிர வேறு எதையும் மாற்ற முடியாது. எப்படிப் பார்த்தாலும் இரண்டுக்கும் பொதுவாக இருப்பது --- அதாவது மதிப்பின் மாற்றீடு என்பதை --- உபரி-மதிப்பின் படைப்பாக மாற்றி விட முடியாது. உற்பத்திப் பொருள் விற்கப்படும் வரை, அது சுற்றியோடத் தொடங்கும் வரை உபரி-மதிப்பு ஈடேற்றம் செய்யப்படுவதில்லை என்பதால் உபரி-மதிப்பு விற்பனையிலிருந்தே, சுற்றோட்டத்திலிருந்தே பிறப்பதாய்ப் பரவலாக நிலவும் கருத்தே இதற்கெல்லாம் அடிப்படையாகிறது. இங்கே இலாபம் வெவ்வேறு வழிகளில் பிறப்பதாய்ச் சொல்வதே, திறனுடை-மூலதனத்தின் வெவ்வேறு கூறுகள் வெவ்வேறு விதமாகப் பயன்படுகின்றன என்பதை, திறனுடைக் கூறுகளென்ற முறையில் அவை உழைப்பு நிகழ்முறையில் வெவ்வேறு விதமாகச் செயல்படுகின்றன என்பதைத் தவறான முறையில் தெரிவிப்பதாகும். முடிவில், இந்த வேறுபாடு உழைப்பு நிகழ்முறை அல்லது மதிப்பின் தற்பெருக்க நிகழ்முறையிலிருந்து எழுவதாகக் கொள்ளாமல், திறனுடை-மூலதனத்தின் செயல்பாட்டிலிருந்தே எழுவதாகக் கொள்ளாமல், தனிப்பட்ட முதலாளிக்கு மூலதனத்தின் ஒரு பகுதி ஒரு விதத்திலும் இன்னொரு பகுதி இன்னொரு விதத்திலும் பயன்படுவதாகக் கொள்ளப்படுகிறது.
மறு புறம் கெனே இந்த வேறுபாடுகள் மறுவுற்பத்தி நிகழ்முறையிலிருந்தும் அதன் அவசியத் தேவைகளிலிருந்தும் எழுவதாகக் கூறினார். இந்த நிகழ்முறை தொடர்ச்சியாய் நடைபெற வேண்டுமானால், வருடாந்திர முதலீடுகளின் மதிப்பை வருடாந்திர உற்பத்தியின் மதிப்பிலிருந்து ஆண்டுதோறும் முழுமையாக மாற்றீடு செய்யவேண்டும். ஆனால் ஆரம்பத்தில் முதலீடாகிற மூலதனத்தின் மதிப்பை சன்னம் சன்னமாகவே மாற்றீடு செய்ய வேண்டும். ஆகவே, அதனை (அதே வகையைச் சேர்ந்த புதிய பொருளைக் கொண்டு) பல்லாண்டு காலத்தில், உதாரணமாகப் பத்தாண்டு காலத்தில் முழுமையாக மாற்றீடு செய்வதும், எனவே முழுமையாக மறுவுற்பத்தி செய்வதும் போதுமானவை. இவ்வாறு கெனேயுடன் ஒப்பிடுகையில் ஆதாம் ஸ்மித் மிகவும் பின் தங்கி விடுகிறார்.
ஸ்மித் சுழல்-மூலதனத்தை நிலை-மூலதனத்திலிருந்து வேறுபடுத்திக் காட்டும் போது, திறனுடை-மூலதனத்தின் அடக்கக் கூறுகளில் ஒன்றாகிய சுழல்-மூலதனம் உற்பத்திப் பொருளின் மதிப்பிலிருந்து முழுமையாக மாற்றீடு செய்யப்பட வேண்டியதும், எனவே அந்த உற்பத்திப் பொருளின் உருமாற்றங்களில் முழுமையாகப் பங்கு பெற வேண்டியதும் ஆகும், ஆனால் நிலை-மூலதனம் அப்படியல்ல என்ற உண்மையை அவர் வலியுறுத்தத் தவறி விடுகிறார்.
நிலை-மூலதனம் உற்பத்தி நிகழ்முறையிலிருந்து விலகாதிருப்பதாலும் சுழல்-மூலதனம் இதை விட்டு விலகிச் சுற்றியோடுவதாலும்தான் இலாபம் கிடைக்கப் பெறுகிறது என்ற முற்றிலும் தவறான விளக்கத்தின் காரணத்தாலும், மாறும்-மூலதனத்தின் புரள்வும் மாறா-மூலதனத்தினது சுழல்-பகுதியின் புரள்வும் வடிவத்தில் ஒத்திருக்கும் காரணத்தாலும், மதிப்பின் தற்பெருக்க நிகழ்முறையிலும் உபரி-மதிப்பை உண்டாக்கும் நிகழ்முறையிலும் அவற்றுகிடையே நிலவும் அடிப்படை வேறுபாடு மறைக்கப்பட்டு விடுகிறது; முதலாளித்துவ் பொருளுற்பத்தியின் இரகசியம் வெளிப்படுவது இதனால் மேலும் கடினமாகிவிடுகிறது. "சுழல்-மூலதனம்" என்ற பொதுப் பெயர் இந்த அடிப்படை வேறுபாட்டை மறைத்து விடுகிறது.
நிலை-மூலதனத்தையும் சுழல்-மூலதனத்தையும் ஸ்மித் எவ்வளவு மேம்போக்காக வேறுபடுத்துகிறார் என்பது இங்கே வெளிப்படுகிறது. அவரது கருத்துப்படி "அதிபர் மாற்றம்" இல்லையானால் அதாவது விதை நேரடியாக வருடாந்திர உற்பத்திப் பண்டத்திலிருந்தே மாற்றீடு செய்யப்படுமானால், அதிலிருந்து கழித்து எடுக்கப்படுமானால், அந்த விதை நிலை-மூலதனமாக இருக்கும். மாறாக, உற்பத்திப் பண்டம் முழுவதையும் விற்று அதன் மதிப்பின் ஒரு பகுதியைக் கொண்டு இன்னொரு உடைமையாளரிடமிருந்து விதை வாங்கப்படுமானால் அந்த விதை சுழல்-மூலதனமாக இருக்கும். முதல் நேர்வில் "அதிபர் மாற்றம்" ஏற்படுகின்றது. இரண்டாவதில் இல்லை. ஸ்மித் திரும்பவும் இங்கே சுழல்-மூலதனத்தையும் சரக்கு-மூலதனத்தையும் போட்டுக் குழப்புகிறார். உற்பத்திப் பண்டமானது சரக்கு மூலதனத்தை ஏற்றிச் செல்லும் ஊர்த்தியாகிறது. உற்பத்திப் பண்டத்தில் ஒரு பகுதி மட்டும்தான் --- உள்ளபடியே சுற்றோட்டத்துள் பிரவேசிப்பதும், விளைபயனாய் அது வெளிப்படுகிற உற்பத்தி நிகழ்முறையினுள் நேரடியாகத் திரும்பவும் பிரவேசிக்காததுமாகிய பகுதி மட்டும்தான் --- இப்படி சரக்கு-மூலதனதை ஏற்றிச் செல்லும் ஊர்தியாகிறதே தவிர உற்பத்திப் பொருள் முழுவதுமல்ல என்பதைக் கூறத் தேவையில்லை.
சில உற்பத்திச் சாதனங்கள் உற்பத்திப் பொருளை சார்ந்திராமல் தமது சொந்த உருவத்தைக் காப்பாற்றிக் கொள்கின்றன; ஏனையவை தமது மூல உருவத்தை முழுமையாக மாற்றிக் கொள்கின்றன அல்லது இழந்து விடுகின்றன. உற்பத்திப் பொருளின் உருவாக்கத்தின் போது உற்பத்திச் சாதனங்கள் இப்படி வெவ்வேறு விதமாய் நுகரப்படுகின்றன. அவை நுகரப்படுவதிலுள்ள் இந்த வேறுபாடு உழைப்பு நிகழ்முறையின் பாற்பட்டதாகும். பரிவர்த்தனைக்காக அல்லாமல், சரக்கு உற்பத்தியாக அமையாமல், ஒருவரது சொந்த தேவைகளை --- உதாரணமாய் தந்தைவழிக் குடும்பம் ஒன்றின் தேவைகளை --- நிறைவு செய்து கொள்வதற்கான உற்பத்தி நிக்ழ்முறைகளின் போதுங் கூட எழுகிற வேறுபாடுதான் இது.
முதலாளித்துவ பொருளுற்பத்தியாளரின் உற்பத்திப் பண்டத்தில் ஒரு பகுதி நேரடியாக உற்பத்திச் சாதனமாய் அவருக்குப் பயன்படுமானால், தமது பண்டத்தை தம்மிடமே விற்றுக் கொள்பவராக அவர் காட்சியளிக்கிறார். உண்மையில் அவரது கணக்கேடுகளில் இப்படித்தான் பதியப்படுகிறது. மறுவுற்பத்தியின் இந்தப் பகுதி நேரடியாக நடைபெறுகிறதே தவிர சுற்றோட்டத்தின் வாயிலாக நடைபெறவில்லை.
மூலதனமாக இருப்பதென்பது பொருட்களுக்குரிய உள்ளார்ந்த தன்மையல்ல, நிலைமைகளுக்கு ஏற்ப பொருட்களுக்கு வரப் பெறுகிற அல்லது வரப்பெற்ற ஒரு பணியே ஆகும் என்று ஆதாம் ஸ்மித் தெளிவாகவே கூறுகிறார். இது பொதுவாகவே மூலதனத்துக்கு மட்டுமல்லாமல் மூலதனத்தின் உட்பிரிவுகளுக்கும் பொருந்தும் உண்மையாகும்.
ஒரே உழைப்புச் சாதனம் ஒரே நேரத்தில் உற்பத்திச் சாதனமாகவும், பிரிதொரு நேரத்தில் நுகர்வுச் சாதனமாகவும் பயன்படுவதுண்டு.
பொருட்கள் அவற்றின் உள்ளார்ந்த தன்மையின் காரணமாகவே நிலை-மூலதனமாகவோ சுழல்-மூலதனமாகவோ அமைவதாகக் கொள்வது ஆதாம் ஸ்மித்தின் கருத்திலிருந்து விளைந்த தவறுகளில் ஒன்றாகும்.
நிலை-மூலதனம், நிலையில்லாத மூலதனம் என்ற நிர்ணயிப்புகளும் கூட உழைப்பு நிகழ்முறையிலும், ஆகவே மதிப்பைப் படைக்கும் நிகழ்முறையிலும் இந்த மூலதனக் கூறுகள் வகிக்கும் பாத்திரங்களை அடிப்படையாகக் கொண்டவையே.
சுழல்-மூலதனத்தின் கூறுகளைப் பட்டியலிடுகையில், ஆதாம் ஸ்மித் நிலை-மூலதனத்துக்கும், சுழல்-மூலதனத்துக்கும் இடையிலான வேறுபாட்டை --- திறனுடை..மூலதனத்துக்கு மட்டும் பொருந்தக் கூடியதான இந்த வேறுபாட்டை --- அடியோடு மறந்து விடுகிறார். அதற்கு பதில் அவர் சரக்கு-மூலதனத்தையும் பண-மூலதனத்தையும், அதாவது சுற்றோட்ட நிகழ்முறைக்கே உரிய இவ்விரு மூலதன வடிவங்களையும் திறனுடை-மூலதனத்துக்கு எதிராக நிறுத்துகிறார்; தம்மையும் அறியாமலே இதைச் செய்கிறார்.
முடிவில், சுழல்-மூலதனத்தின் அடக்கக் கூறுகளைப் பட்டியலிடும்போது ஆதாம் ஸ்மித் உழைப்புச் சக்தியை மறந்து விடுவது குறிப்பிடத் தக்கதாகும்.
சுழல்-மூலதனத்தையும் சரக்கு-மூலதனத்தையும் போட்டு ஸ்மித் குழப்படி செய்வதால், அவரால் உழைப்புச் சக்தியை சுழல்-மூலதனம் எனும் தலைப்பில் சேர்க்க முடியவில்லை. எனவே மாறும்-மூலதனமானது தொழிலாளி தமது கூலியைக் கொண்டு வாங்குகிற சரக்குகளின் வடிவில், அதாவது வாழ்வுச் சாதனங்களின் வடிவில் இங்கே காட்சியளிக்கிறது, கூலிக்காக முதலீடாகிற மூலதன-மதிப்பு இவ்வடிவில் சுழல்-மூலதனத்தின் ஒரு பகுதியாகக் கொள்ளப்படுகிறது. ஆனால், உற்பத்தி நிகழ்முறையில் உழைப்புச் சக்திதானே தவிர, தொழிலாளி தம்மை பராமரித்துக் கொள்வதற்கு வேண்டிய வாழ்வுச் சாதனங்கள் அல்ல.
கூலித் தொழிலாளி தமது உழைப்பை அதன் "ஆற்றல்களுடன்" சேர்த்தே விலைக்கு விற்கிறார்.
"நிலம், சுரங்கம், மீன் பண்ணை முதலானவற்றின் பயன்பாட்டுக்கு நிலை-மூலதனம், சுழல்-மூலதனம் ஆகிய இரண்டும் அவசியம், இவற்றின் விளைபொருள் இலாபமளித்து, அந்த மூலதனங்களை மட்டுமல்லாமல் சமுதாயத்திலுள்ள ஏனைய எல்லா மூலதனங்களையும் மாற்றீடு செய்கிறது" என்று ஸ்மித் சொல்கிறார். முற்றிலும் தவறு. அவற்றின் விளைபொருள் மற்றெல்லாத் தொழிற் கிளைகளுக்கும் கச்சாப் பொருள், துணைப் பொருள் முதலானவற்றை வழங்குகிறது. ஆனால் அவற்றின் மதிப்பு மற்றெல்லா சமுதாய மூலதனங்களின் மதிப்பையும் மாற்றீடு செய்வதில்லை; சொந்த மூலதன-மதிப்பை மட்டுமே மாற்றீடு செய்கிறது. (அதோடு உபரி-மதிப்பும் அளிக்கிறது.) ஆதாம் ஸ்மித் இங்கே இன்னும் அவரது பிசியோக்கிராட்டிய நினைவுகளிலிருந்து விடுபட்டாகவில்லை.
ஆதாம் ஸ்மித் செய்வதுபோல் தொழிலாளர்களது வாழ்வுச் சாதனங்களுக்காகச் செலவாகிற மதிப்பை இந்த சுழலும் கூறாகக் கொள்வதானால், மாறும்-மூலதனத்துக்கும் மாறா-மூலதனத்துக்குமுள்ள வேறுபாட்டையும் பொதுவாக முதலாளித்துவ பொருளுற்பத்தி நிகழ்முறையையும் புரிந்து கொள்ள முடியாமற் போகிறது. மூலதனத்தின் இந்த கூறு உற்பத்திப் பண்டத்தின் படைப்புக்கான பொருட் கூறுகளாக முதலீடாகியுள்ள மாறா-மூலதனத்துகெதிராய் மாறும்-மூலதனமாகும் என்ற வரையறுப்பு, உழைப்புச் சக்திக்காக முதலீடாகியுள்ள மூலதனக் கூறு புரள்வைப் பொருத்த வரை திறனுடை-மூலதனத்தின் சுழலும் பகுதியைச் சேர்ந்ததாகும் என்ற வரையறுப்புக்கு அடியில் புதைக்கப்பட்டு விடுகிறது. தொழிலாளியின் உழைப்புச் சக்திக்கு பதிலாக அவரது வாழ்வுச் சாதனங்களைத் திறனுடை..மூலதனத்தின் ஒரு கூறாகக் குறிப்பிடுவதன் மூலம் இந்த சவ அடக்கப் பணி பூர்த்தி செய்யப்படுகிறது.
ஆதாம் ஸ்மித் அவருக்குப் பின் வந்தோரிடையே உழைப்புச் சக்திக்காகச் செலவாகிற மூலதனக் கூறு மாறும்-மூலதனம் என்ற உணர்வே இல்லாத படி செய்துவிட்டார். பிற இடங்களில் அவர் வளர்த்திடும் ஆழம் மிகுந்த, பிழையற்ற கருத்துக்கள் நீடித்து நிலைக்கவில்லை; ஆனால் இந்த பெருந்தவறு நிலைத்து விட்டது. அவருக்குப் பின் வந்த ஏனைய பலரும் அவரையே விஞ்சிவிட்டனர். நிலை-மூலதனத்துக்கு எதிரான சுழல்-மூலதனமாய் இருத்தலே உழைப்புச் சக்திக்காக முதலீடாகியுள்ள மூலதனக் கூறின் பிரதான இலட்சணம் என்று இலக்கணம் வகுப்பதோடு அவர்கள் நின்றுவிடவில்லை; தொழிலாளர்களது வாழ்வுச் சாதனங்களாய் முதலீடாயிருப்பதுதான் சுழல்-மூலதனத்தின் பிரதான இலட்சணம் என்றும் இலக்கணம் வகுத்துவிட்டனர். இயல்பாக இதோடு இணைந்த கோட்பாடே தொழிலாளர் நுகர்வு..நிதியம் [labour fund] என்னும் கோட்பாடு --- அவசிய வாழ்வுச் சாதனங்களாலான தொழிலாளர் நுகர்வு நிதியமானது குறிப்பிட்ட பருமனுடையதாகும் என்றும், இதனால் சமுதாய உற்பத்திப் பொருட்களில் தொழிலாளர்களுக்குரிய பங்கு வரம்புக்கு உட்பட்டதாகிறது என்றும், ஆனால் இந்நிதி உழைப்புச் சக்தியை வாங்குவதற்காகவே முற்றிலும் செலவழிய வேண்டும் என்றும் கூறுகிறது இந்தக் கோட்பாடு.