சரக்கு..மூலதனத்தின் சுற்றுக்கான பொதுச் சூத்திரம் : C' - M' - C ... P ... C'.
விரிதிற மறுவுற்பத்தி நடைபெற்றால், முடிவில் வரும் C' ஆரம்பத்தில் வரும் C'ஐக்காட்டிலும் பெரியது; ஆகவே இங்கே அதனை C'' என்று குறித்திட வேண்டும்.
சரக்கு-மூலதனச் சுற்று சாமானிய மூலதன-மதிப்பிலிருந்து தொடங்காமல், சரக்கு வடிவில் பெருகி விட்ட மூலதன-மதிப்பிலிருந்து தொடங்குகிறது. இவ்வாறு இந்தச் சுற்று சக்குகளின் வடிவிலான மூலதன-மதிப்பின் சுற்றை மட்டுமல்லாமல் உபரி-மதிப்பின் சுற்றையும் ஆரம்பத்திலிருந்தே தன்னுள் கொண்டதாகும். ஆகவே சாமானிய மறுவுற்பத்தி இந்த வடிவில் நடைபெற்றால், இறுதி முனையான C' ஆனது அளவில் தொடக்க முனையான C'க்குச் சமமாகும். உபரி-மதிப்பின் ஒரு பகுதி மூலதனச் சுற்றில் சேருமானால், சுற்றின் முடிவில் C'க்கு பதில் C'' வருகிறது; C'' என்பது பெருகிய C' ஆகும். ஆனால் இதையடுத்து வரும் சுற்று மீண்டும் C'இலிருந்தே ஆரம்பமாகிறது. இந்த C' இதற்கு முந்தைய சுற்றின் தொடக்கத்தில் வந்த C' ஐ விடப் பெரியது.
C' ஆனது தனிப்பட்ட ஒரு தொழில் துறை மூலதனத்தின் சுற்றில் C ஆக வரும்போது, அது இந்த மூலதனத்தின் வடிவமாய் அமையாமல் (உற்பத்திச் சாதனங்கள் வேறொரு தொழில் துறை மூலதனத்தின் உற்பத்திப் பொருளாய் இருப்பதால்) அந்த வேறொரு தொழில் துறை மூலதனத்தின் வடிவமே ஆகிறது.
ஒரு புறம் தொழிலாளர்கள் தம் உழைப்புச் சக்தியை விற்கிறார்கள், மறுபுறம் உற்பத்திச் சாதனங்களின் உடைமையாளர்கள் தம் உற்பத்திப் பொருளான இச்சாதனங்களை விற்கிறார்கள் --- அவை இங்கே ஒரே மாதிரியான உறவுகளைக் கொண்டுள்ளன.
C' ஆனது வெறும் C ஆக, மூலதன-மதிப்பின் வெறும் சரக்கு வடிவமாக எந்தச் சுற்றையும் தொடக்கி வைக்க முடியாது. சரக்கு-மூலதனம் என்ற முறையில் அது எப்போதுமே இரட்டைத் தன்மை கொண்டது. பயன்-மதிப்பின் கோணத்திலிருந்து பார்த்தால், அது Pஇன் பணியால் விளையும் உற்பத்திப் பொருளாகும்.
இரண்டாவதாக, மதிப்பின் கோணத்திலிருந்து பார்த்தால் அது P என்னும் மூலதன-மதிப்பு, Pஇன் பணியால் விளையும் s என்னும் உபரி-மதிப்பு ஆகியவற்றின் கூட்டுத் தொகையாகும்.
உபரி உற்பத்தியின் சுற்றோட்டமான c - m - c நடைபெறும் முன்னரே முதலாளி C - M - C < L / mp என்பதை நடைபெறச் செய்ய முடியும். C' என்பதை முதலாளி c+v+s என்று கூறு போடுவதற்கு பதில் C' இன் ஈவுப் பகுதி ஒவ்வொன்றையுமே கூறு போட முடியும்.
முதல் வகைச் சுற்றில், அதாவது M ... M' என்பதில் பணமானது மூலதனமாக முன்னீடு செய்யப்பட்டு, முதலில் உற்பத்தி -அடிக்கூறுகளாகவும், இவற்றிலிருந்து சரக்கு உற்பத்தியாகவும் (commodity-product) மாற்றப்படுகிறது; இந்த சரக்கு உற்பத்தி திரும்பவும் பணமாக மாற்றப்படுகிறது. இது முழு நிறைவான தொழிற் சகடம் ஆகும். பணத்தில் தொடங்கி மேலும் கூடுதலான பணத்தில் முடிவடைகிறது.
இரண்டாவது வகைச் சுற்றில், அதாவது P... C' - M' - C ... P (P') என்பதில், P ... P என்னும் சுழல் இயக்கத்தின் பொது வடிவம்தான் மறுவுற்பத்தியின் வடிவம். இது M ... M' என்பது காட்டுவதுபோல், மதிப்பின் தற்பெருக்கமே இந்நிகழ்முறையின் குறிக்கோள் என்று காட்டவில்லை. அதாவது முடிந்த வரை அதிகமாகவும் முடிந்த வரை மலிவாகவும் உற்பத்தி செய்வதும், ஒரு புறம் திரும்பத் திரும்ப தொடர்ந்து உற்பத்தி செய்வதற்காகவும் (M - C) மறு புறம் நுகர்வதற்காகவும் (m - c) உற்பத்திப் பொருட்களுக்காகப் பரிவர்தனை செய்வதும்தான் நோக்கமெனக் காட்டுவது சுலபமாகி விடுகிறது. பணத்துக்கும் பண-மூலதனத்துக்குமுள்ள தனித் தன்மைகளைக் கவனியாது விலக்குவது இதன் பின் சாத்தியமாகி விடுகிறது. ஏனென்றால், M, m ஆகியவை இங்கே சரக்குச் சுற்றோட்டத்துக்கான தற்காலிக சாதனமாகத்தான் செயல்படுகின்றன.
உற்பதியின் முழு சுற்றையும் விவாதிக்கையில் சரக்கு-மூலதனமானது வெறும் சரக்காகி விடுகிறது. ஆனால் மதிப்பின் அடக்கக் கூறுகளை விவாதிக்க முற்பட்டதும் சரக்கு-மூலதனம் சரக்கு-மூலதனமாகச் செயல்படுவதாய் பாவிக்கப்படுகிறது.
மூன்றாவது வகைச் சுற்றில், அதாவது C' - M' - C ... P ... C' என்பதில் சுற்றோட்ட நிகழ்முறையின் இரு கட்டங்களும் சுற்றினைத் தொடங்கி வைக்கின்றன; இரண்டாவது வகையான P ... P என்பதில் காணப்படும் அதே வரிசை ஒழுங்கில் அவை இதைச் செய்கின்றன. C' ... C' என்பதே மூன்றாவது வகைப்பட்ட முழுச் சுற்று.
திறனுடை நுகர்வில் இயல்பாகவே தொழிலாளியின் சொந்த நுகர்வும் அடங்குகிறது; ஏனென்றால் உழைபுச் சக்தியானது குறிப்பிட்ட சில வரம்புகளுக்குள் தொழிலாளியினது சொந்த நுகர்வினது தொடர்ச்சியாய் விளங்கும் அதன் உற்பத்திப் பொருளே ஆகும். திறனுடை நுகர்வு என்பது தனிப்பட்ட ஒவ்வொரு மூலதனமும் செய்கின்ற காரியமாகும். ஆனால் சொந்த நுகர்வு என்பது --- தனிப்பட்ட முதலாளியின் வாழ்வுக்குத் தேவையானதைத் தவிர்த்து --- இங்கு சமுதாய செயலாகவே அன்றி தனிப்பட்ட முதலாளியின் செயலாகக் கொள்ளப்படவில்லை.
M ... M' என்பதில், புதிய சுற்றில் நுழையும் mஇன் பரிமாணத்தைப் பொறுத்து, சுற்று விரிவடையும் சாத்தியப்பாடு இருக்கிறது.
P ... P என்பதில் P ஆனது புதிய சுற்றினை அதே மதிப்புடன் --- அல்லது இன்னும் சிறிய மதிப்புடனும் கூட --- தொடங்கலாம்; அப்போதும் கூட அது விரிதிற மறுவுற்பத்தியைக் குறிக்கலாம். எடுத்துக்காட்டாக, உழைப்பின் உற்பத்தித் திறன் உயர்வதன் பயனாய் சரக்குகளின் குறிப்பிட்ட சில ஆக்கக் கூறுகள் முன்னிலும் மலிவாகும் போது இப்படி நிகழ்கிறது. இதற்கு நேர்மாறாகவும் நிகழலாம்.
C ... C' என்பதில் C' ஆனது சுழல் இயக்கத்தின் தொடக்க முனையும் மாறிச் செல்லும் இடை நிலையும் இறுதி முனையும் ஆகிறது. இவ்வாறு அது எப்போதும் இருந்து கொண்டிருக்கிறது. மறுவுற்பத்தி நிகழ்முறைக்கு அது இன்றியமையாத நிரந்தரத் தேவையாகும்.
எப்போதுமே M. P அல்லது C' என்ற தொடக்க வடிவம்தான் மூலதன-மதிப்பு (மூன்றாவது வகைச் சுற்றில் உபரி-மதிப்பு உண்டாகிப் பெருக்கமடைந்த மூலதன-மதிப்பு) முன்னீடு செய்யப்படும் வடிவமாகும். அதாவது சுற்றின் ஆரம்ப வடிவமாகும். சுற்றின் முடிவில் வருகிற M, P அல்லது C' என்னும் இறுதி வடிவம் சுற்றில் அதற்கு முன்னதாக வரும் பணிவழிப்பட்ட வடிவத்தின் உருமாற்றமே தவிர, ஆரம்ப வடிவத்தின் உருமாற்றமல்ல.
மூன்றாம் வகைச் சுற்றில் C' ஆனது திறனுடை-மூலதனமான P இன் உருமாற்றமாகும். ஆனால் இங்கே --- மூன்றாம் வகைச் சுற்றில் --- ஏற்படும் உருமாற்றம், முதலாவதாக, மூலதனத்தின் பணி வழிப்பட்ட வடிவில் மட்டுமின்றி, மதிப்பின் பருமனிலும் மாற்றத்தைக் குறிக்கிறது. இரண்டாவதாக, இந்த உரு மாற்றம் திறனுடை-மூலதனத்தின் சரக்கு உள்ளடக்கத்தின் பயன் வடிவத்திலும் மதிப்பிலும் உற்பத்தி நிகழ்முறையின் போது உண்டாகும் மெய்யான மாற்றத்தின் விளைவாகுமே தவிர, சரக்குச் சுற்றோட்ட நிகழ்முறையின் போதான இட மாற்றத்தால் உண்டாகும் வடிவ மாற்றமல்ல.
ஒரு தனிப்பட்ட தொழில் துறை மூலதனத்தினது சுற்றின் இறுதி முனை என்ற முறையில் C'க்குத் தேவைப்படுவதெல்லாம் அதனை உற்பத்தி செய்த தொழில் துறை மூலதனம் சுற்றோட்டத் துறைக்கு வெளியில் ஏற்கும் P என்னும் வடிவமேதான்.
சுற்றின் இறுதி முனையைத் தவிர்த்து, தனிப்பட்ட பண-மூலதனத்தின் சுற்றுக்குப் பண-மூலதனம் இருந்தாக வேண்டுமென்பதில்லை; தனிப்பட்ட திறனுடை-மூலதனத்தின் சுற்றுக்கும் கூட திறனுடை-மூலதனம் இருந்தாக வேண்டுமென்பதில்லை. முதலாம் வகைச் சுற்றில் M ஆனது வரலாற்றில் தோன்றும் முதலாவது பண..மூலதனமாக இருக்கலாம், அதே போல் இரண்டாம் வகைச் சுற்றில் P ஆனது வரலாற்றின் முதலாவது திறனுடை-மூலதனமாக இருக்கலாம்; ஆனால்,
{ C -- { M - C < L / mp ... P ... C'
C' { -- M' {
{ c -- { m - c
என்பதான முன்றாம் வகைச் சுற்றில், C ஆனது சுற்றுக்கு வெளியிலிருந்து இருமுறை வருவது அவசியமாகிறது. C' - M' - C < L / mp என்னும் சுற்றில் முதல் முறை தேவைப்படுகிறது.;
முதலாளித்துவ பொருளுற்பத்தி முறையின் ஆட்சியை அடிப்படையாகக் கொள்ளூம் போது, விற்பவரின் கையிலுள்ள எல்லாச் சரக்குகளும் சரக்கு-மூலதனமாகவே இருந்தாக வேண்டும்.
திறனுடை-மூலதனமான Pஇன் அடக்கக் கூறுகளாகிய L, mp என்னும் சரக்குகள் அவை வாங்கப்படுகிற பல்வேறு சரக்குச் சந்தைகளில் முன்பு அவை பெற்றிருந்த அதே வடிவத்தை இப்போது Pஇன் நிலவல் வடிவங்கள் என்ற முறையில் பெற்றிருக்கவில்லை. இரண்டும் இப்போது ஒன்றுசேர்ந்து விடுகின்றன, இப்படி இணையும்போது அவற்றால் திறனுடை-மூலதனமாகச் செயல்பட முடிகிறது.
C' ... C' என்ற சுற்றானது அதன் வட்டத்துக்குள் C (=L+mp) என்னும் வடிவில் பிற தொழில் துறை மூலதனங்கள் நிலவுதலை அவசியமாக்குகிறது; mp ஆனது இதர பல வகைப்பட்ட மூலதனங்களையும் கொண்டதாகும். ஆகவேதான் இந்த மூன்றாவது வகைச் சுற்றினை மூலதனச் சுற்றின் பொதுவான வடிவமாகக் கொண்டால் மட்டும் போதாது. அதாவது தனிப்பட்ட ஒவ்வொரு தொழில் துறை மூலதனத்தையும் (முதன் முதலாய் முதலீடு செய்யப்படுவதைத் தவிர்த்து) ஆராய்ந்து அறிவதற்கான சமூக வடிவமைப்பாக, எனவே தனிப்பட்ட எல்லாத் தொழிற்துறை மூலதனங்களுக்கும் பொதுவான இயக்க வடிவமாகக் கொண்டால் மட்டும் போதாது. அதோடு கூட தனிப்பட்ட மூலதனங்களினது ஒட்டுமொத்த்த்தின், எனவே முதலாளி வர்க்கத்தின் ஒட்டு மொத்த மூலதனத்தின் இயக்க வடிவமாகக் கொள்வதும் அவசியமாகிறது. இந்த ஒட்டுமொத்த மூலதனத்தின் இயக்கமும் ஒவ்வொரு தனிப்பட்ட தொழில் துறை மூலதனத்தின் இயக்கமும் ஒரு பகுதியாய் ஏனைய மூலதனங்களது இயக்கங்களுடன் ஒன்று கலப்பதோடு அந்த ஏனைய இயக்கங்களால் அவசியமாக்கப்படவும் செய்கிறது.
சமுதாய மூலதனமானது தனிப்பட்ட மூலதனங்களின் கூட்டுத் தொகைக்குச் சமம் (கூட்டு பங்கு [joint-stock] மூலதனமும், அரசாங்கங்கள் உற்பத்தித் திறனுள்ள கூலியுழைப்பைச் சுரங்கங்களிலும் இருப்புப் பாதைகளிலும் இன்ன பிற வற்றிலும் அமர்த்தி தொழில் துறை முதலாளிகளது பணியைச் செய்து வரும் வரை அரசு மூலதனமும் [state capital] கூட தனிப்பட்ட மூலதனங்களில் சேர்க்கப்பட வேண்டியவையே) என்பதும், சமுதாய மூலதனத்தின் ஒட்டு மொத்த இயக்கமானது தனிப்பட்ட மூலதனங்களது இயக்கங்களின் குறிக்கணிதக் கூட்டுத் தொகைக்கு [algebraic sum] சமம் என்பதும் மெய்தான்.
தனிப்பட்ட மூலதனத்தின் இயக்கத்தைப் பரிசீலிக்கையில் குறிப்பிட்ட சில பிரச்சனைகளின் தீர்வு இந்தப் பரிசீலனையின் விளைவாய் இருப்பதற்குப் பதில் முன்கூட்டியே அனுமானித்துக் கொள்ள வேண்டியதாகிறது. ஆனால் அதே இயக்கத்தை சமுதாய மூலதனத்தினது மொத்த இயக்கத்தின் ஒரு பகுதியாகக் கொண்டு பரிசீலிக்கையில் பிரச்சினைக்குத் தீர்வு கிடைக்கிறது.
முதலாளித்துவ முறையில் உற்பத்தி செய்யப்படும் ஒவ்வொரு சரக்கும் ---- பயன் வடிவம் காரணமாய் அது திறனுடை நுகர்வுக்கு உரியதானாலும் சரி, சொந்த நுகர்வுக்கு உரியதானாலும் சரி, இரு வகை நுகர்வுக்கும் உரியதானாலும் சரி --- சரக்கு மூலதனம்தான். M ... M' என்ற சுற்றில், மூலதன-மதிப்பின் தற்பெருக்கமாகிய அமிசம் மட்டுமே முழு நிகழ்முறையின் நோக்கம் என்பது புலப்படுகிறது.
ஒரு வருட உற்பத்தியானது அடுத்த வருட உற்பத்திக்கு முதனிலையாய் இருக்கும் வரை, அல்லது ஓராண்டுக்குட்பட்ட சாமானிய மறுவுற்பத்தி நிகழ்முறையோடு ஒருங்கே நடைபெறக் கூடியதாய் இருக்கும் வரை, உபரி-உற்பத்தியானது கூடுதல் மூலதனமாகவும் செயல்படுவதற்கு ஏற்ற வடிவில் அமைந்து விடுகிறது. உற்பத்தித் திறன் உயர்வதன் மூலம் மூலதனத்தின் அடக்கப் பொருள் கூடுதலாகலாமே தவிர மதிப்பு உயர முடியாது; ஆயினும் உற்பத்தித் திறனிலான உயர்வு மதிப்பின் தற்பெருக்கத்துக்குக் கூடுதலாய் வேண்டியவற்றைக் கிடைக்கச் செய்கிறது.

No comments:
Post a Comment