திறனுடை-மூலதனத்தின் சுற்றுக்கான பொதுச் சூத்திரம்: P ... C' - M' - C ... P
தொழில் துறை மூலதனமானது உற்பத்தித் திறனுள்ள வடிவம் பூண்டு பணி புரிவதையும் இந்தப் பணி ஒரு தரம் புரியப்படுவதோடு நின்று விடாமல் காலவட்ட முறையில் திரும்பத் திரும்ப புரியப்பட்டு, ஒவ்வொரு தொடக்கமும் இவ்விதம் அதன் அடுத்த தொடக்கத்துக்கு வித்திட்டுச் செல்வதையும் இந்தச் சூத்திரம் குறிக்கிறது.
மதிப்புகள் சுற்றோட்ட நிகழ்முறையில் நுழையாமலே உற்பத்தி நிகழ்முறையில் நுழைவது உண்டு. ஆனால் முதலாளித்துவப் பொருளுற்பத்தியில் மிகச் சொற்பமே என்பதால் இதைக் கருதாமலே ஒதுக்கி விடலாம்.
1. சாமானிய மறுவுற்பத்தி
திறனுடை மூலதனத்தின் சாமானிய மறுவுற்பத்தியில் உபரி-மதிப்பு முழுவதுமே முதலாளியின் சொந்த நுகர்வுக்குப் போய்விடுகிறது. சரக்கு-முலதனமான C' பணமாக உருமாறியவுடனே அந்தப் பணத்தில் மூலதன-மதிப்பைக் குறிக்கும் பகுதி தொழில் துறை மூலதனத்தின் சுற்றில் தொடர்ந்து ஓடுகிறது. பணமாக உருமாறிய உபரி-மதிப்பான மறு பகுதி பொதுவான சரக்குச் சுற்றோட்டத்தில் நுழைகிறது. இந்தப் பணச் சுற்றோட்டம் முதலாளியிடமிருந்து ஆரம்பமாகிறது. ஆனால் அவரது தனிப்பட்ட மூலதனத்தின் சுற்றோட்டத்துக்கு வெளியே நடைபெறுகிறது.
m - c இல் பணமானது நடப்பு நுகர்வுக்குரிய வழங்கல் அல்லது சேர்ப்பின் (hoard) வடிவில் தாற்காலிகமாக நிலவுகிறது. பண வடிவ மூலதனமாகிய Mஇன் சுற்றோட்டத்தில் நுழைவதில்லை. இந்தப் பணம் செலவிடப்படுகிறதே தவிர முன்னீடு செய்யப்படுவதில்லை.
ஆனால் உற்பத்திப் பண்டமாகிய சரக்கு இயந்திரமாக இருக்குமேயானால், இந்த இயந்திரத்தின் மதிப்பில் ஒரு பகுதி உபரி-மதிப்பாகும்; ஆனால் இயந்திரத்தைத் துண்டு துண்டாக உடைக்காமல் --- இவ்விதம் அதன் பயன் மதிப்போடு கூடவே மதிப்பையும் அழித்திடாமல் ... அதனை மூலதன-மதிப்பாகவும் உபரி-மதிப்பாகவும் பிரிக்கமுடியாது. ஆகவே, இரு மதிப்புக் கூறுகளையும் சரக்கின் கூறுகளாக கருத்தளவில் மட்டுமே காட்ட முடியும். மொத்தச் சரக்கு அல்லது சரக்கு-மூலதனமாகிய இயந்திரம் முழுவதுமாக விற்கப்பட்டால்தான், m அதன் பிரத்தியேகச் சுற்றோட்ட்த்தில் நுழைய முடியும்.
C' ஆனது M' உருமாற்றம் அடைந்த பிறகு, மூலதன-மதிப்பும் உபரி-மதிப்புமான C, c ஆகியவற்றின் சுற்றோட்டம் பிளவுண்டு விடுகிறது. ஆக இதிலிருந்து பெறப்படுவது என்னவென்றால்:
முதலாவதாக, C' - M' = C' - (M+m') என்பதன் மூலம் சரக்கு-மூலதனம் ஈடேற்றம் பெறுகிறது. மூலதன-மதிப்பு, உபரி-மதிப்பு ஆகியவற்றின் அசைவியக்கம், இதுகாறும் ஒன்றிணைந்து C' - M' என்பதில் ஒரே அளவிலான சரக்குத் தொகுதியால் நடைபெற்று வந்த இவ்வியக்கம், இப்போது தனித்தனிப் பணத் தொகைகளாய் சுயேச்சையான வடிவங்கள் பெற்று தனித் தனியே பிரியக் கூடியதாகிறது.
தொர்ந்து அமைந்த, பிரிக்க முடியாத சரக்குகளைப் பொறுத்தவரை, மதிப்புக் கூறுகளை கருத்தியலாகப் பிரித்துத் தனித்தனி ஆக்குவதே நடைமுறை வழக்கம்.
மூலதன-மதிப்பும் உபரி-மதிப்புமாகிய இரண்டின் அசைவியக்கமும் --- இரண்டும் இன்னமும் ஒன்றுசேர்ந்தே Cஇலும் Mஇலும் செயல்படுகின்றன --- பகுதியளவு மட்டுமே பிளவுபட்டுப் பிரிகிறதென்றால் (உபரி-மதிப்பில் ஒரு பகுதி முதலாளியின் வருவாயாகச் செலவிடப்படாத நிலையில்), அல்லது பிரியாமலே நடைபெறுகிறதென்றால், மூலதன-மதிப்பின் சுற்றினுள்ளேயே, அச்சுற்று பூர்த்தியாகும் முன்பே, மூலதன-மதிப்பில் மாற்றம் ஏற்படுகிறது. இந்தப் பெருக்கத்தோடு கூடவே இம்மதிப்பின் இயைபிலும் மாற்றம் ஏற்படலாம்.
C' என்பது தொடக்கத்திலிருந்தே சரக்கு-மூலதனமாகச் செயல்படுகிறது. இந்நிகழ்முறையின் நோக்கம் எல்லாம் செல்வப் பெருக்கம்தான் (உபரி-மதிப்பின் உற்பத்திதான்). ஆனால் முதலாளியின் உபரி-மதிப்பு (ஆகவே அவரது மூலதனம்) அதிகமாகிச் செல்வதைத் தொடர்ந்து, சொந்த முறையிலான அவரது நுகர்வும் அதிகரித்துச் செல்வதை இந்த நோக்கம் எவ்விதத்திலும் வேண்டாமென விலக்குவதில்லை. மாறாக சந்தேகத்துக்கு இடமின்றி அங்கீகரிக்கவே செய்கிறது.
c என்பது எந்தச் செலவுமில்லாமல் முதலாளிக்குக் கிடைத்த சரக்கு-மதிப்பாகும். உபரி-உழைப்பின் தசையுருவாகும், அதனால்தான் அது சரக்கு-மூலதனமான C'இன் ஓர் அடக்கக் கூறாக முதலில் நம் முன்னால் வரமுடிந்தது என்ற சிறு உண்மையையும் இங்கே நாம் மறக்கலாகாது. இந்த c, அதன் நிலவலின் இயல்பினாலேயே, நிகழ்முறையின் போது மூலதன-மதிப்பின் சுற்றோடு பிணைக்கப் பட்டுள்ளது. இந்த சுற்று தேக்கமுறுமானால், அல்லது வேறு விதமான இடையூறுக்கு ஆளாகுமானால், cஇன் நுகர்வு மட்டுமல்லாமல், cக்குப் பதிலாய் அதன் இடத்துக்கு வரக் கூடிய சரக்குத் தொகுதியின் விற்றலும் தடைபடுகிறது, அல்லது அடியோடு நின்றுவிடுகிறது. C' - M' என்பது நடந்தேறாமல் போகும் போதும் அல்லது C'இல் ஒரு பகுதியை மட்டுமே விற்க முடிகிற போதும் இதே விளைவுதான் ஏற்படுகிறது.
முதலாளியின் வருவாய் m - c என்பதிலும் ஆகவே c - m - c என்பது முழுவதிலுமே தனித்து சுயேச்சையாக இயங்க முற்பட்டவுடன், அந்த வருவாயின் சுற்றோட்டமானது முதலாளி முன்னீடு செய்யும் மூலதனத்தின் சுழல் இயக்கத்துக்குள் சேருவதில்லை; அதிலிருந்தே உதிப்பதாயினும் உதித்த பின் அதில் சேராமல் பிரிந்து சென்று விடுகிறது. இந்த சுற்றோட்டம் முன்னீடு செய்யப்பட்ட மூலதனத்தின் சுழல் இயக்கத்துடன் எப்படித் தொடர்பு கொண்டிருக்கிறது என்றால்: மூலதனம் இருக்க வேண்டுமானால் முதலாளி இருந்தாக வேண்டும்; முதலாளி இருக்க வேண்டுமானால் அம்முதலாளி உபரி-மதிப்பை நுகர்ந்தாக வேண்டும்.
பொதுவான சரக்குச் சுற்றோட்டத்துள் C' ஆனது சரக்காக மட்டுமே செயல்படுகிறது; ஆனால் மூலதனச் சுற்றோட்டத்தில் ஒரு கூறாக இருக்கும்போது அது சரக்கு-மூலதனமாகச் செயல்படுகிறது. மூலதன-மதிப்பு மாறி மாறி ஏற்பதும் களைவதுமான வடிவமே சரக்கு-மூலதனம். வியாபாரியிடம் விற்கப்பட்டதும் அதனை உற்பத்தி செய்த மூலதனத்தின் சுழல் இயக்கத்திலிருந்து வெளியேறிவிடுகிறது.
பொதுவான சுற்றோட்டம் என்பது சந்தையினுள் செலுத்தப்பட்டாமல் தனியாட்களின் சொந்த நுகர்வில் சேர்ந்துவிடும் மதிப்புகளை மட்டுமல்லாமல், சமுதாய மூலதனத்தின் தனிப்பட்ட வெவ்வேறு பின்னப் பகுதிகளது சுற்றுகளாலான பின்னல்களையும், அதாவது தனிப்பட்ட மூலதனங்களின் ஒட்டுமொத்தத்தையும் தன்னுள் கொண்டதாகும்.
முதல் வகைச் சுற்றில் (M ... M' சுற்றில்) பண-மூலதனமாகிய Mஆனது, மூலதன-மதிப்பு முன்னீடு செய்யப்பட்ட அந்த ஆரம்ப வடிவில்தான் தொடக்கத்திலிருந்தே தோற்றமளித்தது. ஆனால், இங்கே அது, சுற்றோட்டத்தின் முதல் கட்டமான C' - M' என்பதில் சரக்கு-மூலதனத்தால் வரப்பெறும் பணத் தொகையின் ஒரு பகுதியாகத் தொடக்கத்திலிருந்தே தோற்றமளிக்கிறது. ஆகவே இங்கே அது, திறனுடை-மூலதனமான P ஆனது சரக்குவிற்பனையின் வாயிலாகப் பணமாய் மாறுகிற உருமாற்றமாகத் தோற்றமளிக்கிறது. தொடக்கத்திலிருந்தே இங்கே பண-மூலதனமானது மூலதன..மதிப்பின் ஆரம்ப வடிவமோ இறுதி வடிவமோ இல்லாத ஒரு வடிவில் இருக்கிறது.
M - C என்பதில் அதே பொது M - L ஆகவும் இருக்கிற பகுதியானது, உழைப்புச் சக்தியை விலைக்கு வாங்குவதன் மூலம் பணம் முன்னீடு செய்யப்படுவதைக் குறிப்பதோடு அல்லாமல், பண வடிவில் உழைப்புச் சக்தி முன்னீடு செய்யப்படுவதையும் குறிக்கிறது.
தொழிலாளி கூலியாகப் பெறும் பணம் அவரது வருங்கால உழைப்பின், அல்லது பிற தொழிலாளர்களது உழைப்பின் மாற்று வடிவமே ஆகும். தொழிலாளியினது கடந்த கால உழைப்பில் ஒரு பகுதியைக் கொடுத்து அவரது வருங்கால உழைப்பின் மீது அவருக்கு அச்சாரம் அளிக்கிறார் முதலாளி. ஆகவே தொழிலாளியின் இப்போதைய அல்லது வருங்கால உழைப்பால் இனிமேல் வரப் போகிற (அதாவது இப்போது இல்லாத) பொருட்களிலிருந்துதான் அவரது கடந்த கால உழைப்புக்கு ஊதியம் கிடைக்கும். இந்த நிலையில் அவர் பணத்தைச் சேர்த்து வைக்கும் பேச்சுக்கே இடமில்லாமல் போகிறது.
மூலதனத்தின் பண வடிவமானது, மூலதனம் பண-மூலதனமாக இருப்பதானது இந்த இயக்கத்தில் தாற்காலிகக் கட்டமே ஆகும். அல்லது இயக்கம் சரளமாக நடைப்பெற்றுக் கொண்டிருக்கும் வரை, பண-மூலதனம் வாங்கற் சாதனமாகப் பயன்படும் போது சுற்றோட்ட ஊடகமாக மட்டுமே இருக்கிறது; முதலாளிகள் ஒருவரிடமிருந்து ஒருவர் வாங்கும்போது --- ஆகவே அவர்கள் கணக்குகளை சரிகட்டிக் கொண்டால் போதும் என்ற நிலையில் --- அது முறையான கொடுப்புச் சாதனமாக செயல்படுகிறது.
சரக்கு வடிவத்தில் இருக்கும் மூலதன-மதிப்பை அச்சரக்கை உற்பத்தி செய்வதற்கு வேண்டிய அடிக்கூறுகளாக மீண்டும் உருமாறச் செய்வதே பண-மூலதனம் செய்கிற பணி. இறுதியாகப் பார்க்குமிடத்து, பண-மூலதனம் செய்கிற பணி எல்லாம் சரக்கு மூலதனத்தைத் திறனுடை-மூலதனமாகத் திரும்பவும் உருமாறச் செய்வதுதான்.
உற்பத்திச் சாதனங்கள் மாறிக் கொண்டிருக்கின்றன. மதிப்புறவுகள் ஓயாமல் மாறிக் கொண்டிருப்பதுதான் முதலாளித்துவப் பொருளுற்பத்தியின் தனி விசேஷம். உழைப்பின் உற்பத்தித் திறன் எந்நேரமும் மாறுவது இந்தப் பொருளுற்பத்தி முறைக்குரிய தனிக் குணமாய் இருப்பதுதான் இதற்குக் காரணம்.
C' என்னும் வடிவம் தரித்துள்ள மூலதனம் பண வடிவம் பெற்று விட வேண்டுமெனத் துடிக்கிறது. ஆனால் அவ்வடிவம்பெற்று M' ஆனதுமே, திரும்பவும் தன்னைத் திறனுடை-மூலதனமாக்கிக் கொள்ளும் பொருட்டு அந்தப் பண வடிவத்தைக் களைத்தெறிய வேண்டுமெனத் துடிக்கிறது. மூலதனமானது பணத்தின் வேடத்தில் இருக்கும் வரை மூலதனமாகச் செயல்படுவதில்லை, ஆகவே அதன் மதிப்பு பெருகுவதில்லை. மூலதனம் அப்போது தரிசு நிலமாய் விளைச்சலற்றதாய் இருக்கிறது. M ஆனது இங்கே சுற்றோட்ட ஊடகமே என்றாலும் மூலதனத்தின் சுற்றோட்ட ஊடகமாகப் பணியாற்றுகிறது. மூலதன-மதிப்பின் பண வடிவமானது முதல் வகைச் சுற்றில் (பண மூலதனச் சுற்றில்) சுயேச்சையுடையதாகக் காட்டும் கோலம் இந்த இரண்டாம் வகைச் சுற்றில் மறைந்து விடுகிறது.
சந்தையில் உற்பத்திச் சாதனங்கள் கிடைக்காமற் போகுமாயின் --- சுற்று, மறுவுற்பத்தி நிகழ்முறை தடைபட்டு விடுகிறது. மூலதனம் அதன் சரக்கு-மூலதன வடிவத்தை களைந்து விட்டு முன் செல்ல முடியாமற் போகும்போது நேர்வது போலவே இப்போதும் இந்நிகழ்முறை தடைபட்டு விடுகிறது. ஒரேயொரு வேறுபாடு என்னவென்றால், மூலதனத்தால் தற்காலிக வடிவான சரக்கு வடிவத்தைக் காட்டிலும் அதிக காலத்துக்குப் பண..வடிவத்தில் நீடிக்க முடியும். மூலதனம் பண-மூலதனத்துக்குரிய பணிகளை செய்யா விட்டாலும் கூட தொடர்ந்து அது பணமாகவேதான் இருந்து வருகிறது. ஆனால் அது சரக்கு-மூலதனத்துக்குரிய பணியைச் செய்யமுடியாதபடி அதிக காலம் தடுக்கப்படுமாயின், அது சரக்காகவோ, பொதுவில் பயன்-மதிப்பாகவோ இருக்க முடிவதில்லை. மேலும் பண-வடிவில் இருக்கையில் மூல வடிவமாகிய திறனுடை-மூலதன வடிவத்துக்குப் பதில் அதனால் பிரிதொன்றை ஏற்க முடியும்; ஆனால் C' என்னும் வடிவில் வைக்கைப்பட்டிருக்கையில் அதனால் அசையவே முடியாது.
M - C ஒரு தனிப்பட்ட மூலதனத்தின் சுற்றோட்டத்திலிருந்தே பிறந்ததென்றாலும், அச்சுற்றோட்டத்தில் உட்படவில்லை. ஆனால், தொழிலாளி வர்க்கம் என்ற ஒன்று தொடர்ந்து இருப்பது முதலாளி வர்க்கத்துக்கு அவசியம் என்பதுதான் இந்த நுகர்வை சாத்தியமாக்குகிறது. தொழிலாளியின் நுகர்வும் அவ்வாறே அவசியம்; M - C என்பதுதான் இந்த நுகர்வை சாத்தியமாக்குகிறது.
பெருந்திரள் உற்பத்தியை நேரடியாக வாங்குவோர் ஏனைய தொழில் துறை முதலாளிகளைத் தவிர்த்து, மொத்த வர்த்தகர்களே தவிர வேறு யாருமல்ல. சரக்குகளின் நுகர்வு அவற்றை தோற்றுவித்த மூலதனத்தின் சுற்றில் சேருவதில்லை. உற்பத்திப் பொருள் விற்கப்பட்டு விடுமானால் எல்லாம் முறைப்படி ஒழுங்காய் நடைபெறுவதாக முதலாளித்துவ உற்பத்தியாளர் கருதுகிறார்.
இந்நிகழ்முறை மேலும் விரிவடையுமானால் உற்பத்திச் சாதனங்கள் உற்பத்தித் திறனுள்ள முறையில் நுகரப்படுவதின் அதிகரிப்பும் இந்த விரிவாக்கத்தில் அடங்கும். மூலதனத்தின் இந்த மறுவுற்பத்தியுடன் கூடவே, தொழிலாளர்களுடைய தனிப்பட்ட சொந்த நுகர்வும் அதிகரித்துச் செல்லும். அதோடு சேர்ந்து முதலாளியின் தனிப்பட்ட சொந்த நுகர்வும் அதிகரித்துக் கொண்டும், மறுவுற்பத்தி நிகழ்முறை முழுவதுமே செழித்து ஓங்கிக் கொண்டும் இருக்கலாம்.
ஆனால் அதே போது சரக்குகளின் ஒரு பகுதி இன்னமும் விற்கப்படாமல் வியாபாரிகளின் கையிலேயே தங்கிவிடலாம், சந்தையை விட்டு நகராமல் முடங்கி விடலாம்; அதாவது அவை நுகரப்படுவதாகத் தெரிவது வெறும் வெளித் தோற்றமாய் இருக்கலாம். திரள் திரளாகச் சரக்குகள் பெருக்கெடுத்து ஓடி வருகின்றன. முந்தையப் பெருக்குகள் நுகரப்பட்டு விட்டதாகப் புலப்படுவது வெறும் வெளித் தோற்றமே என்று இறுதியில் தெரிய வருகிறது. சரக்கு விற்பதற்காகச் சரக்கு-மூலதனங்கள் ஒன்றோடொன்று போட்டி போடுகின்றன. தாமதமாய் வந்து சேர்வோரால் விற்க முடிவதில்லை. அவர்கள்விலையை குறைத்து விற்க வேண்டியதாகிறது. முந்தைய பெருக்குகளைச் சேர்ந்த சரக்குகள் இன்னமும் விற்கப்பட்டாகவில்லை, அதற்குள் அவற்றுக்குப் பணம் செலுத்த வேண்டிய நேரம் வந்துவிடுகிறது. இந்நிலையில் இந்தச் சரக்குகளின் உடைமையாளர்கள் போண்டியாக வேண்டும். இல்லையேல் கடனை அடைக்கும் பொருட்டு எந்த விலைக்கு வேண்டுமானாலும் விற்க முற்பட்டாக வேண்டும். உள்ளபடியே சரக்குகளுக்கான வேண்டலின் நிலவரம் காரணமாய் இப்படி விலையைக் குறைத்து விற்க நேர்வதில்லை. பணக் கொடுப்புக்கான வேண்டலின் (demand for payment) காரணமாகவே, சரக்கை பணமாக மாற்ற வேண்டிய அவசியத் தேவையின் காரணமாகவே இப்படி நேர்கிறது. இதைத் தொடர்ந்து நெருக்கடி (crisis) வெடிக்கிறது. இந்த நெருக்கடி கண்கூடாவது எங்கே? --- நுகர்வோரின் வேண்டல் (consumer demand), தனிப்பட்டோரது சொந்த நுகர்வுக்கான வேண்டல் நேரடியாக குறுகிக் குறைந்து விடுவது அல்ல; மூலதனத்துக்கும் மூலதனத்துக்கும் நடைபெறும் பரிவர்த்தனைகள், மூலதனத்தின் மறுவுற்பத்தி நிகழ்முறை குறுகிக் குறைந்து விடுவதில் அது கண் கூடாகிறது.
பணம் இருப்பில் நிற்பது அதன் சுற்றோட்டதுக்காக சுற்றோட்டத்தால் நிர்ணயிக்கப்படும் பணியே ஆகும். ஆக, அது வாங்கலுக்கும், கொடுப்புக்குமான நிதியாக நிலவுதல் என்பது, அதன் இயக்கத்தின் தாற்காலிக நிறுத்தம் என்பது, அதன் சுற்றோட்டம் தடைபடுதல் என்பது, பண-மூலதனமென்ற முறையில் பணம் அதன் பணிகளில் ஒன்றை நிறைவேற்றுவதாகும். எப்படியெனில், தாற்காலிகமாக ஒய்வில் இருந்து வரும் பணமானது, பண-மூலதனமான Mஇன் (M' - m = M) ஒரு பகுதியாகும்; Pக்குச் சமமான சரக்கு-மூலதன மதிப்பு பாகத்தில் ஒரு பகுதியாகும்.
மறு புறம், சுற்றோட்டத்திலிருந்து விலக்கப்படும் பணமெல்லாம் சேர்ப்பின் வடிவம் பெறுகிறது. M - Cஇல் வாங்கற் சாதனம் அல்லது கொடுப்புச் சாதனம் என்ற பணத்தின் பணி பண-மூலதனத்தின் பணியாவது போலவே, இங்கே சேர்ப்பின் வடிவிலுள்ள பணத்தின் பணி பண-மூலதனத்தின் பணியாகிறது.
பண-மூலதனமானது பணமாகவே தொடர்ந்து நீடிக்கிறதென்றால் --- இந்நிலை தக்கதாயினும் தகாததாயினும், தானாகவே ஏற்படுவதாயினும் விரும்பி உண்டாக்கப் பெறுவதாயினும், அதன் பணிகளுக்கு இசைவானதாயினும் ஒவ்வாததாயினும் --- இயக்கம் தடைபடுவதே அதற்குக் காரணம்.

No comments:
Post a Comment