I. M - C ... P ... C' - M'
II. P ... C' - M' - C ... P
III. C' - M' - C ... P ... C'
இந்த மூன்று வகைச் சுற்றுகளையும் சேர்த்துப் பார்த்தால், நிகழ்முறையின் முதனிலைகள் யாவும் நிகழ்முறையின் விளைவாய்த் தெரிகின்றன; நிகழ்முறையே உண்டாக்கிய முதனிலைகளாய்த் தெரிகின்றன. ஒவ்வொரு உறுப்பும் தொடக்க நிலையாகவும், இடை நிலையாகவும், மீள்வு நிலையாகவும் தெரிகிறது. நிகழ்முறை முழுவதும் உற்பத்தி நிகழ்முறை, சுற்றோட்ட நிகழ்முறை ஆகியவற்றின் ஒன்றிப்பாகத் தெரிகிறது. உற்பத்தி நிகழ்முறை சுற்றோட்ட நிகழ்முறையின் இடைக் கண்ணியாகிறது.

மதிப்பின் தற்பெருக்கமே தீர்மானகரமான நோக்கம், பிராதானக் குறி [compelling motive] என்பது மூன்று சுற்றுகளுக்கும் பொது.
இடையறாது சுழலும் வட்டத்தில் ஒவ்வொரு புள்ளியும் ஒரே சமயத்தில் புறப்பாட்டு நிலையாகவும் மீள்வு நிலையாகவும் இருக்கிறது. சுழற்சியை இடைமறித்தால், புறப்பாட்டு நிலை ஒவ்வொன்றுமே மீள்வு நிலை ஆகாது. இவ்வாறு, ஒவ்வொரு குறிப்பிட்ட வகைச் சுற்றுக்கும் ஏனைய வகைச் சுற்றுகள் (உட்கிடையாக) தேவைப்படுவது மட்டுமல்லாமல், ஒரு வகைச் சுற்றின் மறு நிகழ்வு ஏனைய வகைச் சுற்றுகளின் நிகழ்வைத் தன்னுள் கொண்டதாய் இருக்கக் கண்டோம். எனவே, வேறுபாடு முழுவதுமே வெறும் வடிவ வேறுபாடாக, பார்க்கிறவருக்கு மட்டுமே ஆன அகவய வேறுபாடாக [subjective distinction] இருக்கிறது.
உண்மையில் ஒவ்வொரு தனிப்பட்ட தொழில் துறை மூலதனமும் ஒரே சமயத்தில் மூன்று வகைச் சுற்றுகளிலும் ஈடுபட்டுள்ளன. மூன்று வகை மூலதனங்களின் மறுவுற்பத்தி வடிவங்களான இந்த மூன்று வகைச் சுற்றுகளும் ஒருங்கே தொடர்ந்து நடைபெறுகின்றன.
மூலதனம் சுற்றை நிகழ்த்துவது என்பது ஓயாத இடை மறிப்பு நிகழ்முறை ஆகும்; மூலதனம் ஒரு கட்டத்தை விட்டு அடுத்த கட்டத்துக்குள் புகுவது ஆகும்; ஒரு வடிவத்தைக் களைந்து விட்டு வேறொரு வடிவம் பூணுவது ஆகும். இந்த கட்டங்கள் ஒவ்வொன்றும் அடுத்த கட்டத்தை அவசியமாக்குகிறது; ஆனால் இது அதுவாய் இல்லை.
ஆனால் தொடர்ச்சி என்பது முதலாளித்துவப் பொருளுற்பத்திக்கே உரிய தனி இயல்பு; அதன் தொழில் நுட்ப அடிப்படைக்கே அவசியமானது, ஆனால் எப்போதும் முழு அளவுக்கு வரப் பெறுவதில்லை.
உண்மையில் தொழில் துறை மூலதனத்தின் தொடர்ச்சியான சுற்று என்பது சுற்றோட்ட நிகழ்முறை, உற்பத்தி நிகழ்முறை ஆகியவற்றின் ஒன்றிப்பு மட்டுமல்ல, அதன் மூன்று வகைச் சுற்றுகளின் ஒன்றிப்பு ஆகும். ஆனால் இத்தகைய ஒன்றிப்பாக இருக்க வேண்டுமானால், வெவ்வேறு மூலதனப் பகுதிகள் ஒவ்வொன்றும் சுற்றின் வரிசைத் தொடரான கட்டங்களை வரிசைத் தொடராய் கடக்கக் கூடியதாய் இருந்தால்தான் முடியும்.
இந்தப் பல்வேறு மூலதனப் பகுதிகளும் அடுத்தடுத்து வரிசையாக வருதல் அவற்றின் ஏககால நிலவலால், அதாவது மூலதனம் பகுக்கப்பட்டிருக்கிற முறையால் விளைவதாகும்.
உற்பத்தியின் தொடர்ச்சியை நிர்ணயிக்கிற ஏககால நிலவல் என்பது மூலதனப் பகுதியின் பல்வேறு கட்டங்களையும் அடுத்தடுத்து வரிசையாய் கடக்கும் இயக்கத்திலிருந்தே விளைகிறது. அடுத்தடுத்து வரிசையாக வருவதன் விளைவே ஏககால நிலவல்.
ஒவ்வொரு வகைச் சுற்றும் மூலதனத்தின் பணிவழிப்பட்ட வடிவங்களில் ஒன்றைப் புறப்பாட்டு நிலையாகவும் மீள்வு நிலையாகவும் கொண்டுள்ளது. உண்மையில் மொத்த நிகழ்முறை என்பது மூவகைச் சுற்றுகளின் ஒன்றிப்பே. நிகழ்முறை தொடர்ச்சியாக நடைபெறுவதை இச்சுற்றுகள் வெவ்வேறு விதமாய் தெரிவிக்கின்றன. மொத்தச் சுற்றானது மூலதனத்தின் பணிவழிப்பட்ட வடிவம் ஒவ்வொன்றுக்கும் தன் பிரத்தியேகச் சுற்றாக விளங்குகிறது. இந்த ஒவ்வொரு சுற்றும் மொத்த நிகழ்முறை தொடர்ச்சியகா நடைபெறுவதற்குரிய நிபந்தனை ஆகிறது. மூலதனத்தின் பணி வழிப்பட்ட வடிவம் ஒவ்வொன்றின் சுற்றும் ஏனையவற்றின் சுற்றைச் சார்ந்ததாகும். உற்பத்தி நிகழ்முறை அதே போது மறுவுற்பத்தி நிகழ்முறையாக இருப்பதும், ஆகவே ஒவ்வொரு சுற்றாக இருப்பதும் ஒட்டுமொத்த நிகழ்முறைக்கும், ஆகவே சமுதாய மூலதனத்துக்கும் இன்றியமையாத தேவையாகும். மூலதனத்தின் பல்வேறு பகுதிகள் பல்வேறு கட்டங்களையும் பணிவழிப்பட்ட வடிவங்களையும் ஒன்றன் பின் ஒன்றாய் கடக்கின்றன. ஆகவே, ஒவ்வொரு பணிவழிப்பட்ட வடிவமும் ---- இவ்வடிவம் பூணுகிற மூலதனப் பகுதி தொடர்ந்து மாறிக் கொண்டே இருந்த போதிலும் --- ஏனைய வடிவங்களோடு ஏககாலத்தில் அதன் சுற்றை நிகழ்த்துகிறது.
ஒட்டுமொத்தமாய் மூலதனமானது அதன் வெவ்வேறு கட்டங்களில் ஏக காலத்தில் ஒன்றை அடுத்து ஒன்றாய் நிலவுகிறது. ஆனால் ஒன்றன் பின் ஒன்றாய் ஒவ்வொரு பகுதியும் ஒரு கட்டத்திலிருந்து அடுத்த கட்டத்துக்கு, ஒரு பணிவழிப்பட்ட வடிவத்திலிருந்து அடுத்த பணி வழிப்பட்ட வடிவத்துக்கு இடையறாமல் சென்று கொண்டிருக்கிறது; இவ்விதம் மாறி மாறி எல்லாக் கட்டங்களிலும் செயல்படுகிறது. ஆகவே, அதன் வடிவங்கள் மாறி கொண்டேயிருப்பவை. அவை அடுத்தடுத்து வரிசையாக வருகின்றன; ஆகவே ஏக காலத்தில் நிலவுகின்றன. ஒவ்வொரு வடிவமும் இன்னொன்றைப் பின்தொடர்வதாகவும், அதே போது அதற்கு முன் செல்வதாகவும் இருக்கிறது; இதனால், ஒரு மூலதனப் பகுதி குறிப்பிட்ட ஒரு வடிவத்துக்குத் திரும்புகையில் இன்னொரு பகுதி வேறு ஒரு வடிவத்துக்கு திரும்புவது அவசியமாகிறது. ஒவ்வொரு பகுதியும் தொடர்ச்சியாக அதனதன் சுற்றை நிகழ்த்துகிறது. ஆனால் எப்போதுமே மூலதனத்தின் இன்னொரு பகுதிதான் இவ்வடிவத்தை வந்தடைகிறது; இந்தத் தனித்தனிச் சுற்றுகள் ஒட்டுமொத்த நிகழ்முறையின் உறுப்புகளே, ஏககாலத்தியவையும், வரிசையாக அடுத்தடுத்து வருபவையுமான உறுப்புகளே ஆகும்.
தற்பெருக்கமடையும் மதிப்பு என்ற முறையில் மூலதனம் குறிப்பது வர்க்க உறவுகளை மட்டுமல்ல; உழைப்பு கூலியுழைப்பாய் இருப்பதை அடிப்படையாகக் கொண்ட குறிப்பிட்ட ஒரு சமூகத் தன்மையை மட்டுமல்ல. அது ஓர் இயக்கம், வெவ்வேறு கட்டங்களின் வழியாகச் செல்லும் சுற்று நிகழ்முறை; இந்தச் சுற்று நிகழ்முறையில் வெவ்வேறு வகைப்பட்ட மூன்று சுற்று நிகழ்முறைகள் அடக்கமாகும். எனவே, மூலதனத்தை இயக்கமாகப் புரிந்து கொள்ள முடியுமே தவிர, அசைவற்றதாய்ப் புரிந்து கொள்ள முடியாது. மதிப்பின் சுயேச்சை நிலையை வெறும் சூக்கும நிலையாகக் கொள்வோர் தொழில் துறை மூலதனத்தின் இயக்கமானது சூக்குமத்தின் செயல் நிலைதான் என்பதை மறந்து விடுகிறார்கள்.
தனிப்பட்ட தொழில் துறை முதலாளி ஒருவர் சரக்குகளையும் உழைப்பையும் விலைக்கு வாங்குகிறவராகவும், சரக்குகளை விற்கிறவராகவும், திறனுடை-மூலதனத்தின் உடைமையாளராகவும் செயல்பட்டு, இவ்விதம் மூலதனச் சுற்றை நிகழச் செய்யும் போது, மூலதனத்தின் செயல்கள் அந்த முதலாளி செய்யும் வேலைகளாக காட்சி அளிக்கின்றன. சமுதாய மூலதனத்தின் மதிப்பில் திடீர் மாற்றம் ஏற்படுமானால், இந்த மதிப்பு மாற்ற நிலைமைகளுக்குத் தகவமைய முடியாமல் தனிப்பட்ட முதலாளியின் மூலதனம் அதற்கு பலியாகி மடிந்து போக நேரலாம். மதிப்பிலான இப்படிப்பட்ட திடீர் மாற்றங்கள் எவ்வளவுக்கு எவ்வளவு கடுமையாகவும் அடிக்கடியும் நிகழ்கின்றனவோ, சுயேச்சையான மதிப்பின் தன்னியல்பான இயக்கம் அவ்வளவுக்கு அவ்வளவு இயற்கை உற்பாதத்துக்குரிய மூர்க்கதுடன் செயல்பட்டு தனிப்பட்ட முதலாளியின் முன் யோசனைகளையும் கணக்கீடுகளையும் தகர்த்துவிடுகிறது. இயல்பான உற்பத்தி இயல்பு மீறிய ஊக வாணிபத்துக்கு [speculation] அவ்வளவுக்கு அவ்வளவு அடிபணிந்து விடுகிறது. தனிப்பட்ட மூலதனங்கள் அவ்வளவுக்கு அவ்வளவு ஆபத்துக்குள்ளாகின்றன. ஆகவே, காலவட்ட முறையில் மதிப்பில் ஏற்படும் இந்த திடீர் மாற்றங்கள், மதிப்பானது மூலதனமாக சுயேச்சை நிலை பெற்று அதன் இயக்கத்தின் மூலம் இந்நிலையை காப்பாற்றி வலுப்படுத்திச் செல்வதை பொய்யென நிரூபிப்பதற்கு பதில் மெய்யென நிரூபித்துக் காட்டுகின்றன.
நிகழ்முறையின் போது மூலதனம் அடுத்தடுத்து வரிசையாய் அடையும் உருமாற்றங்கள், சுற்றில் சுற்றி வரும் மூலதனத்தின் மதிப்பில் ஏற்படும் மாற்றத்தை அதன் ஆரம்ப மதிப்போடு ஓயாமல் ஒப்பிடுதலைக் குறிக்கின்றன. மதிப்பைப் படைக்கும் சக்தியான உழைப்புச் சக்தியிடமிருந்து மதிப்பு சுயேச்சை நிலை பெறுதல் M - L (உழைப்புச் சக்தியை விலைக்கு வாங்குதல்) என்னும் செயலிலிருந்து ஆரம்பமாகி உற்பத்தி நிகழ்முறையின் போது உழைப்புச் சக்தியின் மீதான சுரண்டலாக [exploitation of labour-power] நடந்தேறுகிறது. ஆனால் மதிப்பு இவ்விதம் சுயேச்சை நிலை பெறுதல் மூலதனச் சுற்றில் திரும்பவும் தலைகாட்டுவதில்லை.
முதலாளித்துவ பொருளுற்பத்தியின் வளர்ச்சியைத் தொடர்ந்து, ஒவ்வொரு தனிப்பட்ட உற்பத்தி நிகழ்முறையின் அளவீதம் [scale] அத்துடன் முன்னீடு செய்ய வேண்டிய மூலதனத்தின் குறைந்தபட்ச அளவும் பெருகிச் செல்வதால், தொழில் துறை முதலாளி புரியும் பணியை தனியாகவோ கூட்டாகவோ செயல்படக் கூடிய பெரும் பெரும் பண முதலாளிகளின் ஏகபோகமாக [monopoly] மேலும் மேலும் மாற்றிச் செல்கிற ஏனைய நிலைமைகளோடு இதுவும் சேர்ந்து கொள்கிறது.
முடிந்த வரை பொருளுற்பத்தி முழுவதையும் சரக்கு உற்பத்தியாக மாற்றுவதே முதலாளித்துவ பொருளுற்பத்தி முறையின் போக்கு. உற்பத்தி முழுவதையும் முதலாளித்துவச் சுற்றோட்ட நிகழ்முறைக்குள் ஈர்ப்பதே இதைச் செய்திட அது கையாளும் பிரதான வழி. வளர்ச்சியடைந்த சரக்கு உற்பத்தி என்றாலே முதலாளித்துவச் சரக்கு உற்பத்திதான். தொழில் துறை மூலதனத்தின் தலையீடு எங்குமே இந்த மாற்றத்தைத் தூண்டுகிறது. அதோடு, நேரடி உற்பத்தியாளர்கள் எல்லோரும் கூலித் தொழிலாளர்களாவதையும் துரிதப்படுத்துகிறது.
சரக்கு விற்பனை வணிக மூலதனத்தின் [merchant's capital] பணியென்ற முறையில் முதலாளித்துவப் பொருளுற்பத்தியின் முதனிலகளில் ஒன்று; முதலாளித்துவ பொருளுற்பத்தியின் வளர்ச்சியைத் தொடர்ந்து மேன்மேலும் வளர்ந்து செல்வது.
முதலாளித்துவ பொருளுற்பத்தியின் முதல் சகாப்தத்தில் கடன்-செலாவணி எப்பங்கும் வகிப்பதில்லை, அல்லது சொற்பப் பங்கே வகிக்கிறது.
பணத்தின் ஓட்ட வேகம் [velocity of currency] எவ்வளவுக்கு எவ்வளவு வேகமாய் சரக்குகளாகவும் பணமாகவும் வரிசையாய் உருமாற்றம் அடைந்து செல்கிறதோ, அவ்வளவுக்கு அவ்வளவு அதிகமான தொழில் துறை மூலதனங்களை (அல்லது சரக்கு மூலதன வடிவிலான தனிப்பட்ட மூலதனங்களை) சுற்றோட்டத்தில் விடுகிறது.
மூலதனத்தின் சுற்றோட்ட நிகழ்முறை சாதாரண சுற்றோட்டச் செயல்களின் தொடராய் அமையும் போதுதான் பொதுவான சரக்குச் சுற்றோட்டத்தின் விதிகள் அதனை ஆள்கின்றன. தனிப்பட்ட தொழில் துறை மூலதனங்கள் நிகழ்த்தும் சுற்றுகளின் பணி வழிப்பட்ட பிரிவுகளாக இச்சுற்றோட்டச் செயல்கள் அமையும் போது அல்ல.
ஒரு கட்டத்திலுள்ள குறிப்பிட்ட சரக்கின் உருமாற்றம் இன்னொரு கட்டத்திலுள்ள இன்னொரு சரக்கின் உருமாற்றத்தோடு பின்னிப் பிணைந்திருப்பது தொடர்பாக தரப்படும் விளக்கம், முதலாளி சரக்குகளை வாங்குபவராகவும் விற்பவராகவும் செயல்பட்டுக் கொண்டிருக்கும் வரையில், எனவே அவரது மூலதனம் மற்றொரு முதலாளியின் பணத்துக்கு எதிரான சரக்குகளின் வடிவில் செயல்பட்டுக் கொண்டிருக்கும் வரை மூலதனச் சுற்றோட்டத்துக்கும் பொருந்தும். ஆனால் சரக்கு உருமாற்றங்கள் இப்படி பின்னிப் பிணைவது வேறு; மூலதன உருமாற்றங்கள் பின்னிப் பிணைவது வேறு.
மொத்த சமுதாய மூலதனத்தின் அடக்கக் கூறுகளாகிய சுயேச்சையான பல்வேறு தனிப்பட்ட மூலதனங்களும் --- மூலதனம் தொடர்பாகவும், அதே போல் உபரி-மதிப்பு தொடர்பாகவும் --- சுற்றோட்ட நிகழ்முறையில் ஒன்றையொன்று மாற்றீடு செய்து கொள்ளும் விதம், சரக்கு சுற்றோட்டத்தில் நிகழும் உருமாற்றங்களின் சாதாரண பின்னிப் பிணைதலிலிருந்து புலனாவதில்லை; மூலதனச் சுற்றோட்டச் செயல்களுக்கும் இதர அனைத்து வகைச் சரக்குச் சுற்றோட்டச் செயல்களுக்கும் பொதுவானதாகிய இந்தப் பின்னிப் பிணைதலிலிருந்து புலனாவதில்லை.
___________________________
தொழில் துறை மூலதனத்தின் சுற்றின், ஆகவே முதலாளித்துவப் பொருளுற்பத்தியின் தெளிவாய்ப் புலப்படும் தனித் தன்மைகளில் ஒன்றாய் அமையும் நிலைமை என்னவென்றால், ஒரு புறம் திறனுடை-மூலதனத்தின் அடக்கக் கூறுகள் சரக்குச் சந்தையிலிருந்து பெறப்படுபவை; அச்சந்தையிலிருந்து தொடர்ச்சியாகப் புதுப்பிக்கப்பட வேண்டியவை; சரக்குகளாக விலைக்கு வாங்கப்பட வேண்டியவை. மறு புறம் உழைப்பு நிகழ்முறையின் உற்பத்திப் பொருட்கள் அந்நிகழ்முறையிலிருந்து சரக்குகளாக வெளிவருபவை; ஓயாமல் திரும்பத்திரும்ப சரக்குகளாக விற்கப்பட வேண்டியவை.
கடன்-செலாவணிப் பொருளாதாரம் எனப்படுவது பணப் பொருளாதாரத்தின் வடிவங்களில் ஒன்றுதான். ஏனெனில், இரண்டு பதங்களுமே உற்பத்தியாளர்களுக்குள் நடக்கும் பரிவர்த்தனைப் பணிகள் அல்லது முறைகளைத் தெரிவிக்கின்றன.
இவை, எந்த விதத்திலும், இயற்கைப் பொருளாதாரத்தைப் போல் சுயேச்சையான பரிவர்த்தனை வடிவங்களல்ல.
உண்மையில் முதலாளித்துவ பொருளுற்பத்தி என்பது, சரக்கு உற்பத்தியே பொருளுற்பத்தியின் பொது வடிவமாய் இருப்பதாகும். ஆனால் அது அப்படி இருப்பதற்கும், அதன் வளர்ச்சிப் போக்கில் மேலும் மேலும் இப்படி ஆவதற்கும் ஒரே காரணம், உழைப்பே இங்கு சரக்காகி விடுகிறது என்பதுதான். தொழிலாளி தமது உழைப்பை, அதாவது தமது உழைப்புச் சக்தியின் பணியை விற்கிறார். அதன் மதிப்புக்கே --- அதற்காகும் மறுவுற்பத்திச் செலவினால் நிர்ணயிக்கப்படுவதான அதன் மதிப்புக்கே --- விற்பதாகக் கொள்கிறோம். உழைப்பு எந்த அளவுக்கு கூலி உழைப்பாகிறதோ, உற்பத்தியாளர் அந்த அளவுக்குத் தொழில் துறை முதலாளியாகிறார். எனவேதான், நேரடி விவசாய உற்பத்தியாளர் கூலித் தொழிலாளியாகும் வரை, முதலாளித்துவப் பொருளுற்பத்தி (எனவே சரக்கு உற்பத்தியும் கூட) அதன் முழு வீச்சை அடைவதில்லை.
எல்லோரும் நேர்மையற்றுத் தொழில் புரிவதில் குறியாய் இருக்கும் முதலாளித்துவ உலகில், உற்பத்தி முறையின் தன்மையை அதற்குரிய பரிவர்த்தனை முறையின் அடிப்படையாகக் காண்பதற்கு பதில், பரிவர்த்தனை முறையை [mode of exchange] உற்பத்தி முறையின் அடிப்படையாகக் காண்பதில் வியப்பில்லைதான்.
_________________________________
முதலாளி சுற்றோட்டத்திற்குள் செலுத்தும் பண வடிவிலான மதிப்பு, அவர் அதிலிருந்து எடுப்பதைக் காட்டிலும் குறைவாகும். ஏனென்றால் அவர் சரக்குகளின் வடிவில் அதற்குள் செலுத்தும் மதிப்பு, சரக்குகளின் வடிவில் அதிலிருந்து எடுப்பதைக் காட்டிலும் அதிகமாகும்.
முதலாளி என்றாலே, "வாங்கும்போது குறைவாய்க் கொடுக்க வேண்டும்; விற்கும் போது அதிகமாய்ப் பெற வேண்டும்." எப்படி அவரால் இதைச் செய்ய முடிகிறது? குறைந்த விலைக்கு வாங்கிய சரக்கை --- மதிப்பு குறைவென்பதால் விலையும் குறைவு --- அவர் அதிக மதிப்புள்ள, எனவே அதிக விலையுள்ள சரக்காக மாற்றுவதை முதலாளித்துவ பொருளுற்பத்தி நிகழ்முறை சாத்தியமாக்குவதால்தான் இதை செய்ய முடிகிறது. அவர் அதீத விலைக்கு விற்க முடிவதற்குக் காரணம் சரக்கின் மதிப்பு அதன் உற்பத்தி.. அடிக் கூறுகளின் மதிப்பைக் காட்டிலும் அதிகம் என்பதுதானே தவிர, சரக்கை அதன் மதிப்புக்கும் கூடுதலான விலைக்கு விற்கிறார் என்பதல்ல.
அவரது நோக்கம் தமது வழங்கலையும் வேண்டலையும் சமப்படுத்துவது அல்ல. அவற்றுக்கிடையிலான சமமின்மையை, வேண்டலை விட வழங்கலுக்குள்ள மிகைப்பாட்டை முடிந்த வரை அதிகப்படுத்துவதே அவரது நோக்கம். தனிப்பட்ட முதலாளிக்கு மட்டுமல்ல, முதலாளி வர்க்கத்துக்கே இது பொருந்தும்.
உழைப்புச் சக்திக்கான அவரது வேண்டலைப் பொறுத்த வரை, மதிப்பின் நோக்கில் அது அவரது மொத்த மூலதனத்தோடு அவரது மாறும்..மூலதனம் கொண்டுள்ள விகிதத்தால், அவரது v : C என்பதால் நிர்ணயிக்கப்படுகிறது. ஆகவே முதலாளித்துவ பொருளுற்பத்தியில் இந்த வேண்டல் உற்பத்திச் சாதனங்களுக்கான அவரது வேண்டலை விட ஒப்பளவில் சிறிதாகிச் செல்கிறது. அவர் Lஐக் காட்டிலும் mpஐ மேன்மேலும் அதிகமாய் வாங்குகிறார்.
தொழிலாளி பொதுவாகத் தமது கூலியை வாழ்வுச் சாதனங்களாக மாற்றிக் கொள்கிறார், மிகப் பெரும் பகுதியை அத்தியாவசியப் பண்டங்களாக மாற்றிக் கொள்கிறார் என்பதால், உழைப்புச் சக்திக்கான முதலாளியின் வேண்டல் என்பது ஒரு விதத்தில் தொழிலாளி வர்க்கத்துக்கு அத்தியாவசியமான நுகர்வு பண்டங்களுக்கான வேண்டலாகவும் இருக்கிறது. ஆனால் இந்த வேண்டல் vக்குச் சமம். இம்மியும் அதிகமல்ல.
முதலாளியின் வேண்டலின் மேல் வரம்பு c+vக்குச் சமமான Cஆகும். ஆனால் அவரது வழங்கல் c+v+s ஆகும்.
அவர் உற்பத்தி செய்யும் உபரி-மதிப்புத் திரளின் சதவீதம் (அவரது இலாப வீதம்) அதிகரிக்க அதிகரிக்க, அவரது வழங்கலுடன் ஒப்பிடுகையில் அவரது வேண்டல் மேலும் மேலும் குறைந்து செல்கிறது. உற்பத்தி வளர்ந்து முன்னேறும் போது உழைப்புச் சக்திக்கும், அதன் மூலமாய் அவசிய வாழ்வுச் சாதனங்களுக்குமான முதலாளியின் வேண்டல் உற்பத்திச் சாதனுங்களுக்கான அவரது வேண்டலுடன் ஒப்பிடுமிடத்து, மேலும் மேலும் குறைகிறது.
முதலாளி உபரி-மதிப்பு முழுவதையும் நுகர்ந்து விடுவதாகக் கொள்வது முதலாளித்துவ பொருளுற்பத்தி என்பதே இல்லை என்றும், ஆகவே தொழில் துறை முதலாளி என்பவரே இல்லை என்றும் கொள்வதற்கு ஒப்பானதே. ஏனெனில், பிரதானக் குறி [compelling motive] செல்வஞ்சேர்ப்பது அல்ல, சொந்த நுகர்வுதான் எனக் கொண்ட மாத்திரத்தில் முதலாளித்துவமே இல்லாது போகிறது,
மூலதனம் திரட்டும் பொருட்டு, முதலில் அவர் மூலதனத்திலிருந்து கிடைத்த உபரி-மதிப்பில் ஒரு பகுதியை சுற்றோட்டத்திலிருந்து பண வடிவில் எடுக்க வேண்டும்; பழைய தொழிலை விரிவாக்குவதற்கு அல்லது புதிய தொழில் தொடங்குவதற்குப் போதுமானதாய் வளரும் வரை அதனைப் பணச் சேர்ப்பாகச் சேர்த்து வைக்க வேண்டும். இந்தச் சேர்ப்பு சேர்ந்து கொண்டிருக்கும் வரை, முதலாளியின் வேண்டல் அதனால் பெருகாது. பணம் புழக்கமின்றி முடக்கப்படுகிறது. சரக்குகளை வழங்கி பெறப்பட்ட பணத்துக்குச் சமதையாக சரக்கு சந்தையிலிருந்து சரக்குகளை பெறுவதற்கு இந்தப் பணம் பயன்படுவதில்லை.

No comments:
Post a Comment