மூலதனம் உற்பத்தித் துறையில் இருக்கும் காலம் அதன் உற்பத்திக் காலம் [time of production] ஆகும்; சுற்றோட்டத் துறையில் இருக்கும் காலம் அதன் சுற்றோட்டக் காலம் [time of circulation] ஆகும்; ஆகவே, அதன் உற்பத்திக் காலம், சுற்றோட்டக் காலம் ஆகியவற்றின் கூட்டுத் தொகையே அது தனது சுற்றை நிகழ்த்துவதற்கு மொத்தத்தில் ஆகும் காலம்.
பொதுவாக உற்பத்திச் சாதனங்களின் உற்பத்திக் காலம பின் வருவனவற்றால் ஆனது: (1) அவை உற்பத்திச் சாதனங்களாகச் செயல்படுகிற , இவ்விதம் உற்பத்தி நிகழ்முறையில் பயன்படுகிற காலம்; (2) உற்பத்தி நிகழ்முறையும் இவ்விதம் அதற்குரிய உற்பத்திச் சாதனங்களின் பணியும் தடைபடும் இடைநிறுத்தங்கள்; (3) இந்நிகழ்முறையின் இன்றியமையாத் தேவைகள் என்ற முறையில் அவை சேம வைப்பில் இருந்து வரும் காலம். அவை இப்படி இருக்கும் போதே திறனுடை-மூலதனத்தைக் குறிக்கின்றன; ஆனால் இன்னும் உற்பத்தி நிகழ்முறையில் பங்கு பெறவில்லை.
திறனுடை-மூலதனம் உற்பத்தி நிகழ்முறையில் செயல்படாமல் உற்பத்தித் துறையில் உள்ளுறை நிலையில் இருந்து வருவதிலிருந்தே, அல்லது உழைப்பு நிகழ்முறையில் பங்கேற்காமல் உற்பத்தி நிகழ்முறையில் செயல்படுவதிலிருந்தே எப்போதும் இந்த மிகைப்பாடு எழுகிறது.
திறனுடை-மூலதனம் உள்ளுறை நிலையில் இருக்கும்போது அது ஓய்ந்திருக்கும் மூலதனமாகும்; ஆயின் இப்படி அது ஒய்ந்திருப்பது உற்பத்தி நிகழ்முறையின் தடையற்ற ஓட்டத்துக்கு இன்றியமையாதது.
உற்பத்தி நிகழ்முறையின் போது உழைப்பின் இலக்குப் பொருள் சந்திக்க வேண்டியிருக்கும் உழைப்புக் காலத்திலான இடைவேளைகள் மதிப்பையோ உபரி-மதிப்பையோ உண்டாக்கப் பயன்படுபவை அல்ல. ஆனால் அவை உற்பத்திப் பொருளை முன்செல்ல வைப்பவை; அதன் உருவாக்கக் காலத்தின் ஒரு பகுதியாய் இருப்பவை; அது கடந்து சென்றாக வேண்டிய நிகழ்முறை ஆகிறவை.
உள்ளுறை மூலதனத்தின் மற்றொரு பகுதியான இயந்திர சாதனம், கட்டடங்கள் போன்ற உழைப்புச் சாதனங்களின் பணி உற்பத்தி நிகழ்முறையில் முறையாக ஏற்படும் இடைநிறுத்தங்களால் தடைபடுகிறது; இந்தப் பகுதி உற்பத்திப் பொருளை உண்டாக்குவதில் பங்கு கொள்ளாமலே மதிப்பைக் கூடுதலாக்குகிறது.
உற்பத்திக் காலமும் உழைப்புக் காலமும் எவ்வளவுக்கு எவ்வளவு சமமாகின்றனவோ, குறிப்பிட்ட கால எல்லைக்குள் குறிப்பிட்ட திறனுடை-மூலதனத்தின் உற்பத்தித் திறனும் தற்பெருக்கமும் அவளவுக்கு அவ்வளவு அதிகமாகின்றன என்பது தெளிவு. இதனால்தான் உழைப்புக் காலத்தை விட உற்பத்திக் காலத்துக்குள்ள் மிகைப்பாட்டை முதலாளித்துவ பொருளுற்பத்திமுறை முடிந்த வரை குறைக்க முயல்கிறது. உற்பத்திக் காலத்துக்கும் உழைப்புக் காலத்துக்கும் இடையிலான வேறுபாடு மூலதனத்துக்கு மூலதனம் மாறுபடலாம் என்றாலும், உழைப்புக் காலம் எப்போதுமே உற்பத்திக் காலத்தில் அடக்கம். முன்னதை விட பின்னது மிகையாதல் உற்பத்தி நிகழ்முறைக்கு இன்றியமையாதது. ஆக, எப்போதுமே உற்பத்திக் காலம் என்பது, மூலதனம் உள்ளுறை நிலையில் இருக்கிற அல்லது தன் மதிப்பைப் பெருக்கிக் கொள்ளாமல் உற்பத்தி செய்கிற காலத்தையும் தன்னுள் கொண்டது என்றாலும், அது பயன்-மதிப்புகளை உற்பத்தி செய்து தன் மதிப்பைப் பெருக்கிக் கொள்கிற காலம் ஆகும்; அதாவது அது திறனுடை-மூலதனமாகச் செயல்படுகிற காலம் ஆகும்.
சுற்றோட்ட காலமும் உற்பத்திக் காலமும் தனித்தனியானவை, ஒன்றையொன்று விலக்கிக் கொள்பவை. மூலதனம் அதன் சுற்றோட்ட காலத்தில் திறனுடை-மூலதனமாகச் செயல்படுவதில்லை. ஆகவே சரக்குகளையோ உபரி-மதிப்பையோ உற்பத்தி செய்வதில்லை.
மூலதன-மதிப்பின் சுற்றோட்டக் காலம் நீடிக்கும் வரை, அதன் உற்பத்தி நிகழ்முறையும், ஆகவே அதன் தற்பெருக்கமும் கூட தடைபெறுகின்றன என்பதும், உற்பத்தி நிகழ்முறையின் மறுநிகழ்வு சுற்றோட்டக் காலத்தின் அளவைப் பொறுத்து அதிகமான அல்லது குறைவான வேகத்தில் நடைபெறும் என்பதும் கண்கூடாகின்றன.
சுற்றோட்டக் காலத்தின் பெருக்கமும் சுருக்கமும் உற்பத்திக் காலத்தின் ... அல்லது குறிப்பிட்ட பருமனுள்ள மூலதனம் திறனுடை-மூலதனமாகச் செயல்படும் அளவுவீதத்தின் --- சுருக்கம் அல்லது பெருக்கத்துகு எதிர்மறை வரம்புகளாகின்றன.குறிப்பிட்ட மூலதனத்தின் சுற்றோட்ட உருமாற்றங்கள் எவ்வளவுக்கு எவ்வளவு கருத்தளவில் மட்டுமே நிகழ்கின்றனவோ, அதாவது சுற்றோட்டக் காலம் எவ்வளவுக்கு எவ்வளவு பூஜ்ஜியத்தை நெருங்குகின்றதோ, மூலதனம் அவ்வளவுக்கு அவ்வளவு அதிகமாய்ச் செயல்படுகிறது; அதன் உற்பத்தித் திறனும் அதன் மதிப்பின் தற்பெருக்கமும் அவ்வளவுக்கு அவ்வளவு அதிகமாகின்றன.
பொதுவாக மூலதனம் உபரி-மதிப்பை உண்டாக்கும் நிகழ்முறை மீது சுற்றோட்டக் காலம் ஏற்படுத்தக் கூடிய தாக்கத்தை மட்டும் பார்க்கிறது. விளைவுகள் நேர்நிலையானவை என்பதால், இந்த எதிர்மறைத் தாக்கத்தை நேர் நிலைத் தாக்கமாகக் கொள்கிறது. மூலதன-மதிப்பின் தற்பெருக்கத்துக்கு உற்பத்தி நிகழ்முறையோ, எனவே உழைப்பைச் சுரண்டுவதையோ சாராத மருமமான ஆதாரம் ஒன்று இருப்பதாகவும் இந்த ஆதாரம் சுற்றோட்டத் துறையில் இருப்பதாகவும் நிரூபிப்பதாய் தோன்றுவதால், இந்த வெளித் தோற்றத்தை அரசியல் பொருதாரம் இன்னும் பன்மடங்கு கெட்டியாய்ப் பற்றிக் கொள்கிறது.
பல்வேறு நிகழ்வுகள் இந்த மாயையை வலுப்படுத்துவது தெரிய வரும்:
(1) இலாபத்தை முதலாளித்துவ முறையில் கணக்கிடும் போது எதிர்மறைக் காரணம் நேர்நிலைக் காரணமாகத் தோன்றுகிறது; அதாவது சுற்றோட்டக் காலங்கள் மட்டும் வேறுபடக் கூடிய வெவ்வேறு முதலீட்டுத் துறைகளில் செயல்படும் மூலதனங்களைப் பொறுத்த வரை சுறோட்டக் காலத்தின் அதிகரிப்பு விலையுயர்வுக்கு ஏதுவாகிறது; சுருங்கச் சொல்லின் இலாபங்களை சமப்படுத்தும் காரணிகளில் ஒன்றாகிறது.
(2) சுற்றோட்ட காலம் என்பது புரள்வுக் காலத்தின் [time of turnover] ஒரு கட்டம்தான்; புரள்வுக் காலத்தில் உற்பத்தி அல்லது மறுவுற்பத்திக் காலமும் அடங்கும். உண்மையில் உற்பத்தி அல்லது மறுவுற்பத்திக் காலத்தால் விளவது சுற்றோட்டக் காலத்தால் விளைவதாகத் தோன்றுகிறது.
(3) சரக்குகள் மாறும்-மூலதனமாய் (கூலியாக) உருமாறுவதற்கு முன்னால் பணமாய் உருமாறியாக வேண்டும். ஆகவே, மூலதனத் திரட்டலில், சர்க்குகள் கூடுதல் மாறும்-மூலதனமாக உருமாறுவது சுற்றோட்டத் துறையில், அதாவது சுற்றோட்டக் காலத்தின் போது, நடைபெறுகிறது. ஆதலால், இவ்விதம் நடந்தேறும் மூலதனத் திரட்டலுக்கு சுற்றோட்டக் காலமே காரணம் என்பதாகத் தோன்றுகிறது.

No comments:
Post a Comment