வடிவ வேறுபாடுகள்
மாறா-மூலதனத்தின் ஒரு பகுதி அதன் துணை கொண்டு உற்பத்தி செய்யப்படும் பண்டங்களின் வடிவத்தை அடைந்து விடாமல் உற்பத்தி நிகழ்முறையின் தொடக்கத்தில் பெற்றிருந்த அதே பயன் வடிவத்தில் தொடர்ந்து நீடிக்கிறது. எனவே, ஓயாமல் திரும்பத் திரும்ப நடைபெறும் உழைப்பு நிகழ்முறைகளில் நீண்ட காலமோ குறுகிய காலமோ அது தனக்குரிய அதே பணிகளை மீண்டும் மீண்டும் புரிகிறது.
உழைப்புச் சாதனம் [Instrument of labour] --- மாறா மூலதனத்தின் இந்தப் பகுதி அதன் பயன்-மதிப்போடு கூடவே இழக்கிற பரிவர்த்தனை-மதிப்புக்கேற்ற விகிதத்தில் உற்பத்திப் பொருளுக்கு மதிப்பைக் கொடுக்கிறது. மதிப்பின் இந்த ஒப்படைப்பு, அதாவது இத்தகையதோர் உற்பத்திச் சாதனத்தின் மதிப்பு அதன் துணைகொண்டு படைக்கப்படும் உற்பத்திப் பொருளுக்கு இவ்விதம் பெயர்க்கப்படுகிற அளவானது சராசரிகளைக் கணக்கிடுவதன் மூலம் நிர்ணயிக்கப்படுகிறது.
ஓர் உழைப்புச் சாதனம் எவ்வளவு அதிக காலம் நீடித்திருக்கிறதோ, எவ்வளவு மெதுவாகத் தேய்மானமுறுகிறதோ, அவ்வளவு அதிக காலம் அதன் மாறா-மூலதன மதிப்பு இந்தப் பயன் வடிவத்தில் நிலைத்திருக்கிறது. ஆனால் அது எவ்வளவுதான் நீடித்திருக்கக் கூடியதாய் இருந்தாலும், அது மதிப்பைப் பெயர்க்கும் விகிதாசாரம் அது பணி புரியும் ஒட்டுமொத்தக் கால அளவுக்கு எப்போதுமே எதிர் விகிதத்தில் இருக்கிறது.
மூலதன-மதிப்பின் ஒரு பகுதி உழைப்புச் சாதனத்தில் நிலைத்திருக்கிறது அல்லவா, இந்தப் பகுதியும் மூலதன-மதிப்பின் வேறு எந்தப் பகுதியையும் போலவே சுற்றியோடுகிறது. அனைத்து மூலதன-மதிப்பும் ஓயாமல் சுற்றியோடுகிறது என்றும், இந்த அர்தத்தில் அனைத்து மூலதனம் சுழல் மூலதனமே என்றும் பொதுவாகப் பார்த்தோம்.
முதலாவதாக, அதன் பயன் வடிவிலேயே அது சுற்றியோடவில்லை; அதன் மதிப்புதான் சுற்றியோடுகிறது; சரக்காகச் சுற்றியோடும் உற்பத்திப் பொருளுக்கு அதன் மதிப்பு போய் சேருவதற்கு ஏற்ப சன்னம் சன்னமாக, பையப் பைய இது நடைபெறுகிறது. உழைப்புச் சாதனத்தின் செயற் காலம் முழுவதிலும் அது அதன் துணை கொண்டு உற்பத்தி செய்யப்படும் சரக்குகளிலிருந்து வேறாக இருந்து வரும் வரை, எப்போதுமே அதன் மதிப்பின் ஒரு பகுதி அதில் நிலைத்திருக்கிறது. இந்த விசேஷத் தன்மைதான் மாறா..மூலதனத்தின் இந்தப் பகுதியை நிலை-மூலதனம் [fixed capital] என்னும் வடிவம் பெறச் செய்கிறது. உற்பத்தி நிகழ்முறையில் முன்னீடு செய்யப்படும் மூலதனத்தின் ஏனையப் பொருட் கூறுகள் எல்லாம், இந்த நிலை-மூலதனத்துக்கு மாறாக, சுற்றியோடும் மூலதனம் அல்லது சுழல்-மூலதனம் [circulating or fluid capital] ஆகின்றன.
உழைப்புச் சாதனம் எந்த அளவுக்கு நீடித்திருக்கக் கூடியது என்பதுதான் அதில் நிலைத்திருக்கும் மூலதன-மதிப்புக்கும் திரும்பத் திரும்ப நடைபெறும் உழைப்பு நிகழ்முறையின் போது உற்பத்திப் பொருளிடம் அது விட்டு விடும் மதிப்புப் பகுதிக்கும் இடையிலுள்ள வேறு பாட்டின் பருமனை நிர்ணயிக்கிறது.
இந்த வேறுபாடு இல்லாது மறையும் போது உழைப்புச் சாதனம் அதன் பயன்பாட்டுக் காலத்தைக் கடந்து விடுகிறது. அது மதிப்பின் உறைவிடமாய் இருக்கும் நிலை முடிவடைந்து விடுகிறது.
சரியான அர்த்தத்தில் உழைப்புச் சாதனமெனச் சொல்ல முடியாத ஒரு உற்பத்திச் சாதனம் --- அதாவது துணைப் பொருள், கச்சாப் பொருள், இன்னும் பூர்த்தியாகாத பண்டம் போன்ற ஒன்று --- எம்முறையில் அது தன் மதிப்பை உற்பத்திப் பொருளுக்குப் பெயர்த்திடுகிறது, ஆகவே அதன் மதிப்பு எவ்விதம் சுற்றியோடுகிறது என்பதைக் கருதுமிடத்து, முற்றிலும் உழைப்புச் சாதனத்தைப் போன்றதாகவே செயல்படுமாயின், அப்போது அதுவும் நிலை..மூலதனத்தின் இயங்குபொருளே, நிலவல் வடிவமே ஆகும்.
திரும்பத் திரும்ப நடைபெறுகிற உழைப்பு நிகழ்முறைகளில் ஒன்றொடொன்று இணைந்து தொடர்ச்சியாக ஓர் உற்பத்திக் காலமாகும்படியான --- அதாவது உற்பத்திப் பொருளை முடிப்பதற்கு வேண்டிய உற்பத்திக் காலம் பூராவும் ஆகும் படியான --- உழைப்பு நிகழ்முறைகளில் ஓர் உற்பத்திச் சாதனம் கணிச காலம் நிலைத்திருக்க நேரும் போது கூட, நிலை-மூலதனத்தைப் போல் ஓரளவு அதிக காலத்துக்கு முதலாளி தமது மூலதன முன்னீடுகளைச் செய்ய வேண்டியதாகிறது. ஆயினும் இக்காரணத்தால் அவரது மூலதனம் நிலை-மூலதனமாகி விடுவதில்லை.
நிலை-மூலதனத்தையும் சுழல்-மூலதனத்தையும் ஒன்றிலிருந்து மற்றொன்றை வேறுபடுத்திக் காட்டுவது இந்த கால அளவல்ல.
இடம்பெயராமையானது உழைப்புச் சாதனங்களுக்கு நிலை-மூலதனத் தன்மையை அளிக்கவும் இல்லை; இடம்பெயர்தலானது அச்சாதனங்களிடமிருந்து இத்தன்மையைப் பறிக்கவுமில்லை.
நிலை-மூலதனத்தின் தனி விதமான சுற்றோட்டம் தனி விதமான புரள்வுக்கு வழி செய்கிறது.
உழைப்புச் சாதனம் மதிப்பின் உறைவிடமாய் இருக்கும் நிலைக்கு உற்பத்தி நிகழ்முறையின் போது முடிவு ஏற்படும் அதே விகிதத்தில், அதன் மதிப்பு பகுதியும், சுற்றோட்ட நிகழ்முறையின் போது பண வடிவில் சிறுகச் சிறுகக் கசிந்து வெளிவருகிறது. உற்பத்தி சாசனத்தின் மதிப்பு இவ்வாறு இரு விதமாய் நிலவுகிறது. அதன் ஒரு பகுதி அதன் பயன் வடிவம் அல்லது தசையுருவை விட்டு விலகாமல் உற்பத்தி நிகழ்முறையைச் சேர்ந்ததாகிறது. மற்றொரு பகுதி அவ்வடிவை விட்டுப் பிரிந்து பண வடிவம் பெறுகிறது.
அதன் மதிப்பு பணமாகிற உருமாற்றம், அம்மதிப்பைத் தன்னுள் கொண்டு செல்கிற சரக்கு பணமாகிற பரிணமிப்புடன் ஒருங்கிணைந்து நடைபெறுகிறது. ஆனால் அம்மதிப்பு பண வடிவிலிருந்து திரும்பவும் பயன் வடிவுக்கு அடையும் மாற்றம், சரக்குகள் திரும்பவும் அவற்றின் உற்பத்திக்கு வேண்டிய ஏனைய அடிக்கூறுகளாக மாற்றமுறுவதிலிருந்து பிரிந்து தனியே நடைபெறுகிறது. இந்த மாற்றம் அதன் மறுவுற்பத்திக்கு தேவைப்படும் கால அளவால் நிர்ணயிக்கப்படுகிறது --- அதாவது உழைப்புச் சாதனம் தேய்மானத்தால் அழிந்து போய், அதே வகைப்பட்ட இன்னோரு உழைப்புச் சாதனத்தால் அது மாற்றீடு செய்யப்படுவதற்கு ஆகும் கால அளவால் நிர்ணயிக்கப்படுகிறது.
அதன் புரள்வு பூரணமாய் நிகழ்ந்து முடிவுறுகிறது. மறுவுற்பத்திக்கான இத்தருணம் வரும் வரை அதன் மதிப்பு பண வடிவிலான சேம-நிதியாக பையப் பைய திரட்டப் பெற்று வருகிறது.
திறனுடை-மூலதனத்தின் எஞ்சிய கூறுகளில் ஒரு பகுதி மாறா-மூலதனக் கூறுகளாகும்; கச்சாப் பொருட்களும் துணைப் பொருட்களும் ஆகும். மறு பகுதி உழைப்புச் சக்திக்காக முதலீடு செய்யப்படும் மாறும்-மூலதனம் ஆகும்.
உழைப்புச் சாதனங்களாய் அமைந்த மாறா-மூலதனப் பகுதியின் மதிப்பைப் போலவே, கச்சாப் பொருட்களாயும் துணைப் பொருட்களாயும் அமைந்த மாறா-மூலதனப் பகுதியின் மதிப்பும் பெயர்க்கப்பட்ட மதிப்பாகவே உற்பத்திப் பொருளின் மதிப்பில் இடம்பெறுகிறது. ஆனால் உழைப்புச் சக்தியானது இவ்வாறன்றி அதன் மதிப்புக்குச் சமதையான மதிப்பை உற்பத்தி நிகழ்முறையின் போது உற்பத்திப் பொருளுக்குச் செலுத்துகிறது. வேறுவிதமாகச் சொன்னால், தனது மதிப்பை உள்ளபடியே மறுவுற்பத்தி செய்கிறது.
உழைப்புச் சக்திக்கும் நிலை-மூலதனமாக அமையாத மாறா-மூலதனக் கூறுகளுக்கும் இடையே மதிப்பின் படைப்பைப் பொறுத்த வரை எவ்வளவுதான் வேறுபாடுகள் இருப்பினும், மதிப்பின் புரள்வைப் பொறுத்த வரை எந்த வேறுபாடும் இல்லை. இவ்வகைப் புரள்வு இவையிரண்டுக்கும் பொதுவானது; ஆனால் நிலை-மூலதனத்தின் புரள்வு இதற்கு நேர்மாறானது. திறனுடை-மூலதனத்தின் இந்த அடக்கக் கூறுகள் --- உழைப்புச் சக்திக்காகவும் நிலை-மூலதனமாக அமையாத உற்பத்திச் சாதனங்களுக்காகவும் முதலீடு செய்யப்படும் அதன் மதிப்புப் பகுதிகள் --- அவற்றின் புரள்வில் காணப்படும் இந்தப் பொதுத் தன்மை காரணமாய் சுற்றியோடும் மூலதனம் அல்லது சுழல்-மூலதனமாக நிலை-மூலதனத்துக்கு நேர் எதிராகின்றன.
சாரம்சத்தில் மாறும்-மூலதனத்தில் அடங்கியிருப்பவை வாழ்வுச் சாதனங்களே ஆகும்.
முதலாளி தொழிலாளியின் உழைப்புச் சக்தியை வாங்குகிறாரே தவிர, தொழிலாளியின் வாழ்வுச் சாதனங்களை அல்ல.
முதலாளி பணத்திற்கு விற்கும் சரக்குகள் அடங்கிய உபரி-மதிப்பின் ஒரு பகுதியைத் தனக்கு வேண்டிய வாழ்வுச் சாதனங்களாக மாற்றிக் கொள்கிறார்.
நிலை-மூலதனத்துக்கு மாறாக, சுழல்..மூலதனத்துக்குரிய அந்தத் தனித் தன்மையை அடைகிறவை தொழிலாளியின் வாழ்வுச் சாதனங்களும் அல்ல, தொழிலாளியின் உழைப்புச் சக்தியும் அல்ல. திறனுடை..மூலதனத்தின் மதிப்பில் உழைப்புச் சக்தியை வாங்குவதற்காக முன்னீடு செய்யப்பட்டிருக்கிறதே அந்தப் பகுதிதான் அதன் புரள்வின் வடிவம் காரணமாய் அத்தன்மையை அடைகிறது --- மாறா-மூலதனத்தின் சிற்சில உள்ளடக்கக் கூறுகள் அடைவதும், ஏனைய கூறுகள் அடையாததுமான அத்தன்மையை அது அடைகிறது.
சுழல்-மூலதனத்தின் நிலவல் வடிவங்களாய் அமையும் உழைப்புச் சக்தியும் உற்பத்திச் சாதனங்களும், பூர்த்தியான உற்பத்திப் பொருளின் படைப்புக்கும் விற்பனைக்கும் அவசியமான அளவுக்குச் சுற்றோட்டத்திலிருந்து விலக்கி எடுக்கப்படுகின்றன.
1. நிலை-மூலதனம், சுழல்-மூலதனம் ஆகிய வடிவங்களின் வெவ்வேறான தன்மைகள் உற்பத்தி நிகழ்முறையில் செயல் புரியும் மூலதன-மதிப்பின் --- அதாவது திறனுடை-மூலதனத்தின் --- வெவ்வேறு விதமான புரள்வுகளிலிருந்தே எழுகின்றன.
உற்பத்திப் பொருள் இந்த மதிப்பை சுற்றியோட வைத்து, தனது உருமாற்றங்களின் மூலம் அதை ஆரம்பத் தசையுருவுக்கு மீளச் செய்வதிலான வேறுபாடு --- திறனுடை-மூலதனமாக நிலவும் பொருள் வடிவங்களிலான வேறுபாட்டிலிருந்து எழுகிறது; இந்த மூலதனத்தின் ஒரு பகுதி தனிப்பட்ட உற்பத்திப் பொருளின் படைப்பின் பொது முழுதும் நுகரப்படுகிறது; மறு பகுதி சன்னம் சன்னமாகவே நுகரப்படுகிறது. எனவே திறனுடை-மூலதனத்தைத்தான் நிலை-மூலதனமாகவும் சுழல்-மூலதனமாகவும் பிரிக்க முடியும். ஆனால் தொழில் துறை மூலதனத்தின் ஏனைய இரு நிலவல் வடிவங்கள், அதாவது சரக்கு-முலதனமும் பண-மூலதனமும் இந்த முரண் நிலைக்கு [antithesis] ஆளாவதில்லை. திறனுடை-மூலதனத்துக்கும் ஏனைய இரு நிலவல் வடிவங்களுக்கும் இடையிலான முரண் நிலையாகவும் இது அமைவதில்லை. திறனுடை-மூலதனத்தில் மட்டும், அதன் அரங்கில் மட்டும் நிலவும் ஒன்று இது.
இவை திறனுடை-மூலதனத்துக்கு மாறான சுற்றோட்ட மூலதனமே [circulation capital] தவிர நிலை மூலதனத்துக்கு மாறான சுழல்-மூலதனம் [circulating capital] அல்ல.
2. மூலதனத்தின் நிலைப் பகுதியின் புரள்வும், ஆகவே அதற்கு ஆகிற புரள்வுக் காலமும், மூலதனத்தின் சுழலும் கூறுகளின் அநேகப் புரள்வுகளுக்குச் சமமாகும். நிலை-மூலதனம் ஒரு தரம் புரள்வதற்குள் சுழல்-மூலதனம் எத்தனையோ தரம் புரண்டு விடுகிறது.
பூர்த்தியான உற்பத்திப் பொருள் சுற்றியோடச் செய்கிற அதே நேரத்தில் இந்தச் சுற்றோட்டம் மூலதனத்தின் சுழலும் கூறுகளது முழு மதிப்பையும் சுற்றியாட வைக்கிறது.
3. நிலை மூலதனத்துக்காக முதலீடு செய்யப்படும் மூலதன-மதிப்பு அதன் நிலவல் வடிவமான உற்பத்திச் சாதனங்கள் செயல்படும் காலம் முழுமையிலும் அதன் வடிவங்களாலான சுற்றினை தசையுருவில் கடப்பதில்லை; அதன் மதிப்பு மட்டும்தான் கடக்கிறது.
இம்மதிப்பில் ஒரு பகுதிதான் தொடர்ச்சியாகச் சுற்றியோடி சரக்குகளது மதிப்பின் ஒரு பகுதியாகி, பணமாக மாற்றமடைகிறது அதன் ஆதி வடிவமான தசையுருவிற்கு அது மாற்றப்படுவதில்லை. உற்பத்திச் சாதனம [means of production] முழுமையாக நுகரப்பட்டு அதன் பணிக் காலம் முடியும் வரை, பணம் திரும்பவும் உற்பத்திச் சாதனத்தின் தசையுருவத்துக்கு [bodily form] மாற்றமடைவதில்லை.
4. உற்பத்தி நிகழ்முறையின் போது உழைப்புச் சக்தியும் எப்போதும் இருந்து வருகிறது; புதிதாகத் திரும்பத் திரும்ப விலைக்கு வாங்கப்படுவதால்தான் இது சாத்தியமாகிறது; இப்படி வாங்குகையில் அடிக்கடி ஆட்களை மாற்றிவிடுவது உண்டு. ஆனால் சுழல்-மூலதனப் புரள்வுகள் இப்படித் திரும்பத் திரும்ப நடைபெற்றும் ஒரே விதமான உற்பத்தி நிகழ்முறைகளில், ஈடுபட்டுத் தொடர்ந்து செயல் புரிகின்றன.

No comments:
Post a Comment