தொழில் துறை முதலாளி பிறந்த கதை சாகுபடியாளர் பிறந்த கதையைப் போல் படிப்படியாக நடந்தேறியதல்ல. சந்தேகத்துகிடமின்றி, சிறு கைவினைச் சங்க ஆண்டான்கள் பலரும் இன்னுமதிகத் தொகையில் சுயேச்சையான சிறு கைவினைஞர்களும், ஏன், கூலித் தொழிலாளிகளும் கூட, சிறு முதலாளிகளாக மாறினார்கள்; கூலியுழைப்புச் சுரண்டலையும், ஆகவே மூலதனத் திரட்டலையும் படிப்படியாக விரிவுபடுத்தி முழு அளவில் முதலாளிகளானார்கள்.
தப்பியோடி வந்த பண்ணையடிமைகள் எவர் அதிபராக வேண்டும், எவர் வேலைக்காரராக வேண்டும் என்ற பிரச்சினை அவர்கள் தப்பியோடி வந்த தேதி முன்னால் வருகிறதா, பின்னால் வருகிறதா என்பதைக் கொண்டே பெரும்பாலும் தீர்மானிக்கப் பட்டது.
கடு வட்டியைக் கொண்டும், வாணிபத்தைக் கொண்டும் உருவான பண-மூலதனம் தொழில் துறை மூலதனமாக மாற விடாமல் கிராமப்புறத்தில் பிரபுத்துவ அமைப்பும் நகரங்களில் கைவினைச் சங்க அமைப்பும் தடுத்துக் கொண்டிருந்தன. பிரபுத்துவ சமூகம் சிதைவுற்று, கிராமப்புற மக்கள் திரளின் உடைமை பறிக்கப்பட்டு, அவர்களின் ஒரு பகுதியினர் வெளியேற்றப்பட்டதைத் தொடர்ந்து, இந்தக் கட்டுத்தளைகள் ஒழிந்தன. புதிய பட்டறைத் தொழில்கள் கடல்வழித் துறைமுகங்களிலோ, உட்பகுதியில் பழைய நகராட்சிகள், கைவினைச் சங்கங்கள் ஆகியவற்றின் கட்டுப்பாட்டுக்கு அப்பாற்பட்ட இடங்களிலோ நிறுவப்பட்டன.
அமெரிக்காவில் தங்கமும் வெள்ளியும் கண்டுபிடித்தது, அக்கண்டத்து பூர்வ குடிகளை அழித்தும் அடிமைப்படுத்தியும் சுரங்கங்களில் சமாதி செய்தும் நாசமாக்கியது, கிழக்கிந்தியப் பகுதிகளை பிடித்து சூறையாடத் தொடங்கியது, கறுப்புத் தோல் மானிடரை வாணிப வேட்டையாடுவதற்கான வேட்டைக் காடாய் ஆப்பிரிக்காவை மாற்றியது --- இவையெல்லாம் முதலாளித்துவப் பொருளுற்பத்திச் சகாப்தத்தின் அருணோதயக் காட்சிகளாய் அமைந்தன. அன்பும் அமைதியும் மிகுந்த இந்தச் செயல்கள் ஆதித் திரட்டலின் பிராதான நிகழ்வுகளாய் அமைந்தன.
ஆதித் திரட்டலின் பல்வேறு நிகழ்வுகளையும் இப்போது முக்கியமாய் ஸ்பெயின், போர்ச்சுகல், ஹாலந்து, பிரான்ஸ், இங்கிலாந்து ஆகிய நாடுகளில் ஏறக்குறைய காலவரிசைப்படி காணலாம். இங்கிலாந்தில் 17ஆம் நூற்றாண்டின் முடிவில் இவை முறைப்படியான ஓர் இணைவை வந்தடைகின்றன; காலனி நாடுகள், தேசக் கடன், நவீன வரிவிதிப்பு முறை, காப்பு முறை ஆகியவை இந்த இணைவில் அடங்கும். இந்த வழிமுறைகள் ஓரளவுக்கு மிருக பலத்தை நம்பியிருப்பவை. காலனியாதிக்க அமைப்பை உதாரணமாய்க் குறிப்பிடலாம். ஆனால் பிரபுத்துவ பொருளுற்பத்தி முறை முதலாளித்துவ பொருளுற்பத்தி முறையாக மாறும் நிகழ்முறையை செயற்கையாகத் துரிதப்படுத்தவும், மாறிச் செல்லும் காலத்தைக் குறுக்கவும், இவையெல்லாம் ஒருமுகப்படுத்தப்பட்ட, ஒழுங்கமைக்கப்பட்ட சமூக வலுவந்தமாகிய அரசு அதிகாரத்தைப் பிர்யோகிக்கின்றன. புதிய சமுதாயத்தைக் கருக்கொண்ட பழைய சமுதாயம் ஒவ்வொன்றுக்கும் வலுவந்தமே மருத்துவத் தாய். அதுவே ஒரு பொருளாதாரச் சக்திதான்.
கிறித்துவ இனத்தார் எனப்படுவோர் உலகின் எல்லா மண்டலங்களிலும் தம்மால் அடிமைப்படுத்த முடிந்த எல்லா மக்கள் சமூகங்கள் மீதும் காட்டுமிராண்டிச் செயல்களும், வெறித்தனமான அட்டூழியங்களும் புரிந்துள்ளனர்.அவர்கள் ஜாவா தீவுக்கு அடிமைகள் வேண்டுமென்று செலிபிஸ் தீவிலிருந்து ஆட்களைத் திருடிக் கொண்டுவர கையாண்ட முறை அவர்கள் எப்படிப்பட்டவர்கள் என்பதைத் தெளிவாய் புலப்படுத்துகிறது. இத்திருட்டுக்காக ஆள் திருடர்கள் பயிற்றுவிக்கப்பட்டனர். திருடனும் மொழிபெயர்பாளனும் விற்பனையாளனும் இந்தத் தொழிலில் முக்கியமானவர்கள்; சுதேசி மன்னர்களே பிரதான விற்பனையாளர்கள். அவர்கள் கால் வைத்த இடமெல்லாம் பேரழிவும், மக்கள் தொகைச் சுருக்கமும் நேரிட்டன. ஜாவாவைச் சேர்ந்த பாஞ்சுவாங்கி மாகாணத்தில் 1750இல் 80,000 பேர் வசித்தனர். 1811இல் 18.000 பேர் மட்டுமே இருந்தனர். வாணிபத்தின் பெருமையே பெருமை!
ஆங்கிலேயக் கிழக்கிந்தியக் கம்பெனி இந்தியாவில் அரசியல் ஆட்சி நடத்தியதோடு, தேயிலை வர்த்தகத்திலும், பொதுவாக சீன வர்த்தகத்திலும், ஐரோப்பாவிற்கும் ஐரோப்பாவிலிருந்துமான சரக்கு போக்குவரத்திலும் தனி ஏகபோகம் பெற்றது தெரிந்ததே. அதிகாரிகள் தாமே விலை நிர்ணயித்து பரிதாபத்துக்குரிய இந்தியர்களை இஷ்டம்போல் கொள்ளையிட்டனர். இந்த தனியார் வர்த்தகத்தில் கவர்னர் ஜெனரலும் பங்கு பெற்றார். சல்லிக் காசு முதலீடின்றி ஆதித்திரட்டல் நடந்தேறியது.
1769க்கும் 1770 க்குமிடையில், ஆங்கிலேயர்கள் அரிசி முழுவதையும் வாங்கி வைத்து, கொள்ளை விலை கிடைத்தாலன்றி அதனை விற்க மறுத்து, பஞ்சத்தையே உண்டாகி விட்டார்கள்.
ஏற்றுமதி வர்த்தகத்துக்கென்றே அமைந்த மேற்கிந்தியத் தீவுகள் போன்ற தோட்டத்தொழில் காலனிகளிலும், சூறைக் களமாகிவிட்ட மெக்சிகோ, இந்தியா போன்ற செல்வ செழுமையும் மனித வளமும் வாய்ந்த நாடுகளிலும் பூர்வ குடிகளை நடத்திய விதம் இயல்பாகவே பயங்கர்மானதாய் இருந்தது. ஆனால், முறையாகக் குடியேற்ற நாடுகள் எனப்படுகிறவற்றிலும் கூட, ஆதித் திரட்டலின் கிறித்துவ தன்மை பொய்யாகிவிடவில்லை.
காலனியாதிக்க அமைப்பு சேமப் பண்ணை போன்று வர்த்தகத்தையும், நீர்வழிப் போக்குவரத்தையும் முதிர்ச்சியுறச் செய்தது. லூதரின் "ஏகபோக சங்கங்கள்" மூலதனக் குவிப்புக்கான சக்தி வாய்ந்த நெம்புகோல்களாய் இருந்தன. காலனி நாடுகள் முளைவிட்டு வந்த பட்டறைத் தொழில்களுக்கு சந்தை கிடைக்கச் செய்ததோடு. சந்தை ஏகபோகத்தின் வாயிலாக மூலதனத் திரட்டலைப் பெருகச் செய்தன. ஐரோப்பாவுக்கு வெளியே அப்பட்டமான கொள்ளை, அடிமைப்படுதல், படுகொலை ஆகிய வழிகளில் கைப்பற்றிய செல்வங்கள் கடல் வழியாகத் தாய்நாடு வந்து அங்கே மூலதனமாயின.
இன்று தொழில் துறை முதன்மை என்பது வாணிப முதன்மையையும் குறிப்பதாகும். ஆனால், முறையான பட்டறைத் தொழில் என்படுவதன் காலத்தில், வாணிப முதன்மைதான் தொழில் துறையில் ஆதிக்க நிலைக்கு வழிசெய்கிறது. அந்தக் காலத்தில் காலனியாதிக்க அமைப்பு அதிமுக்கிய பாத்திரம் வகித்தமைக்கு இதுவே காரணம்.
பொதுக் கடன்கள், அதாவது தேசக் கடன்கள் வாயிலான செலாவணி முறை பட்டறைத் தொழிற் காலத்தில் பொதுவாக ஐரோப்பா முழுவதுமே வியாபித்துவிட்டது. காலனியாதிக்க அமைப்பு அதன் கடல்வழி வர்த்தகத்தாலும் வாணிபப் போர்களாலும் இந்த கடன்..செலாவணி முறைக்கு சேமப் பண்ணை ஆயிற்று. இவ்வாறு இது முதலில் ஹாலந்தில் வேரூன்றியது. தேசக் கடன், அதாவது அரசின் உடைமை மாற்றம்---இந்த அரசு எதேச்சாதிகாரமாகவோ, அரசியல் சாசன வழிப்பட்டதாகவோ, குடியரசாகவோ இருக்கலாம்----முதலாளித்துவ சகாப்த்த்தை குறிக்கும் தனி விசேஷமாயிற்று..
பொதுக் கடன்..செலாவணி என்பது மூலதனத்தின் தாரக மந்திரம் ஆகிறது. பொதுக் கடன் ஆதித் திரட்டலின் வலுமிக்க நெம்புகோல்களில் ஒன்றாகிறது. மந்திரக் கோலை வீசியதும் நிகழும் அற்புதம் போல், இது மலட்டுப் பணத்தை இனப்பெருக்கத் திறனுடையதாக்கி, இவ்விதம் அதனை மூலதனமாக மாற்றுகிறது; தொழில் துறையிலும், ஏன், கடுவட்டியிலும் கூட தவிர்க்கமுடியாதபடி ஏற்படுகிற இன்னல்களுக்கும் அபாயங்களுக்கும் உட்படுத்தாமலே மூலதனமாக மாற்றுகிறது.
தேசக் கடன் தொகை ஒவ்வொன்றிலும் கணிசமான பகுதி வரிக் குத்தகையாளர்களுக்கும் வணிகர்களுக்கும் தனிப்பட்ட பட்டறையதிபர்களுக்கும் வானிலிருந்து வந்து விழுந்த மூலதனமாய் பயன்படுகிறது. இதற்கெல்லாம் மேலாக, கூட்டுப் பங்கு நிறுமங்கள் உருவாவதற்கும், வாங்கல் விற்றலுக்குரிய எல்லாவிதப் பண்டங்களிலும் பேரம் நடப்பதற்கும், பங்கு வாணிபம் தோன்றுவதற்கும், சுருங்கச் சொல்லின் பங்குச் சந்தை சூதாட்டத்துக்கும் நவீன வங்கியாதிக்கத்துக்கும் தேசக் கடன் வகைசெய்கிறது.
தேசிய நாமங்கள் சூட்டப்பெற்ற பெற்ற பென்னம்பெரும் வங்கிகள் எல்லாம் அவை பிறந்த போது தனிப்பட்ட ஊக வணிகர்களின் சங்கங்களாகவே இருந்தன. இவர்கள் அரசாங்கத்தின் பக்கம் சேர்ந்து கொண்டு, தமக்கு கிடைத்த தனிச் சலுகைகளின் பயனாய் அரசுக்கே கடன் கொடுக்கும் நிலைக்கு உயர்ந்தார்கள். ஆகவே, இந்த வங்கிகளின் இருப்பில் தொடர்ந்து ஏற்பட்ட உயர்வு தேசக் கடன் திரண்டு பெருகியதற்கு பிழையா அளவை ஆகிறது. இவ்வங்கிகளின் முழு வளர்ச்சி 1694இல் இங்கிலாந்து வங்கி நிறுவப்பட்டதிலிருந்து ஆரம்பமாகிறது.
தேசக் கடனுடன் கூடவே சர்வதேசக் கடன்-செலாவணி முறையும் உருவாயிற்று; பல சந்தர்ப்பங்களிலும் இது ஏதாவதொரு மக்கள் சமூகத்தினது ஆதித் திரட்டலின் மூலாதாரங்களில் ஒன்றை மூடி மறைக்கிறது. எடுத்துக்காட்டாக வெனீசியக் கொள்ளையமைப்பின் இழிசெயல்கள் ஹாலந்தினுடைய மூலதனச் செல்வத்தின் இரகசிய அடித்தளங்களில் ஒன்றாய் அமைந்தன.
இன்று அமெரிக்க ஐக்கிய நாட்டில் பிறப்புச் சான்றிதழே இல்லாமல் தலைதூக்கும் ஏராளமான மூலதனம் நேற்று இங்கிலாந்தில் குழந்தைகளின் இரத்தத்திலிருந்து பிறந்த மூலதனமே.
தேசக் கடனுக்கு அரசின் வருவாய் ஆதரவாய் இருப்பதால் --- இந்த வருவாயிலிருந்து வருடாந்திர வட்டி தொகைகளும் பிறவும் செலுத்தப்பட வேண்டுமென்பதால் --- நவீன வரி விதிப்பு முறை தேசக் கடன் முறையினை முழுமைப்படுத்துவதற்கான அவசியக் கூறாயிற்று. அரசாங்கம் அசாதாரணச் செலவுகளை சமாளிக்க இந்தக் கடன்கள் உதவுகின்றன.
இவ்வாறு, நவீன வரி வருவாய் அமைப்பு --- அத்தியாவசியமான வாழ்வுச் சாதனங்களுக்கு வரி விதிப்பதை (அவற்றின் விலையை இவ்விதம் உயரச் செய்வதை) அச்சாணியாய் கொண்ட இந்த அமைப்பு --- தற்பெருக்கத்தின் கருவை தன்னகத்தே கொண்டுள்ளது. மிகை வரிவிதிப்பு தற்செயலாய் நிகழ்வதன்று; கோட்பாடாய் அனுசரிக்கப்படுவது என்றே சொல்ல வேண்டும்.
இந்த ஏற்பாடு கூலித் தொழிலாளியின் மீது ஏற்படுத்திய நாசகர விளைவைக் காட்டிலும், இங்கே நாம் கவனிக்க வேண்டியது: இதன் விளைவாக விவசாயிகளும், கைவினைஞர்களும், சுருங்கச் சொன்னால் கீழ் நடுத்தர வர்க்கத்தின் எல்லா பிரிவினரும் வலுவந்த உடைமைப் பறிப்புக்கு ஆளானார்கள் என்பதே. இது பற்றி முதலாளித்துவ பொருளாதார அறிஞர்களிடையே கூட் இருவேறு கருத்தில்லை. இவ்வமைப்பின் உடைமைப் பறிப்புத் திறனை அதன் உறுப்புகளில் ஒன்றான காப்பு முறை உயர்த்துகிறது.
பட்டறையதிபர்களை உண்டாக்குவதற்கும் சுயேச்சையான உழைப்பாளர்களின் உடைமையை பறிப்பதற்கும், நாட்டின் உற்பத்திச் சாதனங்களையும் வாழ்வுச் சாதனங்களையும் மூலதனமாக்குவதற்கும், மத்திய கால உற்பத்தி முறையிலிருந்து நவீன கால உற்பத்தி முறைக்கு மாறிச் செல்லும் காலத்தை வலுவந்தமாய்க் குறுக்குவதற்கும் காப்பு முறை செயற்கைச் சாதனமாய் பயன்பட்டது.
உபரி-மதிப்பு ஈட்டுவோருக்கு சேவகம் செய்யத் தொடங்கியவுடனே, அந்த அரசுகள் காப்புத் தீர்வைகள் மூலம் சுற்றடியாகவும், ஏறுமதி வரிகள் மூலம் நேரடியாகவும் தத்தமது மக்களை சூறையாடியதோடு நிற்கவில்லை. தமது சார்பு நாடுகளிலும் எல்லாத் தொழில்களையும் வலுவந்தமாய் வேரோடு பிடுங்கியெறிந்தன.
காலனியாதிக்க அமைப்பு, பொதுக் கடன்கள், கடுமையான வரி விதிப்பு, காப்பு முறை, வாணிபப் போர்கள் முதலானவை --- முறையான பட்டறைத் தொழிற் காலம் பெற்றெடுத்த இந்தக் குழந்தைகள் --- நவீனத் தொழில் துறையின் பிள்ளைப் பிராயத்தில் விசுவரூபமெடுத்து வளர்கின்றன. ஒன்றுமறியா அப்பாவி மக்கள் மிகப் பெருமளவில் வதைக்கு ஆளாவது நவீனத் தொழில் துறையின் பிறப்பைக் குறிக்கிறது. முடியரசுக் கடற்படைக்கு ஆள் சேர்ப்பது போலவே, தொழிற்சாலைகளுக்கும் வலுவந்தமாய் ஆள் சேர்த்தனர்.
சின்னஞ்சிறு குழந்தைகளின் பிஞ்சு விரல்களே மிகப் பெரும்பாலும் அதிகமாய்த் தேவைப்பட்டதால், லண்டன், பர்மிங்காம் போன்ற இடங்களின் வெவ்வேறு வட்டார வேலையில்லங்களிலிருந்து பழகு தொழிலாளர்களை கொள்முதல் செய்யும் பழக்கம் உடனே பிறந்தது.
வேலைகள் நடக்கும்படி பார்த்துக் கொள்ள கங்காணிகள் நியமிக்கப்பட்டனர்; அவர்களது குறியெல்லாம் குழந்தைகளை முடிந்தவரை அதிகமாக வேலை வாங்குவதே.
அதீத உழைப்பால் இறப்பின் விளிம்புக்குச் செல்லும் வரை, அவர்களைத் துன்புறுத்தினார்கள் --- சவுக்கால் அடித்தார்கள், சங்கிலியால் பிணைத்தார்கள்; சில சந்தர்ப்பங்களில் கொடுமை தாளாமல் சிலர் தற்கொலை செய்து கொள்ள நேர்ந்தது. லங்காஷயர் போன்ற மாவட்டங்களில் பொதுமக்களின் கண்ணிற்கெட்டாத தொலைவுகளில் இருந்த எழில் கொஞ்சும் பள்ளத்தாக்குகள் கொடுவதையும் கொலை பலவும் நடக்கும் துயரார்ந்த இருள்வெளியாய் மாறின.
....... தொரந்து இரவு முழுக்க வேலை செய்ய இன்னொரு தொகுதி ஆட்களைத் தயாராக வைத்துக் கொண்டார்கள்; இரவுத் தொகுதியினர் சற்று முன்னரே விட்டுப் போன படுக்கைகளில் பகல் தொகுதியினர் வந்து படுப்பார்கள். படுக்கையின் சூடு தணிவதே இல்லை என்பது லங்கஷயர் வழக்காகிவிட்டது.
முதலாளித்துவ திரட்டலுக்கான வழிமுறையாகத் தங்களுக்கு பயன்பட்ட ஒவ்வொரு அக்கிரமத்தைப் பற்றியும் இந்த நாடுகள் வாய் கூசாமல் பெருமையடித்துக் கொண்டன.
..... இங்கிலாந்து ஸ்பானிய அமெரிக்காவுக்கு 1743 வரை ஆண்டுக்கு 4800 நீக்ரோக்களை வழங்கும் உரிமையைப் பெற்றது. இது பிரிட்டானிய கள்ள கடத்தலுக்கு அதிகாரப்பூர்வ போர்வை ஆயிற்று. அடிமை வர்த்தகத்தைக் கொண்டு லிவர்பூல் உப்பி கொழுத்தது. இதுவே அதன் ஆதித் திரட்டலுக்கான வழியாய் இருந்தது.
இப்படியெல்லாம் படாத பாடு பட்டுத்தான், முதலாளித்துவப் பொருளுற்பத்தி முறையின் "சாசுவத இயற்கை விதிகள்" நிலை நாட்டப் பெற்றன. உழைப்பாளிகளும் உழைப்புச் சாதனங்களும் பிரிந்து தனித்தனியாகும் நிகழ்முறை பூர்த்தி செய்யப்பட்டது; ஒரு துருவத்தில் சமுதாய உற்பத்திச் சாதனங்களும் வாழ்வுச் சாதனங்களும் மூலதனமாக மாற்றப்பட்டன; மறு துருவத்தில் பெருந்திரளான மக்கள் கூலித் தொழிலாளர்களாய், நவீன சமுதாயத்தின் செயற்கைப் படைப்பாகிய "சுதந்திர உழைப்பாளி ஏழைகளாய்" மாற்றப்பட்டனர். பணம் "பிறவியிலேயே கன்னத்தில் இரத்தக் கறை படிந்ததாய் உலகில் பிரவேசிக்கிறது" என்கிறார் ஒழியே. ஆனால், மூலதனமோ உச்சந்தலையிலிருந்து உள்ளங்கால் வரை, உடலின் ஒவ்வொரு மயிர்க்காலிலிருந்தும் இரத்தமும் சகதியும் சொட்ட சொட்ட உலகில் பிரவேசிக்கிறது.

No comments:
Post a Comment