உபரி..மதிப்பு வீதமும், வேலை நாளின் கால அளவும், அவசிய வேலை நேரத்திற்கு மேல் தொழிலாளி தொடர்ந்து வேலை செய்யும் நேரத்தின் நீட்டிப்பை பொருத்தது. அவசிய வேலை நேரம் மாறாதிருந்தாலும் மொத்த வேலை நாள் மாறுந்தன்மையது.
வேலை..நாளின் கால அளவும், உழைப்புச் சக்தியின் மதிப்பும் குறிப்பிட்டதாய் இருக்கும் போது உபரி உழைப்பின் கால அளவும் குறிப்பிட்டதாகிறது.
வேலை நாளின் கால அளவு மாறாமல் இருக்கும்போது, உபரி..உழைப்பின் நீட்டிப்பு அவசிய உழைப்பு நேரத்தை குறுக்குவதற்கேற்ப அமையும்.
உழைப்புச் சக்தியின் மதிப்பிலான வீழ்ச்சி உழைப்பின் உற்பத்தித் திறன் அதிகரிக்காமல் சாத்தியமில்லை. உற்பத்திக் கருவியிலோ, வேலை முறையிலோ, அல்லது இரண்டிலுமோ மாற்றம் செய்தாலன்றி இதைச் செய்ய முடியாது. உற்பத்தி முறையும், உழைப்பு நிகழ்முறையும் கூட புரட்சிகரமாக மாற்றப்படவேண்டும். இவ்வழியில் உழைப்புச் சக்தியின் மதிப்பைக் குறையச் செய்யமுடியும், அதன் மறு உற்பத்திக்கு அவசியமான வேலை..நாட் பகுதியை சுருங்கச் செய்ய முடியும்.
வேலை..நாளை நீட்டிப்பதன் மூலம் உற்பத்திச் செய்யப்படும் உபரி..மதிப்பை அறுதி உபரி..மதிப்பு ( absolute surplus..value) என்றழைக்கிறேன். மறுபுறம், அவசிய..உழைப்பு நேரத்தை குறைப்பதன் மூலமும், வேலை..நாளின் இரு அங்கங்களின் கால அளவைகளும் இதற்கொப்ப மாறுவதன் மூலமும் கிடைக்கிற உபரி..மதிப்பை ஒப்பிட்டு உபரி..மதிப்பு (relative surplus..value) என்றழைக்கிறேன்.
வாழ்க்கையின் அவசியப் பண்டங்களையோ இந்த அவசியப் பண்டங்களுக்கான உற்பத்திச் சாதனங்களையோ வழங்காத தொழிற் கிளைகளில் உழைப்பின் உற்பத்தித் திறனில் ஏற்படும் அதிகரிப்பால் உழைப்புச் சக்தியின் மதிப்பு பாதிக்கப்படுவதில்லை.
உழைப்பு நேரத்தில் ஏற்படும் மொத்தக் குறைவு என்பது அந்தப் பல்வேறு, தனித் தனித் தொழில்களில் செய்யப்படும் வெவ்வேறு உழைப்பு நேர குறைப்புகள் அனைத்தின் மொத்தமாகும்.
தனியொரு முதலாளி உழைப்பின் உற்பத்தித் திறனை அதிகமாக்குவதன் மூலம் உழைப்புச் சக்தியின் மதிப்பைக் குறைப்பதும், அந்த அளவுக்கு அவசிய..உழைப்பு நேரத்தைச் சுருக்குவதும் அவரது குறிக்கோளாயிருக்க வேண்டிய கட்டாயமில்லை. ஆனால், முடிவில் இவ்விளைவு ஏற்படுவதற்குப் பங்கு செலுத்துகிறார் என்ற அளவில்தான், அவர் பொதுவான உபரி..மதிப்பு வீதத்தை உயர்த்த உதவுகிறார்.
உண்மை மதிப்பானது ஒவ்வொரு தனிப்பட்ட உருப்படிக்காகவும் உற்பத்தியாளருக்குச் செல்வாகிற உழைப்பு நேரத்தால் அளவிடப்படுவதில்லை; அதன் உற்பத்திக்கு சமுதாய வழியில் தேவைப்படும் உழைப்பு நேரத்தாலேயே அளவிடப்படுகிறது.
உழைப்பின் உற்பத்தித் திறனை அதிகரிக்கவும் அதன் காரணமாக அதிக உற்பத்திக்கு வழி காணவும் செய்கிற ஒரு முதலாளி, ஒரு நாளின் உற்பத்தியை விற்றுத் தீர்க்க வேண்டுமானால், வேண்டலானது முன்பிருந்ததைப் போல் இரட்டிப்பாக வேண்டும். சந்தை இரு மடங்காக விரிவடைந்தாக வேண்டும். மற்றவை சமமாயிருக்க, அவரது சரக்குகள் விலை குறைந்தால்தான் சந்தையை ஆள முடியும். எனவே அவரது சரக்கு ஒவ்வொன்றையும் அவற்றின் தனிப்பட்ட மதிப்புக்கு மேலாக, ஆனால் அவற்றின் சமுதாய மதிப்புக்குக் கீழாக விற்பார். அதிகப்படியான உபரி மதிப்பு அவர் கைக்குப் போய் சேருகிறது. இவ்வாறாக உழைப்பின் உற்பத்தித் திறனை அதிகமாக்கி தன் சரக்குகளுக்கு ஆகும் செலவைக் குறைக்க ஒவ்வொரு தனிப்பட்ட முதலாளியும் உந்தப்படுகிறார்.
புதிய உற்பத்தி முறை எல்லா முதலாளிகளுக்கும் பொதுவானதாகி, குறைந்த செலவாகிய சரக்கின் தனிப்பட்ட மதிப்புக்கும் அதன் சமுதாய மதிப்புக்கும் இடையிலான வேறுபாடு மறைந்ததும், இந்த கூடுதல் உபரி மதிப்பு மறைந்து போகிறது. தனது சரக்குகளை அவற்றின் சமுதாய மதிப்புக்கும் குறைவாக விற்கவேண்டியது போட்டியின் வலுக்கட்டாய விதியாகச் செயல்பட்டு, போட்டியாளர்கள் அனைவரையும் புதிய உற்பத்தி முறையை மேற்கொள்ளுமாறு நிர்பந்திக்கிறது.
சரக்குகளின் மதிப்பு உழைப்பின் உற்பத்தித் திறனுக்கு எதிர் விகிதத்தில் உள்ளது. உழைப்புச் சக்தியின் மதிப்பும் அவ்வாறே உள்ளது. ஏனெனில் அது சரக்குகளின் மதிப்பைப் பொறுத்தது. மாறாக ஒப்பீட்டு உபரி..மதிப்பு அந்த உற்பத்தித் திறனுக்கு நேர் விகிதத்தில் உள்ளது. உற்பத்தித் திறன் உயர்ந்தால் அது உயர்கிறது; உற்பத்தித் திறன் வீழ்ந்தால் அது வீழ்கிறது.
சரக்குகளை மலிவாக்கி, இப்படி மலிவாக்குவதன் மூலம் தொழிலாளியையே மலிவாக்கும் பொருட்டு உழைப்பின் உற்பத்தித் திறனை உயர்த்த வேண்டுமென்ற அவாவும் இடை விடாத போக்கும் மூலதனத்தின் உள்ளார்ந்த இயல்புகளாகும்.
முதலாளித்துவ பொருள் உற்பத்தியின் வரம்புக்குள் உழைப்பின் உற்பத்தித் திறனது வளர்ச்சி அனைத்துக்கும் குறிக்கோளாய் இருப்பது, தொழிலாளி வேலை..நாளில் தனக்காகவே உழைக்க வேண்டிய பகுதியைக் குறைப்பதும், இப்படி குறைப்பதன் மூலமே, முதலாளிக்கு இலவசமாய் உழைப்பதற்காக அவர் விடுவிக்கப்படும் அந்த இனொரு பகுதியை நீட்டுவதுமே.

No comments:
Post a Comment