மேன்மேலும் அதிகரிக்கும் அளவுவீதத்தில் நடைபெறும் மறுவுற்பத்தி பற்றி அரசியல் பொருளாதாரத்தின் தவறான கருத்தமைவு
பொதுஜனத் தப்பெண்ணமானது முதலாளித்துவப் பொருளுற்பத்திக்கும் மிச்சப்படுத்தி சேர்த்து வைப்பதற்கும் உள்ள வேறுபாடு விளங்காமல் இரண்டையும் குழப்பிக் கொள்கிறது. அழிந்து விடாமல், அதாவது நுகரப்படாமல், இருக்கிற வடிவத்தில் அப்படியே பாதுகாக்கப்படும் செல்வம்தான் அல்லது சுற்றோட்டத்திலிருந்து விலக்கப்படுகிற செல்வம்தான் திரட்டப்பட்ட செல்வம் என்று அது கற்பிதம் செய்து கொள்கிறது.
கொஞ்சம் கொஞ்சமாய் நுகர்வதற்காக செல்வந்தர் சேமித்து வைக்கும் பண்டத் திரளையும், திரட்டி வைக்கும் சேமிப்புகளையும் பார்க்கையில் பொதுமக்களுக்கு பிரமிப்பாய் இருப்பது மெய்தான்.
மூலதனத் திரட்டல் என்பது திறனுடைத் தொழிலாளர்கள் உபரி-உற்பத்திப் பொருட்களை நுகர்வதுதானே தவிர வேறு ஒன்றும் இல்லை என்கிறார் ஆதாம் ஸ்மித். ரிகார்டோவும் அடுத்து வரும் பொருளாதார அறிஞர்கள் அனைவரும் ஆதாம் ஸ்மித் கூறியதையே திருப்பிச் சொல்கிறார்கள்; அதாவது "மூலதனத்தோடு சேர்க்கப்படுவதாகச் சொல்லப்படும் வருவாய்ப் பகுதி திறனுடைத் தொழிலாளர்களால் நுகரப்படுகிறது" என்கிறார்கள். இக்கருத்தின்படி மூலதனமாக மாற்றப்படும் மதிப்பனைத்தும் மாறும்-மூலதனமாகி விடுகிறது. நடப்பதோ முற்றிலும் வேறு. ஆரம்ப மூலதனத்தைப் போலவே உபரி-மதிப்பும் மாறா-மூலதனமாகவும் உழைப்புச் சக்தியாகவும் பிரிகிறது. உழைப்பு நிகழ்முறையின் போது உழைப்புச் சக்திதான் மாறும்-மூலதனம் என்ற ஒன்று இருப்பதற்கான வடிவமாகும். இந்த நிகழ்முறையின் போது முதலாளி உழைப்புச் சக்தியை நுகர்கிறார். உழைப்புச் சக்தியோ உழைப்பாகிய அதன் பணியைச் செய்து உற்பத்திச் சாதனங்களை நுகர்கிறது.
உபரி-மதிப்பு மூலதனமாகவும் வருவாயாகவும் பிரிதல். துறவுத் தத்துவம்.
உபரி-மதிப்பில் ஒரு பகுதி வருவாயாக முதலாளியால் நுகரப்படுகிறது; மறு பகுதி மூலதனமாக ஈடுபடுத்தப்படுகிறது, திரட்டப்படுகிறது.
முதலாளி மூலதனத்தின் ஆளுருவமாய் இருக்கும் வரை, அவரைச் செயல்படத் தூண்டுவது பரிவர்த்தனை-மதிப்பும் அதன் பெருக்கமும்தானே தவிர, பயன்-மதிப்புகளோ அவற்றை அனுபவித்தலோ அல்ல. மதிப்பைப் பெருகச் செய்திட வேண்டுமென்று வெறி கொண்டுவிடும் அவர் உற்பத்தியின் நிமித்தமே உற்பத்தி செய்யுமாறு இரக்கமற்ற முறையில் மனித இனத்தைக் கட்டாயப்ப்டுத்துகிறார். இவ்வாறு, அவர் நெருக்க நிர்ப்பந்தித்து சமுதாயத்தின் உற்பத்தித் திறன்களை வளரச் செய்கிறார்; மேலும் உயர்வான சமுதாயத்துக்கு மெய்யான அடித்தளம் அமைவதற்கு அத்தியாவசியமான பொருளாயத நிலைமைகளை இவ்விதம் தோற்றுவிக்கிறார். இந்த உயர்வான சமுதாயத்தில் தனியாள் ஒவ்வொருவரின் முழுமையான, சுதந்திரமான வளர்ச்சியே ஆளூம் நெறியாய் அமைகிறது; மூலதனத்தின் ஆளுருவம் என்ற முறையில் மட்டுமே முதலாளி மதிக்கத் தக்கவராகிறார்.
முதலாளித்துவப் பொருளுற்பத்தியின் வளர்ச்சியானது குறிப்பிட்ட தொழில் நிறுவனத்தில் முதலீடாயிருக்கும் மூலதனத்தின் பரிமாணத்தை ஓயாமல் மேலும் மேலும் அதிகமாக்கிச் செல்லும் படி கட்டாயப்படுத்துகிறது. போட்டியானது முதலாளித்துவ பொருளுற்பத்தியின் உள்ளார்ந்த விதிகளைப் புறத்திலிருந்து கட்டாயப்படுத்தும் விதிகளாக்கி தனிப்பட்ட ஒவ்வொரு முதலாளியையும் அவற்றுக்கு கீழ் படிய வைக்கிறது. தனது மூலதனத்தைக் காப்பாற்றிக் கொள்ளும் பொருட்டு அதனை இடையறாது விரிந்து பெருகச் செய்யுமாறு அவரைக் கட்டாயப்படுத்துகிறது; ஆனால் மேன்மேலும் அதிகமாக்கிச் செல்லும் திரட்டலின் மூலமாக அல்லாமல் வேறு எவ்விதத்திலும் அவர் தனது மூலதனத்தை விரிந்து பெருகச் செய்ய முடியாது.
முதலாளித்துவப் பொருளுற்பத்தியின் முன்னேற்றம் கோடி கோடிக் குதூகலங்களைப் படைப்பது மட்டுமல்லாமல், திடீர் பணக்காரராவதற்கு ஊக வாணிபம், கடன்-செலாவணி வசதி ஆகியவற்றின் உருவில் ஓராயிரம் வழிகளைத் திறந்துவிடுகிறது. குறிப்பிட்ட வளர்ச்சிக் கட்டத்தை வந்தடைந்த பின், ஓரளவு ஊதாரித்தனம் --- இது செல்வச் செழிப்பை விளம்பரப்படுத்தி, கடன் வசதிக்கு வழி கோலும் மார்க்கமும் ஆகிறது --- முதலாளிக்கு வியாபார அவசியமாகி விடுகிறது.
முதலாளி பணக்காரராவது கருமியைப் போல் சொந்த உழைப்பினாலும், கட்டுத்திட்டமான நுகர்வினாலும் அல்ல. எந்த அளவுக்குப் பிறரது உழைப்புச் சக்தியைக் கசக்கி பிழிகிறாரோ, எந்த அளவுக்கு வாழ்வின் இன்பங்களையெல்லாம் கைவிட்டுத் துறவு பூணுமாறு தொழிலாளியைக் கட்டாயம் செய்கிறாரோ, அந்த அளவுக்கே முதலாளி பணக்காரராகிறார்.
மூலதனத் திரட்டல் வளர வளர முதலாளியின் செலவும் அதனுடன் சேர்ந்து வளர்கிறது. ஒன்றின் வளர்ச்சி மற்றதன் வளர்ச்சிக்குத் தடையாவதில்லை. அதே நேரத்தில் ஒரு மோதல் முதலாளியின் நெஞ்சிலும் மூள்கிறது --- மூலதனம் திரட்ட வேண்டுமென்ற வேட்கைக்கும் இன்பம் நுகர வேண்டுமென்ற ஆசைக்குமிடையிலான மோதல் இது.
வெவ்வேறு வகைப்பட்ட சமூகப் பொருளாதார அமைப்புகளிலும் சாமானிய மறுவுற்பத்தி மட்டுமல்லாமல், மேன்மேலும் அதிகரிக்கும் அளவுவீதத்திலான மறுவுற்பத்தியும் பல்வேறு படித்தரங்களில் நடைபெறுகிறது. மேன்மேலும் அதிக அளவில் உற்பத்தி செய்யப்பட்டு, மேன்மேலும் அதிக அளவில் நுகரப்படுகிறது; இதன் விளவாக, மேன்மேலும் அதிக அளவிலான உற்பத்திப் பொருட்களை உற்பத்திச் சாதனங்களாக மாற்ற வேண்டியுள்ளது. ஆயினும் உழைப்பாளியின் உற்பத்திச் சாதனங்களும், அவற்றுடன் அவரது உற்பத்திப் பண்டமும் வாழ்வுச் சாதனங்களும் மூலதனத்தின் உருவில் அவரெதிரே வராத வரை, இந்த நிகழ்முறை மூலதனத்திரட்டலோ, முதலாளியின் பணியோ ஆவதில்லை.

No comments:
Post a Comment