மூலதனத்தின் நவீன கால வரலாறு 16வது நூற்றாண்டில் உலகந்தழுவிய வாணிபமும், உலகந்தழுவிய சந்தையும் தோற்றுவிக்கப் பட்டதிலிருந்து ஆரம்பிக்கிறது.
சரக்கு சுற்றோட்டத்தின் பொருளாயதச் சாரத்தை, அதாவது பல்வேறு பயன்..மதிப்புகளின் பரிவர்த்தனையை ஒதுக்கி விட்டு, இந்த சுற்றோட்ட நிகழ்முறையால் தோற்றுவிக்கப்பட்ட பொருளாதார வடிவங்களை மட்டுமே கவனித்தால், அதன் இறுதி விளைவு பணமாக இருக்கக் காண்கிறோம். சரக்குச் சுற்றோட்டத்தின் இந்த இறுதிப் பலனே மூலதனம் தோன்றுகின்ற முதல் வடிவம் ஆகும்.
வரலாற்று வழியில் பார்த்தால், மூலதனமானது, நிலச் சொத்துக்கு மாறாக, எப்போதுமே முதலில் பணத்தின் வடிவத்தை மேற்கொள்கிறது.
பணமாக மட்டுமே உள்ள பணத்துக்கும், மூலதனமாக உள்ள பணத்துக்கும் இடையில் நாம் காண்கிற முதல் வேறுபாடு அவற்றின் சுற்றோட்ட வடிவத்திலான மாறுபாட்டுக்கு மேல் ஒன்றும் இல்லை.
சரக்கு சுற்றோட்டத்தின் மிகவும் சாதாரண வடிவம் சரக்கு..பணம்..சரக்கு (ச..ப..ச)ஆகும். அதாவது வாங்கும் பொருட்டு விற்பதாகும். இதிலிருந்து முற்றிலும் வேறுபட்ட வடிவம் பணம்..சரக்கு..பணம் (ப..ச..ப) ஆகும். அதாவது விற்கும் பொருட்டு வாங்குவதாகும். பின் சொன்ன சுற்றோட்டத்தில் செல்கிற பணம் மூலதனமாகிறது. உள்ளாற்றலில் ஏற்கனவே மூலதனமாகவும் இருக்கிறது.
ப..ச..ப சுற்றோட்டதில் $100ஐ $100க்குப் பரிவர்த்தனை செய்வது நோக்கமானால், இச்சுற்று அபத்தமானதாகவும், அர்த்தமற்றதாகவும் இருக்குமென்பது தெளிவு . கருமியின் திட்டம் இதைக்காட்டிலும் எவ்வளவோ எளிதாகவும் பத்திரமானதாகவும் இருக்கும் .
பருத்திக்காக $100 கொடுத்த வணிகர் $110க்கு விற்றலும் சரி, அல்லது $100க்கு, அல்லது $50க்கே கூட கைகழுவினாலும் சரி, எப்படியும் அவரது பணம் தனிச்சிறப்பு வாய்ந்த ஓர் இயக்கத்தை நிகழ்த்தியுள்ளது.
ச..ப..ச.. என்ற சுற்றோட்டத்தில் பணம் பயன்..மதிப்பாகப் பயன்படுகிற சரக்காய் முடிவில் மாற்றப்படுகிறது; அதாவது அது மீளாதவாறு செலவழிக்கப்படுகிறது. மாறாக ப..ச..ப.. என்ற நேர்மாறான வடிவத்தில், வாங்குபவர் பணத்தை செலவிடுவது விற்பவர் என்ற முறையில் அதனை மீட்டு விடும் பொருட்டே; சரக்கை வாங்குவதன் மூலம் அவர் பணத்தை சுற்றோட்டத்தில் விடுவது, அதே சரக்கை விற்பதன் மூலம் அதைத் திரும்பப் பெறும் பொருட்டே, அவர் பணத்தை கையை விட்டுப் போக விடுகிறார். அதைத் திரும்பப் பெறும் கபட நோக்குடனேயே இப்படிச் செய்கிறார். எனவே, பணம் செலவழிக்கப்படுவதில்லை, முன்னீடுதான் செய்யப்படுகிறது.
ச..ப..ச.. என்ற சுற்று தேவைகளை நிறைவு செய்வதான நுகர்வு. பயன்..மதிப்பு இச்சுற்றின் முடிவும் நோக்கமும் ஆகும். மாறாக ப..ச..ப என்ற சுற்றின் தலையாய நோக்கமும், அதை வசீகரிக்கிற இலக்கும் வெறும் பரிவர்த்தனை.. மதிப்பே .
சாமானிய சரக்குச் சுற்றோட்டத்தில் சுற்றின் இரு முனைகளும் சம மதிப்புள்ள சரக்குகளாகும். வேறுபட்ட பண்புகளக் கொண்ட பயன் மதிப்புகளும் ஆகும். உற்பத்திப் பொருட்களின் சமுதாய உழைப்பு உருக்கொண்டுள்ள வெவ்வேறு பொருட்களின் பரிவர்த்தனை இங்கே இயக்கத்தின் அடிப்படையாக அமைகிறது.
ப..ச..ப சுற்றோட்டம் மேலோட்டமான பார்வையில் காரிய நோக்கற்றதாகத் தோன்றுகிறது. இரு முனைகளும் ஒரே பொருளாதார வடிவத்தைப் பெற்றுள்ளன. அவை இரண்டுமே பணமாகு. எனவே பண்பு வழியில் வேறு பட்ட பயன்கள் அல்ல. இந்நிகழ்முறையின் சரியான வடிவம் ப..ச..ப' ; இதில் ப' = ப + ^ப = ஆரம்பத்தில் முன்னீடு செய்யப்பட்ட தொகை + ஒரு கூடுதல். ஆரம்ப மதிப்பின் மீதான இந்தக் கூடுதல் அல்லது மிகையை நான் "உபரி..மதிப்பு" (surplus value) என்றழைக்கிறேன்.
ச..ப..ச என்பதில் ச..ச என்ற இரு முனைகளும் .. உதாரணமாக தானியமும் உடைகளும்.. மதிப்பின் வெவ்வேறு அளவுகளைக் குறித்தாலும் குறிக்கலாம். இவ்வாறான மதிப்பு வேறுபாடுகள் முற்றிலும் தற்செயலானவையாகும். பார்க்கப்போனால், அவற்றின் மதிப்புகள் சம்மாயிருத்தல் அதன் முறையான போக்கிற்கு அவசிய நிபந்தனையாகும்.
வாங்கும் பொருட்டு விற்பதென்ற செயலின் மறு நிகழ்வு அல்லது புத்தாக்கம், அதன் நோக்கத்தாலேயே.. அதாவது முற்றிலும் சுற்றோட்டத் துறைக்குப் புறத்தேயுள்ள நோக்கமான நுகர்வு, அல்லது திட்டமான தேவைகளை நிறைவு செய்தல் என்ற நோக்கத்தாலேயே .. வரம்புக்குட்பட்டதாக வைத்துக் கொள்ளப்படுகிறது.
சாமானிய சரக்குச் சுற்றோட்டம் என்பது .. வாங்கும் பொருட்டு விற்பது .. சுற்றோட்டத்துடன் தொடர்பில்லாத ஒரு காரியத்தை, அதாவது பயன் மதிப்புகளின் தனதாக்கத்தை, தேவைகளை நிறைவு செய்வதை நிகழ்த்தும் வழியாகும். மூலதனமென்ற முறையிலான பணத்தின் சுற்றோட்டம் இப்படிப்பட்டதன்று; அதுவே ஒரு நோக்கமாகும்; ஏ னெனில் இடவிடாமல் திரும்ப திரும்ப நடைபெறும் இந்த இயக்கதுக்குள்தா ன் மதிப்பின் பெருக்கம் நடைபெறுகிறது. எனவே மூலதனத்தின் சுற்றோட்டம் வரம்பின்றி நடப்பதாகும்.
பணவுடமயாளர் இந்த இயக்கத்தின் உணர்வுபூர்வமான பிரதிநிதி என்ற முறையில் முதலாளி ஆகிறார். பணம் புறப்படுகிற இடமும் அது திரும்பி வந்து சேர்கிற இடமும் அவரேதான். அவர் முதலாளியாக அதாவது மனித உருக் கொண்ட உணர்வும் மன விருப்பமும் வாய்க்கப்பெற்ற மூலதனமாகச் செயல்படுவது எந்த அளவுக்கு அவரது செயற்பாடுகளின் ஒரே நோக்கமாகிறதோ அந்த அளவுக்குக்குத்தான் அவர் முதலாளியாக செயல்படுகிறார்; அதாவது மனித உருக்கொண்டு உணர்வும் சித்தமும் வாய்க்கப் பெற்ற மூலதனம் ஆகிறார்.
செல்வத்தை நாடும் இந்த வரம்பு கடந்த ஆசை, பரிவர்த்தனை..மதிப்பைத் தேடும் இந்த வெறி கொண்ட வேட்டை முதலாளிக்கும் கருமிக்கும் பொதுவானது; ஆனால் கருமி பித்துக் கொண்ட முதலாளியாக இருக்க, முதலாளி பகுத்தறிவு கொண்ட கருமியாக இருக்கிறார்.
ப..ச..ப என்ற சுற்றோட்டத்தில் பணம், சரக்கு இரண்டுமே மதிப்பின் இருவேறு நிலைகளையே குறிக்கின்றன; பணம் அதன் பொதுவான நிலையையும், சரக்கு அதன் குறிப்பான, அல்லது ஒரு விதத்தில் மாறுவேடம் பூண்ட நிலையையும் குறிக்கின்றன. மதிப்பு இடைவிடாமல் ஒரு வடிவத்திலிருந்து இன்னொரு வடிவத்துக்கு மாறிக் கொண்டிருக்கிறது; ஆனால் இதன் மூலம் ஒழிந்து விடுவதில்லை; இவ்வாறு அது தானாகவே இயங்கும் தன் முனைப்புள்ள தன்மை பெறுகிறது.
விற்கும் பொருட்டு வாங்குவது, அல்லது இன்னும் சரியாகச் சொன்னால், விலை கூட்டி விற்கும் பொருட்டு வாங்குவது, ப..ச..ப' எனபது, ஒரு வகை மூலதனத்துக்கு மட்டுமே. அதாவது வணிக மூலதனத்துக்கு மட்டுமே உரித்தான வடிவமாகத் தோன்றுவது மெய்தான். ஆனால், தொழில்துறை மூலதனமும் (industrial capital) பணமே; சரக்குகளாக மாற்றப்படுகிற, இந்த சரக்கு விற்றலின் மூலம் மேலும் கூடுதலான பணமாக மாற்றம் செய்யப்படுகிற பணமே.
No comments:
Post a Comment