பயன் மதிப்புகள் பரிவர்த்தனை..மதிப்பின் பொருளாயத ஆதாரமாக, அதன் சேமிப்பகங்களாக இருக்கிற காரணத்தாலும், இருக்கிற அளவிலுமே அவற்றை முதலாளிகள் உற்பத்தி செய்கின்றனர்.
முதலாளிகள் உற்பத்தி செய்ய நினைப்பது பயன் மதிப்பு மட்டுமன்று, சரக்கும் கூட; பயன் மதிப்பு மட்டுமன்று, மதிப்பும் கூட; மதிப்பு மட்டுமன்று, அதே போன்று உபரி மதிப்பும் கூட.
சரக்குகள் எப்படி ஒருங்கே பயன்..மதிப்புகளாகவும், மதிப்புகளாகவும் இருக்கின்றனவோ, அதே போல் அவற்றை உற்பத்தி செய்யும் நிகழ்முறையும் ஒருங்கே உழைப்பு நிகழ்முறையாகவும், மதிப்பைப் படைக்கும் நிகழ்முறையாகவும் இருத்தல் வேண்டும்.
ஒவ்வொரு சரக்கின் மதிப்பும் அதில் செலவிடப்பட் டு பொருள் வடிவாக்கப்பட்டுள்ள உழைப்பின் அளவால், குறிப்பிட்ட சமூக நிலைமகளில் அதன் உற்பத்திக்கு அவசியமான வேலை நேரத்தால் நிர்ணயிக்கப்படுகிறது.
இந்த உற்பத்திப் பண்டம் 10 ராத்தல் நூல் என்று வைத்துக் கொள்வோம்; நூல் நூற்பதற்குக் கச்சாப் பொருள் 10 ராத்தல் பஞ்சு தேவை. நமது முதலாளி அதனை 10 ஷில்லிங் என்ற அதன் முழு மதிப்புக்கு வாங்கியிருப்பதாகக் கொள்வோம். கதிரின் தேய்மானம் 2 ஷில்லிங் மதிப்புக்குச் சமம் என்றும் கொள்வோம். கதிர் இப்போதக்குக் கதிராக மட்டுமன்றி, எல்லா உழைப்புச் சாதன்ங்களுக்கும் பிரதிநிதியாகவும் இருப்பதாகக் கொள்ளலாம். ஆக பன்னிரண்டு ஷில்லிங் குறிக்கிற தங்கத்தின் அளவை உற்பத்தி செய்ய 24 மணி நேர உழைப்பு அல்லது இரு வேலை..நாட்கள் அவசியமானால், ஆரம்பத்திலேயே நூலில் இரு நாள் உழைப்பு சேர்க்கப்பட்டுள்ளது என்றாகிறது.
தங்கத்தில் மோகம் கொண்டுள்ள முதலாளி எஃகுக் கதிருக்கு பதில் தங்கக் கதிரைப் பயன்படுத்தினாலும் எஃகு கதிரை உற்பத்தி செய்வதற்கு தேவையான உழைப்பே நூலின் மதிப்பை நிர்ணயிக்கும். ஏனெனில் குறிப்பிட்ட அச்சமூக நிலைமைகளில் அவசியமாயிருப்பது அவ்வளவுதான்.
இங்கே நூற்பாளரின் உழைப்பு மதிப்பை படைப்பது, அதாவது மதிப்பின் தோற்றுவாயாக இருப்பது என்ற அளவில் மட்டும் அவ்வுழைப்பை நோக்குமிடத்து, அது பீரங்கி செய்பவரின் உழைப்பிலிருந்து எவ்விதத்திலும் வேறுபடுவதில்லை; அல்லது உற்பத்திச் சாதனங்களில் சேர்க்கப்பட்டுள்ள பருத்தித் தோட்டக்காரர், கதிர் தயாரிப்பவர் ஆகியோரின் உழைப்பிலிருந்தும் எவ்விதத்திலும் வேறுபடுவதில்லை. இந்த முழுதொத்த தன்மையினால்தான் பருத்தி பயிரிடுதலும், கதிர் தயாரித்தலும், நூல் நூற்றலும் ஒரே முழுமையின், அதாவது நூலினது மதிப்பின் அங்கங்களாக அமைய வல்லவை ஆகின்றன. இங்கே உழைப்பின் பண்பு, இயல்பு, குறிப்பான தன்மை ஆகியவை நம் கவலைக்குரியவையல்ல. அதன் அளவு மட்டுமே கவலைக்குரியது. நூற்பு சாமானியமான, தேர்ச்சியற்ற உழைப்பாகும் குறிப்பிட்ட சமூக நிலையின் சராசரி உழைப்பாகும் என்ற அனுமானத்தின் அடிப்படையில் நாம் மேற் செல்கிறோம். இதற்கு மாறான முறையில் அனுமானித்துக் கொண்டாலும் எந்த மாற்றமும் ஏற்படப்போவதில்லை.
பஞ்சை நூலாக மாற்றும் வேலையில் குறிப்பிட்ட சமூக நிலைமைகளில் அவசியமானதை விட அதிக நேரம் செலவாகாமல் இருப்பது நாம் இப்போது பரிசீலித்துக் கொண்டிருக்கும் நிகழ் முறையில் அதிமுக்கியத்துவம் உடையதாகும்.
இப்போது கச்சாப் பொருள் குறிப்பிட்ட அளவிலான உழைப்பைக் கிரகிக்கும் பொருளாகவே பயன்படுகிறது. இந்தக் கிரகிப்பின் மூலம் அது உண்மையில் நூலாக மாற்றப்படுகிறது; ஏனெனில் அது நூற்கப்படுகிறது, நூற்பின் வடிவில் உழைப்புச் சக்தி அதனோடு சேர்க்கப்படுகிறது. 10 ராத்தல் நூல் 6 மணி நேர உழைப்பின் கிரகிப்பைத் தெரிவிக்கிறது.
10 ராத்தல் நூல் என்ற உற்பத்திப் பொருளின் மொத்த மதிப்பை இப்போது பரிசீலிப்போம். அதில் இரண்டரை நாள் உழைப்பு உருக்கொண்டுள்ளது; இதில் இரண்டு நாள் உழைப்பு பஞ்சிலும் தேய்ந்து போன கதிரின் சாரப் பொருளிலும் அடங்கியிருந்தது. அரை நாள் உழைப்பு நூற்கும் நிகழ்முறையின் போது கிரகிக்கப்பட்டது. இந்த இரண்டரை நாள் உழைப்பை பதினைந்து ஷில்லிங் மதிப்புள்ள பொற்காசும் குறிக்கிறது. எனவே 15 ஷில்லிங் என்பது 10 ராத்தல் நூலுக்கு தக்க விலையாகும். நமது முதலாளி திகைப்படைகிறார். முன்னீடு செய்யப்பட்ட மதிப்பு பெருகவில்லை; உபரி..மதிப்பேதும் ஆக்கப்படவில்லை; ஆதலால் பணம் மூலதனமாக்கப்படவில்லை.
விவகாரத்தை இன்னும் நெருங்கிச் சென்று ஆராய்வோம். ஒரு நாள் உழப்புச் சக்தியின் மதிப்பு 3 ஷில்லிங் ஆகிறது. அதாவது உழைப்புச் சக்தியின் உற்பத்திக்கு அன்றாடம் தேவைப்படும் வாழ்வுச் சாதனங்களுக்கு அரை நாள் உழைப்பு செலவாகிறது. ஆனால் உழைப்புச் சக்தியில் உருக்கொண்டுள்ள கடந்த கால உழைப்பும், அது செயல்பட வைக்கக் கூடிய உயிருள்ள உழைப்பும்.. அதாவது உழைப்புச் சக்தியைப் பராமரிப்பதற்காகும் அன்றாடச் செலவும், வேலையில் அன்றாடம் அது செலவாவதும் இரு வேறு சங்கதிகள் ஆகும். முன்னது உழைப்புச் சக்தியின் பரிவர்த்தனை மதிப்பை நிர்ணயிக்கிறது; பின்னது அதன் பயன்-மதிப்பு ஆகும். 24 மணி நேரத்திற்கு உழைப்பாளியை உயிர் வாழ வைப்பதற்கு அரை நாள் உழைப்பு அவசியம் என்றாலும், இவ்வுண்மை முழு நாளும் அவ்வுழைப்பாளி வேலை செய்வதற்குத் தடையாவதில்லை. ஆகவே உழைப்புச் சக்தியின் மதிப்பும், அந்த உழைப்புச் சக்தி உழைப்பு நிகழ்முறையில் உண்டாக்குகிற மதிப்பும் இரு வேறு பருமன்கள் ஆகும்; இரு மதிப்புகளுக்குமுள்ள இந்த வேறுபாட்டை மனதிற் கொண்டே முதலாளி உழைப்புச் சக்தியை வாங்கினார். உழைப்புச் சக்தியின் பயனுள்ள பண்புகள் நமது முதலாளிக்கு அவசியமானவையே. உழைப்புச் சக்தியாகிய இந்தச் சரக்கு மதிப்பின் தோற்றுவாயாக மட்டுமல்லாமல், தனது மதிப்பை விட அதிகமான மதிப்பின் தோற்றுவாயாகவும் இருக்கிற பிரத்தியேக பயன்..மதிப்பை உடையதாகும என்பதுதான் உண்மையில் அவருக்கு தீர்மானகரமாயிருந்தது.
எனவே 6 மணி நேர நிகழ்முறையின்போது 10 ராத்தல் பஞ்சு 6 மணினேர உழைப்பை கிரகித்து 10 ராத்தல் நூல் ஆனது. இபோது 20 ராத்தல் பஞ்சு 12 மணி நேர உழப்பைக் கிரகித்து 20 ராத்தல் நூலாக மாற்றுகிறது. ஆனால் நிகழ்முறையில் நுழைந்த சரக்குகளது மதிப்புகளின் மொத்தம் 27 ஷில்லிங் ஆகிறது. நூலின் மதிப்பு 30 ஷில்லிங். ஆகவே உற்பத்திப் பொருளின் மதிப்பு அதன் உறபத்திக்காக முன்னீடு செய்யப்பட்ட மதிப்பை விட 1/9 பங்கு அதிகமாகும்;27 ஷில்லிங் 30 ஷில்லிங்காகிவிட்டது. 3 ஷில்லிங் உபரி..மதிப்பு உண்டாக்கப்பட்டிருக்கிறது; பணம் மூலதனமாக உருமாறிவிட்டது.
மூலதனமாக மாறுகிற இந்த உருமாற்றம் சுற்றோட்டத்துறைக்கு உள்ளேயும் வெளியேயுமாக நடைபெறுகிறது. உழைப்புச் சக்தியை வாங்க வேண்டிய நிபந்தனைக்கு உட்படுவதால், இந்த மாற்றம் சுற்றோட்டத் துறையினுள் நடைபெறுவதாகிறது; என்றாலும் உள்ளே நடைபெறுவதெல்லாம் உபரி..மதிப்பின் உற்பத்தி நிகழ்முறை முற்றிலும் பொருளுற்பத்திக்கு வழியமைப்பது மட்டுமே. உபரி-மதிப்பின் உற்பத்தி நிகழ்முறை முற்றிலும் பொருளுற்பத்தித் துறையிலேயே நிகழ்வது என்பதால் இந்த உருமாற்றம் சுற்றோட்டத் துறைக்கு வெளியே நடைபெறுவதாகிறது.
புதிய உற்பத்திப் பொருளின் பொருட்கூறுகளாகவும், உழைப்பு நிகழ் முறையில் காரணிகளாகவும் பயன்படுகிற சரக்குகளாக தன் பணத்தை மாற்றுவதன் மூலம், முதலாளி அதே நேரத்தில் மதிப்பை மூலதனமாக மாற்றுகிறார். அதாவது கடந்த காலத்துக்கிரியதும், பொருள்வடிவாக்கப்பட்டதும், உயிரற்றதுமான உழைப்பை மூலதனமாக, மதிப்பையே கர்ப்பமாய்க் கொண்ட மதிப்பாக, கருவுற்று இனம் பெருக்கும் உயிருள்ள பூதமாக மாற்றுகிறார்.
மதிப்பு உற்பத்தியை குறிப்பிட்ட நிலைக்கு மேல் நீடிப்பதே உபரி-மதிப்பின் ஆக்கம் என்பதைப் பார்க்கிறோம். உழைப்புச் சக்திக்கு முதலாளி விலையாகக் கொடுக்கும் மதிப்புக்கு பதிலாக சரி நிகரான சமதை வரப்பெறும் நிலைக்கப்பால் நிகழ்முறையை நீடிக்கச் செய்யாவிட்டால், அது மதிப்பை உற்பத்தி செய்யும் நிகழ்முறை மட்டுமேயாகும்; மாறாக, அதனை அந்த நிலைக்கப்பால் நீடிக்கச் செய்தால் அது உபரி..மதிப்பைப் படைக்கும் நிகழ்முறை ஆகி விடுகிறது.
மதிப்பைப் படைக்கும் நிகழ்முறை ஒவ்வொன்றிலும் தேர்ச்சி பெற்ற உழைப்பை சராசரிச் சமுதாய உழைப்பாக, உதாரணமாய் தேர்ச்சி பெற்ற ஒரு நாள் உழைப்பை தேர்ச்சியற்ற ஆறு நாள் உழைப்பாகப் பெயர்ப்பது தவிர்க்க முடியாததாகும்.

No comments:
Post a Comment