நான் முதலாளி என்ற முறையில் சரக்குகளை ஏ இடம் வாங்கி பி இடம் விற்கிறேன்; ஆனால் சாதாரண சரக்குடைமையாளர் என்ற முறையில் நான் அவற்றை பி இடம் விற்று விட்டு, பின் ஏ இடமிருந்து புதிய சரக்குகளை வாங்குகினறேன். ஏ, பி ஆகியோர் இவ்விரு வகைக் கொடுக்கல் வாங்கல்களிடையே வேறுபாடு எதையும் பார்ப்பதில்லை. பி உடனான என் பரிமாற்றம் பற்றி ஏ அலட்டிக் கொள்வதில்லை; ஏ உடனான என் வியாபாரம் பற்றி பி யும் அலட்டிக் கொள்வதில்லை. வரிசையமைப்பை நேர்மாறாக்குவதான என் செயலின் சிறப்பு குறித்து அவர்களிடம் சொல்ல முற்படுவேனேயானால், வரிசையமைப்பென நான் சொல்வது தவறு என்றும், கொடுக்கல் வாங்கல் முழுவதுமே வாங்கலிடம் தொடங்கி விற்றலுடன் முடிவதற்கு பதில் விற்றலுடன் தொடங்கி வாங்கலுடன் முடிக்கப்பட்டது என்றும் அவர்கள் என்னிடம் சுட்டிக் காட்டக் கூடும். உண்மையில், என் முதல் செயலான வாங்கல் ஏ யின் நோக்கில் விற்றல்தானாம்; என் இரண்டாவது செயலான விற்றல் பி இன் நோக்கில் வாங்கல் தானாம்.
மதுவை விற்று தானியம் வாங்குகிற ஏ ஆனவர் குறிப்பிட்ட உழைப்பு நேரத்தில் விவசாயியான பி ஆல் முடிந்ததை விட அதிக மதுவை உற்பத்தி செய்பவராய் இருக்கலாம். மறு புறம் பி ஆனவர் மது தயாரிப்பாளராகிய ஏ ஆல் முடிந்ததை விட அதிக தானியத்தை உற்பத்தி செய்பவராய் இருக்கலாம். ஆகவே இருவரும் அவரவருக்கு வேண்டிய தானியம் அல்லது மதுவைப் பரிவர்த்தனையில்லாமல் அவரவரே உற்பத்தி செய்வதைக் காட்டிலும், ஏ அதிக தானியத்தையும் பி அதிக மதுவையும் அதே பரிவர்த்தனை.. மதிப்புக்கு வாங்க முடிகிறது. எனவே பயன் மதிப்பைப் பொறுத்தவரை "பரிவர்த்தனை என்பது இரு தரப்பினரும் ஆதாயம் அடைகிற கொடுக்கல் வாங்கலாகும்" என்று கூற நியாயமுண்டு.
ஸ்தூலமற்ற நோக்கில் பார்த்தால், அதாவது சாமானிய சர்க்குச் சுற்றோட்டத்தின் விதிகளிலிருந்து நேரடியாக வெளிப்பட்டாத சூழ்நிலைகளை விலக்கி விட்டுப் பார்த்தால், ஒரு பரிவர்த்தனையில் நிகழ்வது (ஒரு பயன்.. மதிப்பின்
இடத்துக்கு இன்னொரு பயன்..மதிப்பு வருவதைக் கவனியாது விடுவோமேயானால்) உரு மாற்றமே, சரக்கின் வடிவத்தில் ஒரு மாற்றமே, வேறொன்றுமில்லை. அதே பரிவர்த்தனை.. மதிப்பு தான், அதாவது பொருள் வடிவாக்கப்பட்ட அதே அளவு சமுதாய உழைப்புதான் ஆரம்ப முதல் கடைசி வரை சரக்குடைமையாளரின் கையில் இருக்கிறது; அது முதலில் அவரது சொந்த சரக்கின் வடிவிலும், பின் அவர் கடைசியாக, அந்த பணத்தைக் கொண்டு அவர் வாங்குகிற சரக்கின் வடிவத்திலும் இருக்கிறது. இந்த வடிவ மாற்றத்தால் மதிப்பின் பருமன் மாறுவதில்லை. ஆனால் இந்த நிகழ்முறையில் சரக்கின் மதிப்பு அடைகிற மாற்றம் அதன் பண வடிவத்திலான மாற்றத்தோடு நின்று விடுகிறது. சரக்குகளின் சுற்றோட்டம் அவற்றின் மதிப்புகளது வடிவத்தில் மட்டுமே மாற்றத்தை ஏற்படுத்துகிறது.
சரக்கு சுற்றோட்டத்தை உபரி..மதிப்பின் தோற்றுவாயாக வர்ணிக்கும் முயற்சிகள் அனைத்தின் பின்னேயும் ஒரு மாறாட்டப் பிழை, பயன்.. மதிப்பையும் பரிவர்த்தனை.. மதிப்பையும் குழப்படி செய்யும் பிழை மறைந்துள்ளது.
சரக்கு உற்பத்தி நன்கு வளர்ந்த சமுதாயத்தில் ஒவ்வொரு உற்பத்தியாளரும் தனக்கு வேண்டிய வாழ்வு சாதனங்களைத் தானே உற்பத்தி செய்து கொண்டு, தனது தேவைகள் போக எஞ்சியவற்றை மட்டும் சுற்றோட்டத்தில் விடுகிறார் என்றும் சிறு பிள்ளைத்தனமான முறையில் கற்பிதம் செய்து கொள்ளப்படுகிறது.
சரக்குடமையாளர்களே சரக்குச் சந்தைக்கு அடிக்கடி போய் வருகின்றனர்; இந்த ஆட்கள் ஒருவர் மீது ஒருவர் செலுத்துகிற சக்தி அவர்களது சரக்குகளின் சக்தியே அன்றி வேறில்லை. இந்த சரக்குகள் பல்வகைப்பட்ட பொருட்களாய் இருப்பது பரிவர்த்தனைச் செயலுக்குப் பொருளாயத ஊக்கமாக அமைகிறது, வாங்குவோரையும் விற்போரையும் பரஸ்பரம் சார்புள்ளவர்கள் ஆக்குகிறது; ஏனெனில் அவர்கள் யாரிடமும் தம் சொந்த தேவைகளுக்குரிய பொருள் இல்லை. ஒவ்வொருவரும் இன்னொருவரின் தேவைக்குரிய பொருளை வைத்திருக்கிறார். ஆதலால் சரக்குகளை வைத்திருக்கும் விற்போராகவும், பணத்தை வைத்திருக்கும் வாங்குவோராகவும் மட்டுமே சரக்குடைமையாளர்களை வேறுபடுத்தலாம்.
உபரி மதிப்பின் உருவாக்கத்துக்கும், எனவே பணம் மூலதனமாக மாற்றப்படுவதற்கும், சரக்குகள் அவற்றின் மதிப்புக்கும் கூடுதலாக விற்கப்படுகின்றன என்று வைத்துக்கொள்வதன் மூலமோ, அவை அவற்றின் மதிப்புக்கும் குறைவாக வாங்கப்படுகின்றன என்று வைத்துக்கொள்வதன் மூலமோ விளக்கமளித்துவிட முடியாது.
சமதைகளின் பரிவர்த்தனையால் உபரி..மதிப்பு விளையவில்லை. சுற்றோட்டம் அல்லது சர்க்கு பரிவர்த்தனை எவ்வித மதிப்பையும் ஈன்றெடுப்பதில்லை.
ஆகவே நவீன காலச் சமுதாயத்தின் பொருளாதார ஒழுங்கமைப்பை நிர்ணயிக்கிற மூலதன வடிவத்தை .. மூலதனத்தின் இந்த முதன்மையான வடிவத்தை... பகுத்தாய்கையில் நாம் அதன் நன்கு அறிமுகமான வடிவங்களை (பழமைப்பட்ட வடிவங்களை என்றும் சொல்லலாம்), அதாவது வணிக மூலதனத்தையும் (merchant's capital) வட்டி மூலதனத்தையும் (money..lender's capital) பரிசீலனையிலிருந்துஅறவே விட்டு விடுகிறோம்
வணிக மூலதனத்தில், சந்தையில் விடப்படும் பணம், பெருகிய அளவில் சந்தையிலிருந்து விலக்கியெடுக்கப்படும் பணம் என்ற இரு முனைகளும் குறைந்ததுஒரு வாங்கலாலும் ஒரு விற்றலாலும், வேறு விதமாகச் சொன்னால் சுற்றோட்டத்தின் இயக்கத்தால் இணக்கப்பட்டாவது இருக்கின்றன. வட்டி மூலதனத்தில் ப..ச..ப' இடைநிலையின்றி ப..ப' என்ற இரு முனைகளாகச் சுருக்கப்படுகிறது. பணம் இன்னும் அதிகப் பணத்துக்காகப் பரிவர்த்தனை செய்யப்படுகிறது. பணத்தின் தன்மைக்கு ஒவ்வாத, எனவே சரக்கு சுற்றோட்டத்தின் நோக்கு நிலையிலிருந்து விளக்க முடியாத வடிவமாகும் இது.
வணிக மூலதனம், வட்டி மூலதனம் இரண்டுமே வருவிக்கப்பட்ட வடிவங்கள் என்பது நமது ஆராய்ச்சியின் வாயிலாகத் தெரிய வரும்; அதே நேரத்தில், இந்த இரு வடிவங்களும் வரலாற்றுப் போக்கில் மூலதனத்தின் நவீன கால முதன்மை வடிவத்துக்கு முன்னதாகத் தோன்றுவது ஏன் என்பது தெளிவாகும்.
உபரி..மதிப்பைச் சுற்றோட்டத்தால் படைக்க முடியாது என்பதையும், ஆகவே, அதனைப் படைக்கும் பொருட்டு, சுற்றோட்டத்திலேயே கண்கூடாகத் தெரியாத ஏதோ ஒன்று பின்னணியில் நடக்க வேண்டும் என்பதையும் காட்டியிருக்கிறோம்.
ஆக, மூலதனம் சுற்றோட்டத்தால் உண்டாக்கப்படுவது முடியாத காரியம்; அது சுற்றோட்டமில்லாமல் தோற்றவாய் சுற்றோட்டத்தினுள் இருப்பதாகவும், அதே போது சுற்றோட்டத்தினுள் இல்லாததாகவும் அமைதல் வேண்டும்.
ஆக ஒர் இரட்டை முடிவு நமக்குக் கிடைக்கிறது.
பணம் எப்படி மூலதனமாக மாற்றப்படுகிறது என்பதை சரக்குப் பரிவர்த்தனையை ஒழுங்கியக்கும் விதிகளின் அடிப்படையில், சமதைகளின் பரிவர்த்தனை தொடக்கமாக அமையும் விதத்தில் விளக்கியாக வேண்டும். இன்னும் கருநிலை முதலாளியாகவே இருக்கிற நமது பணாதிபதி சரக்குகளை அவற்றின் மதிப்புக்கே வாங்க வேண்டும், அவற்றின் மதிப்புக்கே விற்க வேண்டும். ஆனால் நிகழ் முறையின் தொடக்கத்தில் தான் சுற்றோட்டத்தில் விட்டதை விட அதிகமான மதிப்பை முடிவில் அதிலிருந்து எடுக்க வேண்டும். முழு வளர்ச்சியடைந்த முதலாளியாக அவர் வளர்வது சுற்றோட்ட துறைக்குள்ளேயும், வெளியேயும் நடக்க வேண்டும். இவையே பிரச்சினையின் வரையறைகள்.
No comments:
Post a Comment