இயந்திர சாதனத்தின் வளர்ச்சி
இயந்திர சாதனத்தை (machinery) முதலாளித்துவ வழியில் பிரயோகிப்பதன் நோக்கம் மனித உழைப்பை இலகுவாக்குவதன்று. சரக்குகளை மலிவாக்கும் நோக்கத்துக்காகவும், தொழிலாளி தனக்காக செய்கிற வேலை..நாட் பகுதியை குறுக்கி, அவர் ஒரு சமதையில்லாமலே முதலாளிக்கு விட்டுக் கொடுக்கிற எஞ்சிய பகுதியை நீளச் செய்யும் நோக்கத்துக்காகவுமே பயன்படுத்தப்படுகின்றன. சுருங்கச் சொல்லின், அவை உபரி..மதிப்பை உற்பத்தி செய்வதற்கான சாதனமாகும்.
உள்ளபடியே ஒவ்வொரு இயந்திரமும் சாமானியத் திறன்களின் ஒன்றிணைப்பேயாகும்.
முழு வளர்ச்சி பெற்ற இயந்திர சாதனங்கள் அனைத்தும் விசையூட்டும் இயங்கமைப்பு (motor mechanism), விசை செலுத்தும் இயங்கமைப்பு (transmitting mechanism ) இறுதியாக கருவி அல்லது வேலைப் பொறி ( tool or working machine) ஆகிய அடிப்படையில் வேறுபட்ட மூன்று பாகங்களால் ஆனவை. விசையூட்டும் இயங்கமைப்பு என்பது இயந்திரம் முழுவதையும் இயக்கி விடுவதாகும். அவை தன் இயக்கு விசையைத் தானே உற்பத்தி செய்து கொள்கிறது. அல்லது ஏற்கனவே இருந்து வரும் ஏதேனுமொரு இயற்கைச் சக்தியிடமிருந்து தன் உந்துசக்தியைப் பெறுகிறது.
இயங்கமைப்பு முழுமையின் இந்த முதலிரு பாகங்களும் இருப்பது வேலைப் பொறிகளை இயக்கி விடுவதற்காகவே. இவ்வாறு இயங்கும் வேலைப் பொறிகள் உழைப்பின் இலக்குப் பொருளைப் பற்றிக் கொண்டு, வேண்டியவாறு திருத்தியமைக்கின்றன. கருவி அல்லது வேலைப் பொறி என்னும் இயந்திர சாதனப் பாகத்திலிருந்துதான் 18 ஆம் நூற்றாண்டின் தொழிற் புரட்சி தொடங்கியது. நாளது வரை, ஒரு கைத்தொழிலோ ஒரு பட்டறைத் தொழிலோ இயந்திர சாதனங்களால் நடத்தப்படும் தொழில் துறையாக மாற்றப்படும் போதெல்லாம், இம்மாற்றத்துக்கான தொடக்க நிலையாக அமைவது இந்தப் பாகம்தான்.
முறையான கைக்கருவி எனப்படுவதை மனிதனிடமிருந்து எடுத்து ஓர் இயங்கமைப்பில் பொருத்தும் கண முதற்கொண்டே வெறும் கருவி என்பது இயந்திரமாகி விடுகிறது.
கைவினைஞர் உப்யோகிக்கும் கருவிகளின் தொகைக்கு அவரின் அங்கங்கள் வரம்பிடுகின்றன; ஆனால் ஒர் இயந்திரம் ஏககாலத்தில் இயக்கக் கூடிய கருவிகளின் தொகை ஆரம்பமுதலே மேற்சொன்ன வரம்பிலிருந்து விடுதலை பெற்று விடுகிறது.
இயக்கு விசையாகவுள்ள மனிதனுக்கும், இயக்கியாக உள்ள மனிதனுக்கும் இடையிலான வேறுபாடு: காலானது நூற்புச் சக்கரத்தில் பிரதம இயக்கியாக மட்டுமே இருக்க, கையோ கதிரைக் கொண்டு செயல்பட்டும், இழுத்தும் திரித்தும் உண்மையான நூற்பு வேலையை நிறைவேற்றுகிறது. தொழில் புரட்சி முதலில் பற்றுவது நுற்புச் சக்கரத்தின் இந்த இரண்டாவது பாகத்தையே.
சிற்சில இடங்களில் பட்டறைத் தொழிற் காலத்துக்கு நெடுங்காலம் முன்னரே, ஓரளவுக்குப் பட்டறைத் தொழிற் காலத்திலும் கூட, இக்கருவிகள் இயந்திரங்களாக மாற்றமடைகின்றன; ஆனால் உற்பத்தி முறையில் புரட்சி எதையும் ஏற்படுத்தாமலே இம்மாற்றம் நிகழ்கிறது.
நீராவி எஞ்சினே கூட, 17 ஆம் நூற்றாண்டின் இறுதியில் பட்டறைத் தொழிற் காலத்தில் அது கண்டுபிடிக்கப்பட்ட நேரத்தில் இருந்த நிலையிலும், 1780 வரை அது தொடர்ந்து இருந்து வந்த நிலையிலும் தொழிற் புரட்சி எதையும் உண்டாக்கி விடவில்லை. மாறாக இயந்திரங்கள் கண்டுபிடிக்கப்பட்டதுதான் நீராவி எஞ்சின்களின் வடிவத்தில் ஒரு புரட்சியை அவசியமாக்கியது. மனிதன் தனது உழைப்பின் இலக்குப் பொருள் மீது ஒரு கருவியைக் கொண்டு வேலை செய்வதற்குப் பதில் ஒரு இயந்திர சாதனத்தின் வெறும் இயக்குவிசையான பின், இயக்குவிசை மனிதத் தசையாக வடிவம் தரிப்பது முற்றிலும் தற்செயலானதே. இத்தகைய வடிவ மாற்றம், மனிதனால் மட்டுமே இயக்கப்படக் கூடிய முறையில் ஆரம்பத்தில் அமைக்கப்பட்ட இயங்கமைப்பில் பெரும் தொழில்நுட்ப மாற்றங்களை ஏற்படுத்துவதற்குத் தடை ஏதுமில்லை.
தொழிற் புரட்சியின் தொடக்க நிலையாக அமைகிற இயந்திரம் ஒரே ஒரு கருவியை மட்டும் கையாள்கிற தொழிலாளிக்குப் பதிலாக அது போன்ற அநேகக் கருவிகளை வைத்து வேலை செய்கிற, ஒரே இயக்கு விசையால் இயக்கி விடப்படுகிற இயங்கமைப்பைக் கொண்டு வருகிறது. இங்கே நாம் இயந்திரத்தைக் காண்கிறோம்; ஆனால் இயந்திர சாதன வழிப் பொருளுற்பத்தியின் ஆரம்ப காரணியாக மட்டுமே காண்கிறோம்.
இயந்திரத்தின் பருமனும், அதன் வேலைக் கருவிகளின் எண்ணிக்கையும் அதிகரிக்கையில், அதை ஓட்டுவதற்குப் பெரும் பருமனுள்ள இயங்கமைப்பு அவசியமாகிறது. இந்த இயங்கமைப்பின் நிலைம எதிர்வை (resistanace ) சமாளிக்கும் பொருட்டு, மனிதனிடமிருப்பதை விட வலுவான இயக்கு விசை அவசியமாகிறது; இதன்னியில் ஒரே சீரான தொடர்ச்சிய்யான இயக்கத்தை உண்டாக்க மனிதன் செப்பமற்ற சாதனமே ஆவான் என்பதையும் குறிப்பிட்டாக வேண்டும்.
அவனுக்கு பதில் இயற்கைச் சக்திகள் இச்செயலைச் செய்ய முடியும் என்பது தெளிவாகிறது.
காற்று மிகவும் நிலையற்றதாகவும், கட்டுப்படுத்த முடியாததாகவும் இருந்தது.
17 ஆம் நூற்றாண்டிலேயே, இரு ஜோடி ஏந்திரக் கற்களை ஒரே ஒரு நீர் விசைச் சக்கரத்தைக் கொண்டு இயக்குவதற்கு முயற்சிகள் செய்யப்பட்டன. ஆனால் சக்கர பல்லிணையின் கூடுதலான பருமனை இப்போது பற்றாக்குறையாகிவிட்ட நீர்ச்சக்தியால் சமாளிக்க முடியவில்லை.
இரட்டைச் செயல் நீராவி எஞ்சின் என்றழைக்கப்பட்ட வாட்டின் இரண்டாவது நீராவி எஞ்சின் கண்டுபிடிகப்பட்டப்பட்ட பிறகே ஒரு பிரதம இயக்கி (prime mover) கிடைத்தது. இவ்வியக்கி நிலக்கரியையும் நீரையும் உட்கொண்டு தன் சொந்த சக்தியை உண்டாக்கிக் கொள்ளக் கூடியது; இதன் விசை முழுக்க முழுக்க மனிதனின் கட்டுப்பாட்டிற்கு உட்பட்டது; இது இடம் பெயரக்கூடியது மட்டுமன்று; இடப் பெயற்சிக்கு சாதனமாகவும் அமையக் கூடியது; நீர் விசைச் சக்கரத்தைப் போல் கிராமவாசியாய் இராமல் நகரவாசியாய் இருக்கக் கூடியது.
முன்னதாக கைவினைஞர் தன் கருவியைக் கொண்டு செய்து வந்த, அல்லது தனித்தனியாகவோ ஒரு தொழில் அமைப்பின் உறுப்பினர்களாகவோ அநேகக் கைவினைஞர்கள் வரிசைப் படியாக செய்து வந்த பல்வேறு பணிகளையும் ஒரே இயந்திரம் செய்து, முழுமையான உற்பத்திப் பொருளைத் தயாரித்தளிக்கிறது.
பட்டறைத் தொழிலாக நடத்தப்பட்டபோது வரிசை தொடரான பணிகளாகப் பிரித்துச் செய்யப்பட்ட முழு நிகழ்முறையும், ஒன்றிணைந்த பல்வேறு கருவிகளை இயக்கும் ஒரே இயந்திரத்தால் நிறைவேற்றப்படுகிறது.
இங்கே அமைப்பு முழுவதிலும் ஒரு தொழில் நுட்ப ஓர்மை நிலவுகிறது; ஏனென்றால், எல்லா இயந்திரங்களுமே இடை நின்று செயலாற்றுகிற விசை செலுத்தும் இயங்கமைப்பின் வாயிலாகப் பொதுவான பிரதம இயக்கியின் துடிப்புகளிலிருந்து தமக்கு வேண்டிய உந்து விசையை ஏககாலத்திலும் சம அளவிலும் பெறுவனவாகும்.
பல கருவிகள் ஓர் இயந்திரத்தின் உறுப்புகளாக அமைவது போலவே, ஒரே வகைப்பட்ட பல இயந்திரங்கள் விசையூட்டும் இயங்கமைப்பின் உறுப்புகளாக அமைகின்றன.
இங்கே நாம் பட்டறைத் தொழிலின் சிறப்பியல்பான உழைப்புப் பிரிவினையின்மூலமான கூட்டு..வேலையை மீண்டும் காண்கிறோம்; ஆனால் இப்போது அது நுணுக்க இயந்திரங்களின் ஒன்றிணைப்பாக உள்ளது.
இப்போது தொழிலாளி நிகழ்முறைக்கேற்றவராய்த் தன்னை மாற்றிக் கொள்கிறார். முன்பெல்லாம் நிகழ்முறைதான் தொழிலாளர்களுக்கு ஏற்றதாகப் பட்டது. இந்த அகவய உழைப்புப் பிரிவினைத் தத்துவம் இயந்திர சாதன வழி உற்பத்தியில் மறைந்து போகிறது. இங்கே மொத்த நிகழ்முறையும், அதனளவிலேயே, அதாவது மனிதக் கரங்கள் அதனை நிறைவேற்றி வைக்கும் பிரச்சினையோடு தொடர்பில்லாமலே, புறவயமாக ஆராயப்படுகிறது.
கச்சாப் பொருள் முதல் கட்டத்திலிருந்து கடைசிக் கட்டத்துக்குச் செல்கையில் எந்த அளவுக்குக் குறைவாக இடைமறிக்கப் படுகிறதோ, அது ஒரு கட்டத்திலிருந்து இன்னொரு கட்டத்துக்குச் செல்வதைச் சாதிப்பது மனிதரின் கையாக இல்லாமல் இயந்திரங்களாகவே இருப்பது எந்த அளவுக்கு அதிகமோ, அந்த அளவுக்கு கூட்டு இயந்திரம் மேலும் மேலும் செப்பமடைகிறது.
பட்டறைத் தொழில் உற்பத்தி செய்து கொடுத்த இயந்திரங்களைக் கொண்டுதான் நவீனத் தொழில் துறை, அது ஆரம்பத்தில் பற்றிக் கொண்ட உற்பத்தித் துறைகளில் கைத்தொழில், பட்டறைத் தொழில் அமைப்புகளை ஒழித்துக் கட்டியது. எனவே, ஆலைத் தொழிலானது இயற்கைப் போக்கில் ஒரு போதாக் குறையான அடித்தளத்தின் மீது எழுந்தது. இவ்வமைப்பு குறிப்பிட்ட வளர்ச்சி நிலையை அடைந்த போது தயார் நிலையிலிருக்கிற இந்த அடித்தளத்தை பெயர்த்தெடுக்கவும், தனக்கெனத் தன் உற்பத்தி முறைகளுக்கு ஏற்றதோர் அடிப்படையைக் கட்டிக் கொள்ளவும் வேண்டியிருந்தது.
நவீன நீர்விசை அழுத்தி, நவீன விசைத்தறி, நவீன இழைச் சுத்திகரிப்புப் பொறி போன்ற இயந்திரங்களைப் பட்டறைத் தொழிலால் ஒருகாலும் வழங்கியிருக்கமுடியாது.
பஞ்சு நூற்பிலான புரட்சி பருத்தி இழையிலிருந்து கொட்டைகளை நீக்குவதற்கு ஜின் பொறியின் கண்டுபிடிப்பை அவசியமாக்கியது.
தொழில் துறை, வேளாண்மைத் துறை ஆகியவற்றின் உற்பத்தி முறைகளில் ஏற்பட்ட புரட்சி சமூகப் பொருளுற்பத்தி நிகழ்முறையின் பொது நிலைமகளில், அதாவது தொடர்பு மற்றும் போக்குவரத்துச் சாதனங்களில் ஒரு புரட்சியை அவசியமாக்கியது.
நவீனத் தொழில் துறை அதற்கே உரித்தான உற்பத்திக் கருவியாகிய இயந்திரத்துக்குத் தானே பொறுப்பேற்று, இயந்திரங்களைக் கொண்டே இயந்திரங்களை நிர்மாணிக்க வேண்டியிருந்தது. இதற்கு அத்தியாவசியத் தேவையாய் இருப்பது சிறிதும் குறைபாடின்றிக் கட்டுப்பாட்டுக்குட்பட்டு, அதே போது எவ்வளவு வேண்டுமானாலும் பலத்தைப் பிரயோகிக்க வல்லதாகிய பிரதம இயக்கிதான். இத்தேவையை நிறைவு செய்யக் கூடியதாய் ஏற்கனவே இருந்தது நீராவி எஞ்சின்.
இயந்திரங்களின் நுணுக்க உறுப்புகளுக்கு தேவையானவற்றை வடிவமைப்பதற்கு வழுக்குளிதாங்கி என்ற கருவி கண்டுபிடிக்கப்பட்டது. இக்கருவி சீக்கிரமே தானியங்கி ஆக்கப்பட்டதுடன் திருத்தியமைக்கப்பட்டு பிற கட்டுமான இயந்திரங்களுக்கும் பிரயோகிக்கப்படலாயிற்று. இது வெட்டுங்கருவியைப் பிடித்து, வேலைக்குரிய இரும்பு அல்லது வேறு பொருளின் மீது வழிப்படுத்திச் செல்லுவதன் மூலம், குறிப்பிட்ட வடிவத்தை வடிக்கிற மனிதக் கரத்துக்கே பதிலியாகிவிடுகிறது.
இப்போது இயந்திரங்களின் கட்டுமானத்தில் ஈடுபடுத்தப்படும் வேலைக் கருவியாக அமைகிற பகுதி இராட்சத உருவிலான கைக்கருவிகளே. துளையிடும் இயந்திரத்தின் வேலைப் பாகம் நீராவி எஞ்சினால் ஓட்டப்படும் இராட்சத துரப்பணமே. இயந்திரக் கடைசற் பொறி, சாதாரண கால்..கடைசற் பொறியின் இராட்சதப் பிரதியே. இழைப்பு இயந்திரம் இரும்பை இழைக்கும் தச்சரே. மெல்லொட்டுப் பலகைகளைச் சீவுகிற கருவி பகாசுர சவரக் கத்தியே.சுலபமாக இரும்பை வெட்டும் கத்தரிப்பு இயந்திரத்தின் கத்தரிக்கோலே. நீராவிச் சம்மட்டி சாதாரண சம்மட்டியைப் போன்றதே.
இயந்திர சாதன வடிவிலான உழைப்புக் கருவிகள் மனிதச் சக்திக்குப் பதிலாக இயற்கைச் சக்திகளை பிரயோகிப்பதையும், மாமூல் வழிமுறைக்குப் பதிலாக விஞ்ஞானத்தை உணர்வு பூர்வமாகப் பிரயோகிப்பதையும் அவசியமாக்குகின்றன.
பட்டறைத் தொழிலில் சமூக உழைப்பு நிகழ்முறையின் ஒழுங்கமைப்பு முற்றிலும் அகவயமானதே; இயந்திர சாதன அமைப்பின் உருவில், நவீனத் தொழில் துறை முற்றிலும் புறவயமான உற்பத்தி உயிரமைப்பைப் பெற்றுள்ளது; இதில், தொழிலாளி ஏற்கனவே இருந்து வரும் பொருளாயத அமைப்பின் ஒட்டுவாலாகி விடுகிறார்.
நவீனத் தொழில் துறையில், உழைப்பு நிகழ்முறையின் கூட்டு..வேலைத் தன்மையானது உழைப்புக் கருவியின் இயல்பினாலேயே விதிக்கப்படும் தொழில் நுட்ப அவசியமாகிவிடுகிறது.

No comments:
Post a Comment