உற்பத்திப் பொருளுக்கு இயந்திர சாதனம் பெயர்த்தளிக்கும் மதிப்பு
இயந்திரம் கருவியை இல்லாதொழித்து விடுவதில்லை. கைக்கருவியைக் கொண்டு அல்லாமல், கருவிகளைத் தானே கையாள்கிற இயந்திரத்தைக் கொண்டே தொழிலாளியை இப்போது மூலதனம் வேலை செய்ய வைக்கிறது. எனவே, மிகப் பெரும் பௌதிகச் சக்திகள், இயற்கை விஞ்ஞானங்கள் இரண்டையும் உற்பத்தி நிகழ்முறையுடன் இணைப்பதன் மூலம், நவீனத் தொழில் துறையானது உழைப்பின் உற்பத்தித் திறனை அசாதாரண அளவுக்கு உயர்த்துகிறது என்று எடுத்த எடுப்பிலேயே தெளிவாகிறது. ஆனால், மறு புறம், உற்பத்தித் திறனிலான இந்த அதிகரிப்புக்காக உழைப்பின் செலவீடு அதிகரிப்பதில்லை என்று அந்த அளவுக்கு தெளிவாவதில்லை.
மாறா..மூலதனத்தின் ஏனைய ஒவ்வொரு கூறையும் போலவே, இயந்திர சாதனமும் புதிய மதிப்பெதையும் படைப்பதில்லை.
இயந்திர சாதனம் எப்போதுமே உழைப்பு நிகழ்முறையில் முழுமொத்தமாக நுழைகிறது என்னும் அதே நேரத்தில், மதிப்பை உண்டாக்கும் நிக்ழ்முறையில் கொஞ்சம் கொஞ்சமாகவே நுழைகிறது. அது சராசரியாகத் தேய்மானத்தின் மூலம் இழப்பதை விட அதிகமான மதிப்பை ஒரு போதும் சேர்ப்பத்தில்லை.
முழுமொத்தமான கருவிக்கும் அதன் தினசரித் தேய்மானத்திற்கும் இடையிலான இந்த வேறுபாடு கைக்கருவியில் இருப்பதை விட இயந்திரத்தில் மிகப் பெரியதாகும்; ஏனெனில், அதிகம் நீடித்திருக்கக் கூடிய பொருளிலிருந்து தயாரிக்கப்ப்டும் இயந்திரத்துக்கு ஆயுள் அதிகம்; மேலும் அதன் பிரயோகம் கண்டிப்பான விஞ்ஞான விதிகளால் ஒழுங்கியக்கப்படுவதால், அதன் உறுப்புகளின் தேய்மானத்திலும், அது உட்கொள்கிற பொருட்களிலும் அதிக சிக்கனத்துக்கு வழி செய்யப்படுகிறது.
இயந்திரமானாலும் கைக்கருவியானாலும், அவை ஒவ்வொன்றும் தம் வேலையை, மனிதன் உதவியில்லாமல் இயற்கையால் அருளப்பட்ட சக்திகளைப் போலவே, இலவசமாகச் செய்கின்றன.
நவீன தொழில் துறையில்தான், மனிதன் தன் கடந்த கால உழைப்பின் உற்பத்திப் பொருளை இயற்கைச் சக்திகளைப் போல் இலவசமாக பெருவீதத்தில் வேலை செய்ய வைப்பதில் முதன் முதலாக வெற்றி கண்டான்.
பட்டறைத் தொழிலில் கட்டடங்கள் போன்ற சில பொதுப்படையான உற்பத்திக் காரணிகள் பொதுவில் நுகரப்படுவதன் மூலம் சிக்கனமாக்கப்படுகின்றன. எனவே உற்பத்திப் பொருளை இன்னும் மலிவாக்குகின்றன.
இயந்திர பொறிச் சட்ட அமைப்பு ஏராளமான பணிசெய் கருவிகளால் பொதுவில் நுகரப்படுகிறது மட்டுமல்லாமல், பிரதம இயக்கியும், விசைச் செலுத்தும் இயங்கமைப்பின் ஒரு பகுதியும் ஏராளமான பணிசெய் இயந்திரங்களால் பொதுவில் நுகரப்படுகின்றன.
இயந்திர சாதனத்தில் அடங்கியுள்ள உழைப்பு எவ்வளவு குறைவோ அவ்வளவு குறைவான மதிப்பை அது உற்பத்திப் பொருளுக்கு மாற்றுகிறது. அது எவ்வளவு குறைவான மதிப்பை இழக்கிறதோ அவ்வளவு அதிகமான உற்பத்தித் திறனுடையதாய் இருக்கிறது; அவ்வளவு அதிகமான அதன் சேவைகள் இயற்கைச் சக்திகளின் சேவைகளுக்கு ஒத்தவை ஆகின்றன. ஆனால் இயந்திர சாதனத்தால் இயந்திர சாதனத்தை உற்பத்தி செய்வது எவ்வளவுக்கு எவ்வளவு விரிவாகவும், பயன் திறனோடும் நடக்கிறதோ, இயந்திர சாதனத்தின் மதிப்பு அவ்வளவுக்கு அவ்வளவு குறைகிறது.
இயந்திர சாதனங்களின் உற்பத்திப் பொருளில் உழைப்புச் சாதனங்களால் விளையும் மதிப்பு ஒப்பளவில் அதிகரிக்கிறது; ஆனால் அறுதியாகக் குறைகிறது. அதன் அறுதி அளவு குறைகிறது.
ஓர் இயந்திரத்தை உற்பத்தி செய்வதற்குச் செலவாகிற உழைப்பின் அளவும், அந்த இயந்திரத்தின் பிரயோகத்தால் மிச்சப்படுத்தப்படும் உழைப்பின் அளவும் ஒன்றாக இருக்கும் போதெல்லாம், நிகழ்வது உழைப்பின் நிலை மாற்றமே தவிர வேறில்லை என்பதும், ஆதலால் சரக்கை உற்பத்தி செய்வதற்கு அவசியமாகும் மொத்த உழைப்பு குறைந்து விடவில்லை, அல்லது உழைப்பின் உற்பத்தித் திறன் அதிகமாகிவிடவில்லை என்பதும் தெளிவு.
ஓர் இயந்திரத்தில் செலவிடப்படும் உழைப்பும், ஆதலால உற்பத்திப் பொருளோடு சேர்க்கப்படுகிற அதன் மதிப்பின் பகுதியும் தொழிலாளி தன் கருவியைக் கொண்டு உற்பத்திப் பொருளோடு சேர்க்கிற மதிப்பை விட சிறியதாக இருக்கும் வரை, மிச்சப்படுத்தப்படும் உழைப்பில் இயந்திரத்துக்கு சாதகமான வேறுபாடு எப்பொதுமே உள்ளது. எனவே ஓர் இயந்திரத்தின் உற்பத்தித் திறன் அது நீக்கி விடுகிற மனித உழைப்புச் சக்தியைக் கொண்டு அளவிடப்படுகிறது.
ஓர் இயந்திரம் அதனால் நீக்கப்படும் உழைப்புச் சக்தியின் அளவுக்கே விலையுடையதாக இருந்தாலும், அதில் பொருள்வடிவாக்கப் பட்டுள்ள உழைப்பு, அப்போதும் கூட, அதனால் நீக்கப்படும் உயிருள்ள உழைப்பை விட மிகக் குறைவானதே.
நாள் வேலையை அவசிய..உழைப்பாகவும், உபரி-உழைப்பாகவும் பங்கிடும் பிரிவினை, வெவ்வேறு நாடுகளிலும், ஏன், ஒரே நாட்டிலேயே கூட வெவ்வேறு காலங்களிலும், வெவ்வேறு தொழிற் கிளைகளிலும் வேறுபடுகிறது.
தொழிலாளிக்குத் தரப்படும் கூலி ஒரு நேரத்தில் அவரது உழைப்புச் சக்தியின் மதிப்புக்குக் கீழாக வீழ்கிறது, இன்னொரு நேரத்தில் அதற்கு மேலாக உயர்கிறது. இக்காரணங்களால், இயந்திர சாதனத்தின் விலைக்கும் அந்த இயந்திர சாதனத்தால் நீக்கப்படும் உழைப்புச் சக்தியின் விலைக்கும் இடையிலான வேறுபாடு மிக அதிகமாக மாறுபடுவது சாத்தியமே.
No comments:
Post a Comment