உழைப்பு நிகழ் முறை முற்றிலும் தனிப்பட்ட முறையிலானதாய் உள்ள வரை, தனியொரு உழைப்பாளி -- பிற்பாடு தனித்தனியாகிற -- எல்லாப் பணிகளையும் தன்னில் ஒன்றுபடுத்துகிறார்.
இயற்கையான உடம்பில் மூளையும் கையும் ஒன்றுக்கொன்று பணிவிடை செய்வது போல, உழைப்பு நிகழ்முறை கையுழைப்பை மூளையுழைப்புடன் ஒன்றுபடுத்துகிறது.
உற்பத்திப் பண்டமானது தனியாளின் நேரடி உற்பத்தியாக இல்லாது போய், கூட்டுத் தொழிலாளியால் பொதுவில் உற்பத்தி செய்யப்படும் போது சமுதாய உற்பத்தியாகி விடுகிறது. உற்பத்தி திறனுள்ள விதத்தில் உழைத்திட வேண்டுமானால், நேரிடையாகக் கையுழைப்பில் ஈடுபட இனியும் அவசியமில்லை; கூட்டுத் தொழிலாளியின் அங்கமாய் அமைந்து, அந்த கூட்டின் சார்நிலைப் பணிகளில் ஒன்றை நிறைவேற்றினாலே போதும். முழு மொத்தமாய் பரிசீலிக்கும்போது கூட்டுத் தொழிலாளிக்கு பொருந்தும் இந்த விளக்கம் இந்தக் கூட்டின் ஒவ்வொரு உறுப்பினரையும் தனித்தனியாக எடுத்துக் கொள்ளும் போது பொருந்துவதில்லை.
முதலாளித்துவப் பொருளுற்பத்தி என்பது சரக்குகளின் உற்பத்தி மட்டுமல்ல; சாராம்சத்தில் அது உபரி-மதிப்பின் உற்பத்தியாகும். முதலாளிக்காக உபரி-மதிப்பை உற்பத்தி செய்து, மூலதனத்தின் தற்பெருக்கத்துக்காக இவ்விதம் வேலை செய்கிற தொழிலாளி மட்டுமே திறனுடைத் தொழிலாளி ஆவார்.
திறனுடைத் தொழிலாளி என்ற கருத்து, வேலைக்கும் பயனுள்ள விளைவுக்கும் இடையிலான, உழைப்பாளிக்கும் உழைப்பின் உற்பத்திப் பொருளுக்கும் இடையிலான உறவை மட்டுமின்றி, ஒரு குறிப்பான, சமூக வழிப்பட்ட உற்பத்தி உறவையும் -- வரலாற்று வழியில் பிறந்திருப்பதும், உழைப்பாளியை உபரி-மதிப்பை படைக்கும் நேரிடைச் சாதனமாக முத்திரையிடுவதுமான உறவை -- குறிக்கிறது.
தொழிலாளி தனது உழைப்புச் சக்தியின் மதிப்புக்கு ஈடான சமதையை மட்டும் உற்பத்தி செய்வதற்கும் அப்பால் வேலை-நாளை நீட்டி, அந்த உபரி-உழைப்பை மூலதனம் தனதாக்கிக் கொள்வதுதான் அறுதி உபரி..மதிப்பின் உற்பத்தி. அது முதலாளித்துவ அமைப்பின் பொதுவான அடிநிலையாகவும், ஒப்பீட்டு..உபரி மதிப்பின் உற்பத்திக்கான தொடக்க நிலையாகவும் அமைகிறது.
ஒப்பீட்டு உபரி-மதிப்பின் உற்பத்தி உழைப்பின் தொழில்நுட்ப நிகழ்முறைகளையும், சமுதாயத்தின் இயைபையும் அடியோடு புரட்சிகரமாக மாற்றியமைக்கிறது. உழைப்பு மூலதனத்துக்கு வடிவ அளவில் கீழ்ப்படுவதன் (formal subjection of labour to capital ) அடிப்படையில் தன்னியல்பாய் உருவாகி வளர்கிறது. இந்த வளர்ச்சியின் போது, உழைப்பு மூலதனத்துக்கு வடிவ அளவில் மட்டும் கீழ்ப்படுவதற்கு பதிலாய் மெய்யாகவே கீழ்ப்படலாகிறது.
இதற்கு முன்பான இடைநிலையில் கடுவட்டி மூலதனம் அல்லது வணிக மூலதனம் ஒட்டுண்ணி போல் உற்பத்தியாளர்களை உறிஞ்சுகிறது. சில இடைநிலை வடிவங்கள் நவீனத் தொழில் துறையின் பின்னணியில் -- முற்றிலும் மாறிப்போன முக லட்சணத்துடன்தான் என்றாலும் -- இங்குமங்குமாய் தலைத் தூக்குகின்றன.
திட்டவட்டமான முதலாளித்துவப் பொருளுற்பத்தி முறை ஓர் உற்பத்திக் கிளை முழுவதையும் வெற்றி கொண்டதுமே, ஒப்பீட்டு உபரி-மதிப்பை உற்பத்தி செய்வதற்கான சாதனமாக மட்டும் இருந்த நிலை மறைகிறது; எல்லா முக்கிய கிளைகளையும் அது வெற்றி கொள்ளும் போது, இந்நிலை மறைந்தே போகிறது. இப்போது அது பொதுவானதும், சமுதாயத்தில் மேலோங்கியதுமான பொருளுற்பத்தி வடிவமாகி விடுகிறது.
ஒரு நோக்கு நிலையில், அறுதி உபரி-மதிப்புக்கும் ஒப்பீட்டு உபரி..மதிப்புக்கும் இடையிலான வேறுபாடு என்பது வெறும் மாயத் தோற்றமே எனலாம்.
உழைப்பின் உற்பத்தித் திறனும், அதன் இயல்பான மும்முரமும் குறிப்பிட்டதாய் இருக்க, வேலை..நாளை உள்ளபடியே நீட்டுவதன் மூலம் மட்டுமே உபரி-மதிப்பு விகிதத்தை உயர்த்தமுடியும்; மறுபுறம், வேலை..நாளின் கால அளவு குறிப்பிட்டதாய் இருக்க, வேலை..நாளின் கூறுகளது -- அதாவது அவசிய உழைப்பினதும், உபரி..உழைப்பினதும் -- ஒப்பீட்டு பருமன்களிலான மாற்றத்தின் மூலம் மட்டுமே உபரி-மதிப்பு வீதத்தை உயர்த்த முடியும்; கூலியானது உழைப்புச் சக்தியின் மதிப்புக்கும் கீழே வீழாதிருக்க வேண்டுமானால், உழைப்பின் உற்பத்தித் திறனிலோ மும்முரத்திலோ மாற்றம் செய்தால்தான் இந்த ஒப்பீட்டு பருமன்களை மாற்ற முடியும்.
தொழிலாளிக்கு அவரது நேரம் முழுவதும் அவருக்கென்றும் அவரது இனத்துக்கென்றும் அவசிய வாழ்வுச் சாதனங்களை உற்பத்தி செய்து கொள்வதற்குத் தேவைப்படுமானால், மற்றவர்களுக்கு இலவசமாக வேலை செய்ய அவருக்கு நேரம் இருக்காது. பெரும் சொத்துடையாளர் வர்க்கமே இருக்காது.
ஒருவனின் உபரி-உழைப்பு பிறிதொருவனின் வாழ்க்கைத் தேவையாகிற நிலைமை பிறப்பது, மனிதர்கள் மிருகங்களின் தரத்துக்கு மேலாக உயர்ந்த பிறகுதான்; எனவே, அவர்களது உழைப்பு ஓரளவுக்கு சமுதாய உழைப்பான பிறகுதான்.
தேவைகள் அவற்றை நிறைவு செய்யும் சாதனங்களோடும் அச்சாதனங்களைக் கொண்டும் வளர்கிறவை. ஆரம்பகாலத்தில், சமுதாயத்தில் பிறரது உழைப்பை கொண்டு வாழும் பிரிவு, நேரடி உற்பத்தியாளரின் பெருந்திரளோடு ஒப்பிடுமிடத்து, மிகச் சிறியதே. உழைப்பின் உற்பத்தித் திறனிலான முன்னேற்றத்தோடு கூடவே, சமுதாயத்தின் அந்த சிறு பிரிவு அறுதியாகவும், ஒப்பளவிலும் அதிகமாகிறது.
கட்டாயம் நிறைவு செய்தாக வேண்டிய இயற்கைத் தேவைகளின் தொகை எவ்வளவுக்கு எவ்வளவு சொற்பமோ, இயற்கையான மண் வளமும்சாதகமான தட்பவெப்ப நிலைமைகளும் எவ்வள்வுக்கெவ்வளவு அதிகமோ, உற்பத்தியாளரின் பராமரிப்புக்கும் மறுவுற்பத்திக்கும் அவசியமான உழைப்பு நேரம் அவ்வளவுக்கு அவ்வளவு குறைவாகும். எனவே அவரது உழைப்பில் அவருக்கானது போக பிறருக்கென எஞ்சுவது அவ்வளவுக்கு அவ்வளவு அதிகமாயிருக்க முடியும்.
புராதன எகிப்தின் பிரம்மாண்டமான வடிவமைப்புகள், அதன் மக்கள் தொகையினது அளவின் விளைவு என்பதைக் காட்டிலும், அந்த மக்கள் தொகையில் இலவசமாக இவ்வேலைக்கு தங்குதடையின்றிக் கிடைத்த பெரும் விகிதத்தின் விளைவென்றே சொல்ல வேண்டும். அவசிய..உழைப்பு நேரம் குறைவதற்கேற்ப உபரி..உழைப்பில் அதிகமாய் ஈடுபடமுடிவது எப்படி தனிப்பட்ட உழைப்பாளிக்குப் பொருந்துமோ, அவ்வாறே உழைக்கும் மக்கள் திரளுக்கும் பொருந்தும். அவர்களில் அவசிய வாழ்வுச் சாதனங்களிம் உற்பத்திக்குத் தேவைப்படும் பகுதியினர் எவ்வளவு குறைவோ அவ்வளவு அதிகமான மற்றொரு பகுதியினரை வேறு வேலையில் ஈடுபடச் செய்யலாம்.
முதலாளித்துவப் பொருளுற்பத்தி கோலோச்சுகையில் மற்றெல்லா நிலைமைகளும் மாறாதிருக்க, வேலை நாளின் கால அளவு குறிப்பிட்டதாய் இருக்க உபரி-உழைப்பின் அளவு உழைப்பின் பௌதிக நிலைமைகளுக்கேற்ப, குறிப்பாக மண் வளத்துக்கு ஏற்ப மாறுபடும்.
இந்த பொருளுற்பத்தி முறை இயற்கையை மனிதன் ஆள்வதை அடிப்படையாகக் கொண்டதாகும்.
மூலதனத்தின் தாய் நாடாக இருப்பது மித வெப்ப மண்டலமே அன்றி பூத்துக் குலுங்கும் வெப்பமண்டலங்கள் அல்ல.
இந்தியாவிலும் பாரசீகத்திலும் செயற்கையாய் அமைக்கப்பட்ட பாசனக் கால்வாய்கள் நிலத்துக்கு அவசியமான நீரை அளிப்பதுடன், மலைகளிலிருந்து கிடைக்கும் வண்டல் மண் உருவில் தாது உரங்களையும் அந்நீருடன் சேர்த்துக் கொண்டுவந்து கொடுக்கின்றன.
சாதகமான இயற்கை நிலைமைகளால் மட்டும் எதார்த்தத்தில் உபரி-உழைப்பும் ஆதலால் உபரி-மதிப்பு மற்றும் உபரி-உற்பத்திப் பொருளும் கிடைத்து விடுவதில்லை; இவை கிடைப்பதற்கான சாத்தியப்பாடுதான் உண்டாகிறது. உழைப்பின் இயற்கை நிலைமைகளிலான வேறுபாட்டின் பயனாய், ஒரே அளவிலான உழைப்பு வெவ்வேறு நாடுகளில் வெவ்வேறான தேவைகளின் திரளகளை நிறைவு செய்கிறது. ஆதலால் ஏனைய அமிசங்கள் ஒத்திருக்கும் நிலைமைகளில் அவசிய..உழைப்பு நேரம் வேறுபடுகிறது.
தொழிலாளி உபரி-உழைப்பின் வடிவில் விலை கொடுத்தே தனது ஜீவனத்துக்காக உழைக்கிற உரிமையை வாங்க வேண்டியிருக்கும்.
தொழிலாளி வாரந்தோறும் ஆறு நாள் வேலை செய்ய வேண்டியிருப்பதற்கும், ஐந்து நாள் உபரி..உழைப்பைத் தர வேண்டியிருப்பதற்கும் இயற்கையின் வண்மை விளக்கமாவதில்லை. அவரது அவசிய..உழைப்பு நேரம் வாரத்துக்கு ஒரு நாளாக வரம்புக்குட்படுவதற்கே அது விளக்கமாகும்.
உழைப்பின் சமூக உற்பத்தித் திறன் -- வரலாற்று வழியில் வளர்ச்சியடைந்த இந்த சமூக உற்பத்தித் திறன் -- மட்டுமல்லாமல், அதன் இயற்கையான உற்பத்தித் திறனும் அந்த உழைப்பு இணைக்கப் பெறும் மூலதனத்தின் உற்பத்தித் திறனாய்ப் பார்வைக்குத் தெரிகிறது.
ரிகார்டோ ஒருபோதும் உபரி..மதிப்பின் மூலாதாரம் (origin of surplus-value ) குறித்துக் கவலைப்படவில்லை. அவர் அதை முதலாளித்துவப் பொருளுற்பத்தி முறையில் உள்ளார்ந்த ஒன்றெனக் கருதுகிறார்; அவரது பார்வையில் இவ்வுற்பத்தி முறையே சமுதாயப் பொறுளுற்பத்தியின் இயற்கை வடிவமாகும்.
உழைப்பின் உற்பத்தித் திறனே இலாபத்தின் (உபரி-மதிப்பின் எனக் கொள்க) மூலகாரணமென்று அவரது மரபினர் வெளிப்படையாகவே பறைசாற்றினர். எப்படியும் இது, வணிக ஊக்கவாதிகளோடு ஒப்பிடுங்கால் முன்னேற்றமே.
உபரி-மதிப்பின் மூலாதாரம் பற்றிய பிரச்சினையை ஆழக் கிளறுவது ஆபத்தாகவே முடியும் என்பதை இந்த முதலாளித்துவப் பொருளாதார அறிஞர்கள் சரியாகவே உள்ளூர உணர்ந்திருக்கிறார்கள்.

நல்ல முயற்சி வாழ்த்துக்கள். ஒரு சின்ன ஆலோசனை தவறிருந்தால் திருத்தவும். எனக்கென்னவோ பல இடங்களில் இன்னும் நன்றாக புரியும்படியாக எழுதலாம் என்று தோன்றுகிறது. உதாரணத்திற்கு
ReplyDelete"உற்பத்திப் பண்டமானது தனியாளின் நேரடி உற்பத்தியாக இல்லாது போய், கூட்டுத் தொழிலாளியால் பொதுவில் உற்பத்தி செய்யப்படும் போது சமுதாய உற்பத்தியாகி விடுகிறது." என்றிருப்பதை "உற்பத்திப் பண்டமானது தனி ஒருவரின் நேரடி உற்பத்தியாக இல்லாமல், கூட்டாகத் தொழிலாளிகளால் பொதுவில் செய்யப்படும் உற்பத்தியாக இருக்கும் பொழுது சமுதாய உற்பத்தியாகி விடுகிறது." என்று எழுதி படிக்கும் பொழுது இன்னும் எளிமையாகவும் தெளிவாகவும் புரிவதாகத் தோன்றுகிறது.
மேலே குறிப்பிட்டுள்ளபடி நான் தோழர் தியாகுவின் மொழி பெயர்ப்பிலிருந்துந்து வரிகளை எடுத்து சாராத்தை மட்டும் தந்துள்ளேன். எதையும் மாற்றாமல் தந்துள்ளேன். பொருள் மாறிவிடக்கூடாது என்பதில் பெரும் கவனம் செலுத்தியுள்ளேன். அவ்வளவே.
Delete